ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை விட சசிகலா மீதான உணர்ச்சி போராட்டதிற்குதான் முக்கியம் கொடுக்கிறார்.நேற்று வரை ஜெயா வேறு அல்ல சசி வேறு அல்ல ஆனால் இன்றோ சசியோடு தொடர்புள்ள எல்லோரையும் சித்ரவதை செய்வார் போல் தெரிகிறது.ம்ம்ம் இதெல்லாம் ஒரு கட்சி இதற்கு ஒரு ஆட்சி பொறுப்பு இந்த கட்சிக்கெல்லாம் போயி ஒட்டு போட்ட மகா ஜனங்கள் ...விளங்கிடும்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் தம்பி திவாகரன் மீது கொலை மிரட்டல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பரவாக்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் திவாகரனை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் நெருங்கிய தோழியான சசிகலாவை திடீரென கட்சியை விட்டும், போயஸ் கார்டனை விட்டும் வெளியேற்றினார் ஜெயலலிதா. இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரன் மீது ரிஷியூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்.