சனி, 21 ஜனவரி, 2012

தொழிலார்களின் பாகெட்டுக்குள் கைவைக்கும் ராமதாஸ்

பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும், தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' எனராமதாஸ் அழுதுள்ளார் .தானே' புயல் தாக்கியவர்களைப் பார்த்து, "வெறும் கை' குலுக்கி, ஆறுதல் வார்த்தைகளை மட்டும் சொல்லிவிட்டு திரும்பிய, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியத்தை நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
"தானே' புயல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில், தமிழக அரசிடம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க., - தே.மு.தி.க., வரிசையில், இந்த பட்டியலில், பா.ம.க.,வும் தன்னை நூதனமாக இணைத்துக் கொண்டுள்ளது. பா.ம.க., நிறுவனரோ, அவரது கட்சியோ, இதற்காக பாக்கெட்டை திறக்கவில்லை. அந்த கட்சியின் தொழிற்சங்க அமைப்பான, பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்கள், தங்கள் ஒருநாள் ஊதியத்தை அளிப்பார்கள் என்று, ராமதாஸ் நேற்று அறிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "புயல் பாதிப்புகளை முழுமையாக சரிசெய்ய, எத்தனை ஆயிரம் கோடி நிதியிருந்தாலும் போதுமானதல்ல. தமிழக அரசு, 5,000 கோடி நிதியை கேட்டது; ஆனால், மத்திய அரசு, 500 கோடி நிதி வழங்கியுள்ளது. மத்திய குழு ஆய்வுக்கு பிறகும், இரண்டாம் கட்ட நிதி உதவியை மத்திய அரசு வழங்காதது கண்டிக்கத்தக்கது' என்று தெரிவித்துள்ளார். மேலும், "இந்த நெருக்கடியான நேரத்தில், தமிழக அரசின் முயற்சிக்கு, அனைவரும் துணை நிற்க வேண்டும். அந்த வகையில், பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும், தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

- நமது சிறப்பு நிருபர் -
தொழிலார்களின்  பாகெட்டுக்குள் கைவைக்கும் ராமதாஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக