திங்கள், 16 ஜனவரி, 2012

ஷகிலா: நான் பீர் குடிச்சேனா... சேச்சே.. அப்படின்னா என்னன்னே தெரியா

ஆசாமி படத்தில் நான் பீர் குடித்ததாக வந்தது வெறும் வதந்திதான். உண்மையில் அந்த டேஸ்ட் எப்படி இருக்கும் என்றே தெரியாது, என்று நடிகை ஷகிலா கூறியுள்ளார்.
பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலீ. இவர் ஏராளமான ஆபாசப்படங்களில் நடித்ததாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இப்போது ஆபாசப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு, நல்ல படங்களில் நகைச்சுவை கலந்த வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆசாமி என்ற படத்தில் ஷகிலா நடித்து வருகிறார். இதில் பீர் குடித்து குறி சொல்லும் போலி சாமியார் கேரக்டரில் வருகிறாராம்.
ஷகிலாவுக்கு நிஜமாகவே பீர் குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும் படப்பிடிப்பில் இயக்குரிடம் தினமும் பீர் வாங்கித் தரும்படி தொல்லை செய்ததாகவும் செய்தி பரவியது. அத்துடன் விஜயகாந்த் கட்சி பிரமுகர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்துவதாகவும் கூறப்பட்டது.

தன்னைப் பற்றிய இத்தகைய செய்திகள் குறித்து ஷகிலா கூறுகையில், "ஆசாமி படத்தில் நடித்த போது இயக்குனரிடம் பீர் வாங்கித் தரும்படி நான் கேட்கவில்லை. என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளது. எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. பீர் டேஸ்ட் எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. ஆசாமி படத்தில் வில்லி கேரக்டரில் வருகிறேன். அது எனக்கு பிடித்துள்ளது.

படத்தில் காட்சிக்காக பீர் பாட்டிலை கையில் ஏந்தியது மட்டும்தான் நான் செய்தது.

நான் அரசியல் பிரமுகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்தியும் வதந்திதான். இதுவரை எனக்கு திருமணம் நடக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன்.

முதுமலைக்கு சுற்றுலா சென்றபோது கோவையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தித்தேன். அவர் எனக்கு நெருக்கமான நண்பராக இருக்கிறார். ஆனால் இது எந்த வகை உறவு என்று சொல்ல முடியாது. அவர் எனக்கு நண்பர், அவ்வளவுதான்,' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக