வெள்ளி, 30 டிசம்பர், 2011

பள்ளி ஆசிரியையை கொலை செய்து கற்பழிக்க முயற்சி: இரண்டு கொலைகள் செய்த காமக்கொடூரன் கைது


பள்ளி ஆசிரியையை கொலை செய்து கற்பழிக்க முயற்சி:
இரண்டு கொலைகள் செய்த காமக்கொடூரன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மிட்டாப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். விவசாயியான இவருக்கு இரண்டு மகன்களும், மதியரசி (வயது 24) என்ற மகளும் உள்ளனர்
எம்.எஸ்.சி, பி.எட்., பட்டதாரியான மதியரசி ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் பேருந்தில் வீட்டுக்கு கிளம்பிய மதியரசி, ஊர் நிறுத்தத்திலிருந்து இறங்கி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் ம்தியரசியின் தலையில் தடியால் அடித்துள்ளான். பயத்தில் சத்தம் போட்டபடி அடிபட்ட மதியரசி மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டார்.
கிழே விழுந்த மதியரசி நினைவிழந்த பின்னரும் அந்த நபர் அவரது கை கால்களை ஒரு தடியால் அடித்து கொண்டிருந்தான், மதியரசியின் அலறல் சத்தம் கேட்டு பககத்து தோட்டங்களில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த பொதுமக்கள் சாலைக்கு ஓடிவந்து மதியரசியை காப்பாற்றியுள்ளார்கள்
பொதுமக்கள் ஒடிவருவதை பார்த்த அந்த அடையாளம் தெரியாத அந்த நபர், சாலையில் தப்பி ஓட முயன்றான்.
ஆனால், அவனை துரத்திச்சென்ற பொதுமக்களின் ஒரு பிரிவினர், சிறிது தூரத்தில் ஆளைப்பிடித்து அவனின் கைகளை கட்டி கொண்டு வந்து விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை கால்நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஊத்தங்கரை துணை கண்காணிப்பளார் காசி விஸ்வநாதன், சிங்காரப்பேட்டை ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பவ நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினார்கள்.
காவல் துறையினரின் விசாரணையில், மதியரசியை தாக்கிய அந்த நபரின் பெயர் கோவிந்தன் என்பதும், இவர் ஊத்தங்கரைக்கு பக்கத்தில் உள்ள சென்னப்பநாயக்கனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
கோவிந்தன், தாக்கப்பட்ட மதியரசி இவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லாத போது எதற்காக அந்த பெண்ணை கோவிந்தன் தாக்கியிருக்க வேண்டும் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கோவிந்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊத்தங்கரையில் உள்ள கல்லூரி மாணவி கனகலட்சுமி என்பவரை தடியால் தாக்கி கொலை செய்து பின்னர், அந்த மாணவியின் உயிரற்ற உடலோடு பாலியல் உறவு கொண்டதையும், அதற்கு முன்னர் கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த அனுசுயா என்ற பள்ளி மாணவியை கொலை செய்து பின்னர், பாலியல் உறவு கொண்டதையும், இந்த இரண்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவிந்தன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளான் என்றும், நீதிமன்ற நிபந்தனையில் தினமும் காலையில் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் கையொப்பமிட்டுவருகிரான் என்பதும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கோவிந்தனை ஊத்தங்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

இத்தகைய கிருமினல்களை மேல்நாடுகள் DANGEROUS OFFENDERS என்ற CATEGORY இல் நிரத்தரமாகவே உள்ளே வைத்துவிடுவார்கள்.... இந்தியாவில் கிருமினல்களுக்கு எதிராக மென்மையான போக்கே கடைபிடிக்கப் படுகிறது.. அது கிருமினல்களை வளர்க்கிறது.

இப்படிப்பட்ட கயவர்களுக்கு ஜாமீன் எடுக்கவும்,வழக்கை நடத்தவும் வக்கீல்கள் தயாராக இருக்கும் போது, யாரால் என்ன செய்ய முடியும்.
உயர்பொறுப்பில் இருக்கும் நீதிபதிகள் யோசிக்க வேண்டும். இது போன்ற குற்றங்கள் செய்த கைதிகளுக்கு முன்ஜாமீன் தரகூடாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக