வியாழன், 29 டிசம்பர், 2011

உலகின் அதிக மைலேஜ் தரும் புதிய ஹைபிரிட் கார்: டொயோட்டோ அறிமுகம்

Toyota Prius C
உலகின் அதிக மைலேஜ் தரும் வகையிலான புதிய ஹைபிரிட் மாடல் ஹேட்ச்பேக் காரை டொயோட்டோ அறிமுகம் செய்துள்ளது.
இரட்டை எரிபொருளில் இயங்கும் ஹைபிரிட் கார்களை தயாரிப்பதில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.
அந்த நிறுவனத்தின் பிரையஸ் ஹைபிரிட் கார் உலகின் அதிகம் விற்பனையாகும் காராக திகழ்கிறது. இந்த நிலையில், அக்வா என்ற பெயரில் புதிய ஹைபிரிட் காரை டொயோட்டோ ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது.
ஜப்பானில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் அக்வா சர்வதேச சந்தையில் பிரையஸ் சி என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த புதிய கார் லிட்டருக்கு 35.4 கிமீ மைலேஜ் செல்லும் என டொயோட்டோ தெரிவித்துள்ளதுலகின் அதிக மைலேஜ் கொடுக்கும் காராக அக்வா இருக்கும் என்றும் டொயோட்டோ தெரிவித்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் பிரையஸ் அதிக மைலேஜ் (லிட்டருக்கு 32கிமீ)கொடுக்கும் ஹைபிரிட் கார் என்ற பெருமையை பெற்றிருந்தது.

இந்த புதிய ஹைபிரிட் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்கை வசதிகளுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஹைபிரிட் கார் ஜப்பானில் ரூ.11.40 லட்சம் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், வரும் 2015ம் ஆண்டிற்குள் புதிதாக 10 ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்த டொயோட்டோ திட்டமிட்டுள்ளது.

தவிர, 2020ம் ஆண்டிற்குள் அனைத்து ரக கார்களிலும் ஹைபிரிட் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவும் டொயோட்டோ திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக