வெள்ளி, 20 ஜனவரி, 2012

கலாம் இன்று இலங்கை பயணம்: மும்மொழி கல்வித் திட்டத்தை துவக்கி வைக்கிறார்

Abdul Kalam
சென்னை: இலங்கையில் மும்மொழிக் கல்வித் திட்டத்தை துவக்கி வைக்க முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று கொழும்பு செல்கிறார்.
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அதிபர் ராஜபக்சே, உலக நாடுகளை ஏமாற்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், இலங்கையில் மும்மொழி கல்வித் திட்டத்தை ராஜபக்சே அமல்படுத்த உள்ளார். இதற்கான தொடக்க விழா நாளை மாலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு, ராஜபக்சேயுடன் சேர்ந்து மும்மொழி கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளார்.
திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் கலாம் அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பேசுகிறார். அதே போல கொழும்பு, மொரதுவா ஆகிய பல்கலைக்கழகங்களிலும் அவர் உரையாற்றுகிறார்.

மேலும் இலங்கை விஞ்ஞானிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். தனது 4 நாள் இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்கிழமை அவர் இந்தியா திரும்புவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக