வியாழன், 19 ஜனவரி, 2012

சிறார் காப்பகத்தில் செக்ஸ் சில்மிஷம்-நிர்வாகிக்கு இரும்புக் கம்பி அடி

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே சிறார் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட நிர்வாகிக்கு இரும்புக் கம்பியால் சரமாரி அடி விழுந்தது.இதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து அவரைத் தாக்கிய சிறுமியின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி என்ற பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான ஸ்டீபன் ஜோசப். லிட்டில் ஏஞ்சல் என்ற பெயரில் இவர் சிறுவர் காப்பகம் நடத்தி வருகிறார்.
இதில் 13 மாணவர்களும், 23 மாணவிகளும் தங்கியுள்ளனர்.
அதில் தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த வித்யா என்ற 12 வயது சிறுமியும் அடக்கம். வித்யா, தனது தம்பி அலெக்ஸுடன் இங்கு தங்கியுள்ளார்.
இந்த நிலையில், ஸ்டீபன் ஜோசப் அடிக்கடி வித்யாவிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து தனது தந்தை ராஜனுக்குத் தகவல் கொடுத்தார் வித்யா.
கோபமடைந்த ராஜன் நேராக காப்பகம் வந்தார். அங்கிருந்த ஸ்டீபனை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கினார்.

இதில் காயமடைந்தார் ஸ்டீபன். அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜன் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஸ்டீபன் தனக்கு செக்ஸ் சில்மிஷம் செய்து தொந்தரவு கொடுத்ததாக தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த ஒரு சிறுமி போலீஸில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் காப்பகத்தில் தங்கியிருப்போரிடம் மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் நேரில் விசாரணை நடத்தினார்.

இந்தப் புகாரின் பேரில் ஸ்டீபன் ஜோசப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக