ஞாயிறு, 15 ஜனவரி, 2012

நண்பன் படத்துக்கு எதிரி’யான திரையரங்கம்!


           பொங்கல் திருவிழாவை ஒட்டி விஜய் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவானது ஹிந்தி 'த்ரீ இடியட்ஸ்' ரீமேக்கான 'நண்பன்',  இரண்டு நாட்கள் முன்னதாகவே நாடு முழுவதும் திரையிடப்பட்டது. சேலத்திலும் கிட்டத்தட்ட ஒன்பது திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இதில் ஐந்து திரையரங்குகள் ரிலைன்சின் பிக் சினிமா திரையரங்கம்.
இதுக்கப்புறம் ரசிகர் மன்றம் பேனர்,விளம்பர சுவரொட்டி போன்ற செலவுகள் காரணமா கொஞ்சம் கூடுதல் விலை வச்சு விக்கணும் ஆனா தியேட்டர்லயே அதிக வெலை என்பதால நிறைய பேரு இந்த முறை டிக்கெட் எடுக்கலை.' என்ற ரசிகர் மன்றத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி மேலும் தொடர்ந்து,' இதை எல்லாம் தாண்டி லைன்மேடுல இருக்குற ரிலைன்சின் கே.எஸ் பிக் சினிமா தியேட்டர்ல ஏ.சியே இல்லை. ஒவ்வுறு சீட் றோவுக்கும் ஒவ்வுறு டேபிள் பேன்(fan ) போட்டுடாங்க அப்புறம் ஸ்பீக்கர் வேலை செய்யலை கடைசி வரை ஒழுங்காவே டைலாக் கேட்க  முடியாம ரசிகர்கள் ரொம்ப அவதிபட்டாங்க இதனால முதல் நாளே பலர் எழுந்து போய்ட்டாங்க" என்றார் ஆதங்கத்தோடு.

முதல் நாளே இதனால் சில திரையரங்குகளில் காத்து வாங்க கடுப்பான சேலம் விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் திரையரங்கு மேலாளரிடம் முறையிட 'எங்களால் ஒன்னும் செய்ய முடியாது' என கையை விரித்தனர்.இதனால் மேலும் கோபமுற்ற அவர் ,'நான் கலக்டரிடம் முறையிடுவேன்' என சத்தம் போட தொடங்கிவிட்டார். அதன்பின் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஷயம் போனது அவர் விநியோகஸ்தர்களிடம் பேசி ,திரையரங்கு மேலாளர்களிடம் பேசி இறுதியாக மாலை கட்டணத்தை குறைத்து ரிலையன்ஸ் திரையரங்கம்.

அதிரடி காட்சிகளே இல்லாத 'நண்பன்' படத்தை பல அதிரடிகள் நிகழ்த்தித்தான் பார்க்க வேண்டியதாய் போய்விட்டது என்கின்றனர் ரசிகர் மன்றத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக