சனி, 31 டிசம்பர், 2011

தமிழ்த் திரைப்பட விருதுகள் – 2011


கடந்த 2002 தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகப் பங்காற்றிய நபர்கள்/நிறுவனங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறேன்.
விருதுகளுக்கு நான் வகுத்துக்கொண்ட விதிமுறைகள்
  1. தமிழில் நேரடியாக உருவாக்கப்பட்ட‌‌ திரைப்படமாகவோ, தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்ட திரைப்படமாகவோ, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்திய மொழித் திரைப்படமாகவோ இருத்தல் வேண்டும்.
  2. திரைப்படம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான தேதிகளில் சென்னையில் வெளியாகி இருத்தல் வேண்டும் (மத்திய திரைப்படத் தணிக்கைத் துறை சான்றிதழ் தேதி கணக்கில் கொள்ளப்படுவதில்லை).
  3. விருதுகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அமைப்பின் நடுவர் திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து விட்டால் அப்படம் விருதுகளின் அனைத்து பிரிவுகளுக்கும் விண்ணப்பித்ததாகப் பொருள் கொள்ளப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட படங்கள்
ஆடுகளம் * காவலன் * சிறுத்தை * யுத்தம் செய் * தூங்காநகரம் * பயணம் * நடுநிசி நாய்கள் * குள்ளநரிக்கூட்டம் * நஞ்சுபுரம் * பொன்னர் – சங்கர் * கோ * வானம் * அழகர்சாமியின் குதிரை * ஆண்மை தவறேல் * ஆரண்ய காண்டம் * அவன் இவன் * நூற்றெண்பது * தேநீர் விடுதி * தெய்வத்திருமகள் * காஞ்சனா * போடிநாயக்கனூர் கணேசன் * போட்டா போட்டி 50-50 * ரௌத்திரம் * மங்காத்தா * எங்கேயும் எப்போதும் * வந்தான் வென்றான் * முரண் * வகை சூட வா * வேலூர் மாவட்டம் * சதுரங்கம் * 7-ஆம் அறிவு * வேலாயுதம் * தம்பி வெட்டோத்தி சுந்தரம் * வித்தகன் * மயக்கம் என்ன * போராளி * ஒஸ்தி * மம்பட்டியான் * மௌனகுரு * ராஜபாட்டை * ரா-1 * டர்ட்டி பிக்ச்சர் * (மொத்தம் – 42)

2011 விருது முடிவுகள்
  1. சிறந்த திரைப்படம் – ஆரண்ய காண்டம்
  2. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – கோ
  3. சிறந்த இயக்குநர் – தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம்)
  4. சிறந்த திரைக்கதை – தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம்)
  5. சிறந்த வசனம் – தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம்)
  6. சிறந்த கதை – வெற்றிமாறன் (ஆடுகளம்)
  7. சிறந்த பின்னணி இசை – யுவன் ஷங்கர் ராஜா (ஆரண்ய காண்டம்)
  8. சிறந்த ஒளிப்பதிவு – பி.எஸ்.வினோத் (ஆரண்ய காண்டம்)
  9. சிறந்த படத்தொகுப்பு – பிரவீன் / ஸ்ரீகாந்த் (ஆரண்ய காண்டம்)
  10. சிறந்த கலை இயக்கம் – விதேஷ் (ஆரண்ய காண்டம்)
  11. சிறந்த ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர் (ஆரண்ய காண்டம்)
  12. சிறந்த ஒப்பனை – அவன் இவன்
  13. சிறந்த ஒலிப்பதிவு – ரத்னவேலு / வெங்கடேஷ் (ஆரண்ய காண்டம்)
  14. சிறந்த VFX – JEFFERY KLIESER, HARESH HINGORANI & KEITAN YADAV (ரா-1)
  15. சிறந்த சண்டை அமைப்பு – ஆக்ஷ‌ன் பிரகாஷ் (யுத்தம் செய்)
  16. சிறந்த நடன இயக்கம் – தினேஷ் குமார் (ஒத்த சொல்லால‌ – ஆடுகளம்)
  17. சிறந்த பாடல் இசை – ஜிப்ரான் (வாகை சூட வா)
  18. சிறந்த பாடல் ஆசிரியர் – வைரமுத்து (வாகை சூட வா)
  19. சிறந்த பின்னணி பாடகர் – ந‌ரேஷ் ஐயர் (நான் சொன்னதும் – மயக்கம் என்ன)
  20. சிறந்த பின்னணி பாடகி – சின்மயி (சரசரசாரக்காத்து – வாகை சூட வா)
  21. சிறந்த நடிகர் – விக்ரம் (தெய்வத்திருமகள்)
  22. சிறந்த நடிகை – இனியா (வாகை சூட வா)
  23. சிறந்த துணை நடிகர் – வ.ஐ.ச.ஜெயபாலன் (ஆடுகளம்)
  24. சிறந்த துணை நடிகை – ஸ்வப்னா ஆப்ரஹாம் (நடுநிசி நாய்கள்)
  25. சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம்)
  26. சிறந்த குணச்சித்திர‌ நடிகை – அனுஷ்கா (வானம்)
  27. சிறந்த வில்லன் நடிகர் – ஜாக்கி ஷெராஃப் (ஆரண்ய காண்டம்)
  28. சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் (சிறுத்தை)
  29. சிறந்த குழந்தை நடிகர் – பேபி சாரா (தெய்வத்திருமகள்)
  30. சிறந்த டைட்டில் கார்ட் – கோ
  31. சிறந்த ட்ரெய்லர் – ஆரண்ய காண்டம்
  32. சிறந்த திரை புத்தகம் – THE BEST OF TAMIL CINEMA – 1931 to 2010 (ஜி.தனஞ்ஜெயன்)
  33. சிற‌ந்த திரை விமர்சகர் : சுரேஷ் கண்ண‌ன் (http://pitchaipathiram.blogspot.com/)
-சரவண கார்த்திகேயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக