சனி, 27 செப்டம்பர், 2014

ஜெயலலிதா மீதான தீர்ப்பு வாசித்துக்கொண்டிருக்கிறார் நீதிபதி ! விடுதலையாக வேண்டி அதிமுகவினர் தெப்பகுளத்தில் இறங்கி வழிபாடு !

தமிழக முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்படுகிறது.
இதில் நல்ல தீர்ப்பு வர வேண்டும் என மாநிலம் முழுவதிலும் உள்ள அ.தி.மு.க.வினர் கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று குமரி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், பால்வள தலைவருமான எஸ்.ஏ. அசோகன் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ததோடு கோவில் தெப்பக்குளத்தில் இறங்கி நூதன வழிபாட்டிலும் ஈடுபட்டார்.
அவருடன் நகர இளைஞரணி செயலாளர் பூங்கா கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் நல்லபெருமாள், சுசீந்திரம் பேரவை செயலாளர் கணபதி மற்றும் செல்வகணேஷ், வரதன், சபீக், வேல் ஆகிய 7 பேர் உடன் இருந்தனர்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக