சனி, 21 ஜனவரி, 2012

ஜல்லிக்கட்டு.. தாழ்த்தப்பட்டவர்களைவிட மாடுகள் மேன்மையானவை???

ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?


தமிழர்களின் வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டை ஆதிக்க சாதிக்காரர்கள்,  ஏன் எதிர்க்கிறார்கள்?
-க. மாயாண்டி, மதுரை.
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு சாராயம் குடிக்க வைப்பது, கண்ணில் மிளாகய் பொடி தூவுவது, வாலை கத்தியால் குத்துவது போன்ற கொடுமைகள் நடக்கிறது.
மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்பதினால்தான் அதை சைவ ஜாதி அறிவாளிகள் எதிர்க்கிறார்கள்.
ஆனால், இவைகள் எல்லாவற்றையும்விட இந்த ஜல்லிக்கட்டில் ஈடுபடும் இளைஞர்கள் உடல்ரீதியாக மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். உயிரையும் இழக்கிறார்கள். ஆகவே, அது தடை செய்யப்படுவதில் தவறு இல்லை.

மற்றப்படி, தமிழர்களின் ‘வீர’ விளையாட்டு, என்று சொல்லப்படுகிற ஜல்லிக்கட்டில், எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை என்பது இவை எல்லாவற்றையும்விட மோசமானது.
காரணம், ஒரு ஜாதி இந்துவின் மாட்டை, தாழ்த்தப்பட்டவர் அடக்கிவிட்டால், அதை அவமானமாக கருதுவார்கள், ஜாதி இந்துக்கள்.
ஏனென்றால், ‘தாழ்த்தப்பட்ட மக்களைவிடவும் தங்கள் மாடுகள் மேன்மையானது’ என்கிற எண்ணம் ஒவ்வொரு ஜாதி இந்துக்குள்ளும் இருக்கிறது.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக