புதன், 28 டிசம்பர், 2011

மகாகவி பாரதியின் பார்பன ஜாதி உணர்வு

dr-muthulakshmi_reddi1.jpg

பெண் கல்வி குறித்து, வீரவேஷம் கடடிப் பாட்டுப் பாடிய பாரதி, மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து  பல சிரமங்களுக்கிடையே படித்து 1912 ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப்பற்றி, ஒரு வார்த்தைக்கூட bகுறிப்பிடவில்லை. அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் சுயநினைவோடுதான் வாழ்ந்தார் பாரதி.வேத, புராணக் காலத்துப் பெண்களின் புகழ், வெளிநாட்டு பெண்களின் புகழ் குறித்தெல்லாம் விரல் நுனியில் தகவல் வைத்திருந்த பாரதிக்கு, தான் வாழ்ந்த ஊரிலேயே வாழ்ந்த, ஒரு தமிழச்சியின் சாதனை தெரியாமல் போனது ஏன்? இதுதான் செலக்டிவ் அம்னீஷியாவோ?’ மகாகவி  பாரதியின் பார்பன ஜாதி உணர்வு ஆம், முத்துலட்சுமி அம்மையார், பாரதி பரம்பரையினரால் கல்வி மறுக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்.நிற்க.தொடர் கட்டுரையாக எழுதும்போது, ‘இந்துத்துவாஎன்று குறிப்பிட்டிருந்தேன்.இந்த இந்துத்துவாஎன்கிற வார்த்தை இந்த மதத்தைப் பாதுகாப்பது போலவும், ‘இந்துத்துவாதான் மோசமானது இந்து மதம் மிகவும் நல்லதுஎன்பது போன்ற அர்த்தத்தைத் தருவதாகவும் எனக்குப்பட்டதால், ‘இந்துத்துவாஎன்கிற வார்த்தையை இந்து மதம் என்று மாற்றிக் குறிப்பிட்டிருக்கேறன்.                                                                                           
(பாரதியார் பற்றியான ஆய்வு)
அப்படியென்ன பொல்லாத பாரதியின் காலம்..?
-வே. மதிமாறன்
 முன்னுரை

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த துணைக் கண்டத்தில் இருந்தபோது, நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
அதில் முக்கியமான இரண்டு,
1. இந்தியா என்ற ஒரு நாடு உருவானது.
2. இந்த இந்தியச் சமூகம், நிலப்பிரபுத்துத்திலிருந்து முதலாளித்துவ சமூகமாக மாறும் முயற்சியில் இறங்கியது. ஏறக்குறைய மாறியது.
இதில் மிகக் குறிப்பாக இந்தியாவின் நகரங்கள், செழிப்பான பகுதிகள் முதலாளித்துவ முகம் பெறலாயின. இந்த நகரங்களிலும், செழிப்பான பகுதிகளிலும் வாழ்ந்த - இந்திய மன்னர்கள், செல்வந்தர்கள், பார்ப்பனர்கள் இவர்களுக்கு நிலப்பிரபுத்துவ தோல் உறிந்து, முதலாளித்துவ தோல் வளர ஆரம்பித்தது.
மன்னர்களும், செல்வந்தர்களும் கள்ளுப் பானையிலிருந்து - விஸ்கி பாட்டிலுக்கு மாறினார்கள். முதலாளித்துவ `சொகுசு` தன் மீது படரும் வரை பொறுமையாக அமைதி காத்தார்கள்.
ஆனால், பார்ப்பனர்கள் முதலாளித்துவம் தம்மை வந்து அடையும்வரை காத்திருக்க அவர்களுக்குப் பொறுமை இல்லை அல்லது பொறுமையாக இருந்தால், ‘வேலைக்காகாது’ என்ற காரணத்தால், முதலாளித்துவத்தை தன் இரண்டு கைகளையும் நீட்டி அன்போடு, `வருக, வருக` என்று வரவேற்றபடி, அதிவேக வாகனத்தில் ஏறி, முதலாளித்துவத்திடம் முதலில் சென்றடைந்தார்கள்.
மன்னர்களிடம் இருந்த தனது மரியாதைக்குரிய புரோக்கர் பணியை அல்லது ஆலோசனை வழங்கும் பணியை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குத் தானாகவே `பணி மாற்றம்` செய்து கொண்டார்கள்.
ஆம்,
மன்னர்களிடம், மன்னர்களுக்குக் கீழ் ராஜ குருவாக, ஆலோசகராக இருந்த பார்ப்பனர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வருகைக்குப் பிறகு மன்னர்களைவிடவும் அதிக எல்லைகளைக் கொண்ட பகுதிகளை ஆண்டார்கள். மன்னர்கள் மண்ணைக் கவ்வினார்கள்.
ஏகாதிபத்தியம் கொண்டு வந்த முதலாளித்துவத்தை அடைய பார்ப்பனர்கள் ஏறிய அதி வேக வாகனம் எது தெரியுமா?
ஆங்கிலம்.
சமஸ்கிருதம் தெரியாத பார்ப்பனர்களைக் கூட நிறைய பார்க்கலாம். ஆனால், ஆங்கிலம் தெரியாத பார்ப்பனர்களைப் பார்ப்பது அரிது, அரிது பார்ப்பதரிது.
ஆங்கிலத்தின் மீதான இந்த அன்பு, அந்த மொழியின் மீது ஏற்பட்ட காதலா?
ஆம். அவர்கள் அப்படியும் சொல்லிக் கொள்கிறார்கள்.
  bharti-image1.jpg
பிரிடடிஷ்காரனின் தாய் மொழி, தந்தை மொழி இரண்டுமே ஆங்கிலம்தான். அதன் பொருட்டேதான் பார்ப்பனர்களுக்கு, `சில்வர் டங்க்`  முளைத்தது. இரண்டாம் உலகப் போரின் போது இட்லர் வெற்றி பெற்று விடுவான் என்று நம்பி பார்ப்பனர்கள் ஜெர்மன் படிக்க ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
தனது சனாதனதர்மங்களோடே முதலாளித்துவத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட பார்ப்பனர்கள், தனது ஜாதிக்குள் எந்த சீர்திருத்தக் கருத்துகளையும் அறிவிக்காமல், சுற்றிக்கை விடாமல் குடுமியில் இருந்து கிராப்புக்கு மாறினார்கள்; மீசை வளர்த்துக் கொண்டார்கள்; சிரைத்துக் கொண்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, தன் குலப் பெண்களுக்கு கல்வியை தீவிரமாகக் கற்பிக்க ஆரம்பித்தார்கள்.
இப்படியாக ஆண்களூம், பெண்களூம் அரசு உத்தியோகம் பார்க்கத் தயாரானார்கள். கணவனை இழந்த பெண்களை மொட்டை அடித்து, முக்காடு போட்டு மூலையில் உக்காத்தி வைச்சபார்ப்பனியம், உடல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் மாத சுழற்சியை தீட்டுஎன்று சொல்லி அவளை அந்த மூன்று நாளும் வீட்டுக்கு வெளியே ஒதுக்கி வைத்து, அவள் மீது தீண்டாமையை அனுஷ்டித்து பெண்ணைக் கேவலப்படுத்திய பார்ப்பனியம், எந்த அறிவிப்பும் இன்றி, அந்தக் கொடுமைகளைத் தன் ஜாதிக்குள் முற்றிலுமாக ஒழித்துக் கொண்டது.
இது, முதலாளித்துவ தாக்கத்தால் அன்றி வேறு எதனால்?
இப்படி பார்ப்பன ஜாதிக்குள் கல்வி கட்டாயமக்கப்பட்ட சூழ்நிலையிலேயே பாரதி - சமூக சீர்திருத்தம், பெண்கல்வி குறித்துப் பாடுகிறார்.
இது பாரதியிடம் மட்டும் நிகழ்ந்த மாற்றமல்ல, ஒட்டுமொத்தப் பார்ப்பன சமூகத்திலேயே நிகழ்ந்த மாற்றம்.
தன் நலனில் அக்கறை கொண்டு ஆங்கிலக் கல்வி கற்ற பார்ப்பனியம், வழக்கம்போல் அந்தக் கல்வியையும் அடுத்தவற் கற்காமல் இருப்பதற்கு, அனைத்துத் தடைகளையும் விதித்தது.
(மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில் சமஸ்கிருதம் ஒரு பாடமாக இருந்தது. பின்னர் வந்த நீதிக்கட்சி அரசு (பனகல் அரசர்) அதை நீக்கியது.)
அதையும் மீறி படித்தவர்களின் புகழை மறைத்தது.
ஆம், இதை முதலாளித்துவ வடிவம் பெற்ற சனாதன தர்மம் எனலாம்.
முதலாளித்துவ வடிவம் பெற்ற இந்த சனாதன பாணி முற்போக்கு, பாரதியிடமும் இருந்தது.                                                                                                           
தோழமையுடன் வே. மதிமாறன்டிசம்பர் 2002`பாரதி` ய ஜனதா பார்ட்டி நூலின் முதல் பதிப்புக்கான முன்னுரையில்
http://mathimaran.wordpress.com/about/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக