வியாழன், 19 ஜனவரி, 2012

முற்றிலும் மாறுபட்ட அஜித்!

பில்லா-2 படத்திற்கு பின்னர் அஜித், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கிறார். பில்லா படத்தின் முதல் பாகம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. பில்லா-2 படத்தில் விஷ்ணுவர்தன் இல்லாததற்கு கருத்து வேறுபாடுகள காரணமாக கூறப்பட்டன.
 சக்ரி டொலட்டி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் பில்லா-2 படம் முடிந்ததும் அஜித்-விஷ்ணுவர்தனுடன் கைகோர்க்கிறார். புதிய படம் பற்றி கூறுகையில் விஷ்ணுவர்தன்” அஜித் சாருக்கு இந்த படத்தை பற்றி தெரிந்தது ஒரே ஒரு வரி கதை தான்.
 அந்த ஒரு வரி கதைக்கான திரைக்கதை வேகமாக எழுதப்பட்டு வருகிறது. திரைக்கதை எழுதப்பட்ட பின் தான் எந்தெந்த கதாபாத்திரம் தேவை என்று முடிவு செய்யப்பட்டு, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகர்கள் செலக்ட் செய்யப்படுவார்கள்.
அதன் பின் தான் மற்றவை பற்றி முடிவுகள் எடுக்கப்படும். இது தவிர படத்தை பற்றி வெளிவந்த செய்திகள் அனைத்துமே உண்மை இல்லாதவை. இந்த படத்தில் அஜித் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார்” என்று கூறியதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக