செவ்வாய், 17 ஜனவரி, 2012

சூப்பர் ஹிட்டான நண்பன்!3 இடியட்ஸ் re make

அதிரடி ஆக்ஷன் இல்லாமல், டாடா சுமோக்கள் பறக்காமல், பிரமாண்ட கிராபிக்ஸ்கள் இல்லாமல் விஜய்-ஷங்கரின் கூட்டணியில் நல்ல கதையுடன் வந்திருக்கும் நண்பன், 2012ம் ஆண்டின் முதல் மெகா ஹிட் தமிழ்ப் படம் என்ற பெயரை வாங்கியுள்ளது.
வசூலில் அள்ளிக் குவித்து வரும் இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுந்துள்ளது.
3 இடியட்ஸ் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அப்படியே சீனுக்கு சீன் மாற்றாமல் எடுத்திருந்தாலும், ஷங்கர் தனது வேலையைக் காட்டி தமிழுக்கு ஏற்ற மாதிரி ட்யூன் செய்து அசத்தியிருக்கிறார்.

விஜய் ஜீவா ஸ்ரீகாந்துக்கும் இது மிக மிக வித்தியாசமான அனுபவமாகவே இருந்திருக்கும். எதிரிகளை நோக்கி சுட்டு விரலை நீக்கி அடிக்குரலில் கத்தாமல், பார்வையாலேயே எதிரியை துளைக்காமல், மிக யதார்த்தமான பக்கத்து வீட்டு பையன்கள் மாதிரியான  கேரக்டர்கள்.  கேரக்டர்களை மிக அழகாக உள்வாங்கி பின்னி எடுத்திருக்கிறார்.
ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் என அனைவருமே ஒரு டீமாக இறங்கி, அந்தந்த கேரக்டர்களாகவே வாழ்ந்து காட்டியுள்ளனர். ஒரு ஸ்ட்ரெய்ட் என்டர்டெயின்மெண்ட் என்று அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கொள்ளையடித்துள்ள இந்தப் படம், வசூலிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை.

தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் படம் ரிலீசான இடமெல்லாம் சீட்கள் நிரம்பி வழிகிறதாம். இதனால் ரிலீசான 4 நாட்களிலேயே படத்தைத் தயாரித்த ஜெமின் சர்க்யூட் தயாரிப்பாளர்களுக்கு வசூல் மழை.

படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வெளியாகி வருவதால், ரிபீட் ஆடியன்ஸோடு, பெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ளது இந்தப் படம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக