சனி, 21 ஜனவரி, 2012

சுப்பிரமணியசாமி மீது நடவடிக்கை சோனியா, ப.சிதம்பரத்துக்கு எதிராக அவதூறு

  புதுடெல்லி : ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது சோனியா காந்தி, ப.சிதம்பரத்துக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்திய சுப்பிரமணிய சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:உச்ச நீதிமன்றத்திலும் விசாரணை நீதிமன்றத்திலும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ÔÔ2ஜி ஸ்பெக்ட்ரம்& மறைக்கப்பட்ட உண்மைகள்ÕÕ என்ற தலைப்பில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி பேசியுள்ளார். அப்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சோனியா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது அவதூறு பரப்பும் வகையில் சாமி பேசினார். அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.பி.ராவ், சுப்பிரமணிய சாமியின் பேச்சு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தார். சுப்பிரமணிய சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். இது பற்றி பரிசீலனை செய்ய நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரணை நிலவரம் குறித்து சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக