வெள்ளி, 26 செப்டம்பர், 2014

மோடிக்கு அமெரிக்க நியு யார்க் நீதிமன்றம் சம்மன் ! குஜராத் வன்முறை என்கவுண்டர் குற்றச்சாட்டு விசாரணை ?

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறை குறித்த வழக்கில் சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் சிக்கி உயிருடன் மீண்ட இரண்டு பேர், நியூயார்க்கின் தெற்கு மாகாணத்தில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அந்த வன்முறைக்கு அப்போது முதல்வராக இருந்த மோடிதான் பொறுப்பு என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக இன்னும் 21 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறி மோடிக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக