வியாழன், 29 டிசம்பர், 2011

70 ஆயிரம் கோடி முதலீடு: பிரதமரிடம் முகேஷ் அம்பானி உறுதி


டெல்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 70 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியுள்ளார்.
புது டெல்லியில் கடந்த வியாழக்கிழமை வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்கள் செய்யப்போகும் முதலீடு குறித்த பேசினர். கூட்டத்தில் பங்கேற்ற முகேஷ் அம்பானி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 70 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், முதலீடுக்கு ஏற்றநாடாக இந்தியா சிறந்து விளங்குவதாகவும் கூறியுள்ளார். இந்த தகவலை அந்த கூட்டத்தில் பங்கேற்ற அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
பிரதமர் வரவேற்பு
அம்பானியின் இந்த கருத்துக்கு பதிலளித்த பிரதமர், இதனை வரவேற்பதாகவும், மற்றவர்களும் இதனை பின்பற்றுவார்கள் எனவும் கூறியதாகவும் அந்த அரசு அதிகாரி கூறியுள்ளார். இதேபோல் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புவதாக ஏழு தொழில் அதிபர்கள் கூறியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். ரத்தன் டாடா, என்.ஆர். நாராயணமூர்த்தி, பாரதிமிட்டல் போன்றவர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்ற குறிப்பிடத்தகுந்த தொழிலதிபர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக