புதன், 28 டிசம்பர், 2011

Midas மதுபான ஆலை மூடலா?

முதல்வர் தான் எடுத்த முடிவில் சமரசம் செய்யத் தயாராக இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். முதல்வருக்கு நெருக்கமானவர்கள் நடத்தி வந்த மதுபானத் தொழிற்சாலை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளி வர இருப்பதாகச் சொல்கிறார்கள்.’’
‘‘மதுபான ஆலையை விரிவாக்கம் செய்யப் போவதாகவும், புதுவையில் புதுத் தொழிற்சாலை ஆரம்பிக்கப் போவதாகவும் சொன்னார்களே...’’
‘‘ஆனால் இப்போது வரும் தகவல்கள் வேறு மாதிரி உள்ளது. மதுபான ஆலையை மூடிவிடலாமா என்று ஆலோசித்து வருவதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்’’ என்று சொன்ன வம்பானந்தா,
இன்றைக்கு இது போதும் என்று சொல்லும் விதமாக இருக்கையில் இருந்து எழுந்தார்.
ஜாபர் வழக்கை தாமதப்படுத்தியது யார்?
தி.மு.க. ஆட்சியின் போது உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஆட்சியாளர்களை ஆட்டிப்படைத்தவர், ஜாபர் சேட். ஆட்சி மாற்றம் வந்ததும் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக வழக்குப் பாய்ந்தது. மண்டபம் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்ட அவர், பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது வீட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினார்கள். வேகமாக முன்னேறிய போலீஸார் திடீரென சைலண்ட் ஆகிவிட்டார்கள்.
இதற்குக் காரணம் ஜாபர் சேட்டின் முக்கியமான நண்பர் ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். பழைய கவர்னரின் குடும்பத்துக்கு நெருக்கமான அவர் கைதுக்கு பயந்து வெளிநாட்டில் பதுங்கியிருக்கிறாராம். அவர் மதுபானத் தொழிற்சாலையின் பெயரை முன்னால் வைத்திருக்கும் ஒருவரிடம் பெரும் தொகையைக் கொடுத்தாராம். அதன் பி ன்னர்தான் இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக ஆனதாம். சமீபத்தில் அவரை கட்சியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து, வழக்கு தீவிரப்படுத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
thanks kumudam + chandran NH

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக