வெள்ளி, 20 ஜனவரி, 2012

சிபிஐ விசாரணையில் தொய்வு..மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு:

புது தில்லி, ஜன. 19:÷வெளிநாடுகளிலிருந்து தகவல்களைத் திரட்டுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி நெட்வொர்க் உரிமையாளர் கலாநிதி மாறன் ஆகியோர் மீதான வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, மலேசியாவின் மாக்ஸிஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான குளோபல் கம்யூனிகேஷன்ஸ் சர்வீசஸ் ஹோல்டிங் லிமிடெட் மூலமாக ஏர்செல்லின் (ரூ. 7,880 கோடி மதிப்புள்ள) 99.3 சதவீத பங்குகள் வாங்கப்பட்டன.  இது தொடர்பாக புகார் தெரிவித்த ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன், தனது நிறுவனத்தை மாக்ஸிஸýக்கு விற்பனை செய்யுமாறு மாறன் சகோதரர்கள் மிரட்டிக் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்தார். மேலும், அதைத் தொடர்ந்து மாக்ஸிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணன், கலாநிதி மாறனுக்குச் சொந்தமான நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.  அனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான ஆஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சுமார் ரு. 700 கோடி வரை சன் டிவி நெட்வொர்க்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  ÷இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அனந்த கிருஷ்ணன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.  இந்த வழக்குத் தொடர்பாக மலேசியாவிலும், மோரீஷசிலும் தகவல்களைத் திரட்டுவதிலும், ஆவணங்களைப் பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  ÷இதையடுத்து பணம் முதலீடு செய்யப்பட்டது தொடர்பான தகவல்களைத் தூதரகம் வழியாக பெற சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக