புதன், 28 டிசம்பர், 2011

அரசியல் சட்ட திருத்த மசோதா தோல்வி- இது ராகுல் காந்திக்கு கிடைத்த படுதோல்வி!

மக்களவையில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு அரசியல் சாசன அந்தஸ்து தருவதற்காக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதன் மூலம் அன்னா ஹசாரேவுக்கு கிட்டத்தட்ட அத்தனை அரசியல் கட்சிகளுமே எதிராக உள்ளதும் அம்பலமாகிவிட்டது.
லோக்பால் அமைப்புக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து தரும் திருத்த மசோதாவுக்கு 3 பிரிவுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்றால் அவையின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் அவையில் இருக்க வேண்டும். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரிப்பது கட்டாயமாகும்.
ஆனால், இந்த திருத்த மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
ஆட்சியில் நீடிக்க உரிமையில்லை-பாஜக:
அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டதால் ஆட்சியில் நீடிக்கும் உரிமையை மத்திய அரசு இழந்துவிட்டதாக பாஜக மூத்தஸ தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
குறைந்தபட்சம் 273 வாக்குகளை கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.
லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து தரும் ஐடியாவைக் கொடுத்தவர் ராகுல் காந்தி என்பது நினைவிருக்கலாம். தேர்தல் ஆணையம் போல ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக லோக்பால் திகழ அதற்கு அரசியல்சாசன அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். அதன்படியே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இது தோல்வி அடைந்து விட்டது.

அதேசமயம், ஊழலை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக