மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும் ஃபேஸ்புக்கில் சில படங்கள் வரிசையாக வந்து விழுந்தன.
திருப்பதியில் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த அவர்கள் பயன்படுத்தும் ஒரே ஒரு வார்த்தை 'ஜருகண்டி' என்பதுதான். கிட்டத்தட்ட அதே போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் வேட்பாளர்கள் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை சந்திக்க அறிவாலயத்தில் கடந்த சில நாட்களாக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அனைவருக்கும் வாழ்த்து சொல்லி அனுப்பிக் கொண்டே இருக்கும் ஸ்டாலின் சில பேரிடம் சில நிமிடங்கள் பேசுகிறார்.
சனி, 26 பிப்ரவரி, 2022
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் வார்னிங்- அமைச்சர்கள் அதிர்ச்சி!
குழந்தைகளை தூக்கிலிட வேண்டும் என்று மிரட்டிய வெங்கடேஷ் குமார் பாபு கைது!
மின்னம்பலம் : தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார் வேடமிட்டு நாடகத்தில் நடித்த குழந்தைகளை கொலை செய்ய வேண்டும் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரை காவல்துறை இன்று கைது செய்தது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் சிறுவர் -சிறுமியர் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த நிகழ்ச்சியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியாக தந்தை பெரியார் நாடகம் நடத்தப்பட்டது. அதில், பெரியார் போன்று வேடமணிந்து ஜூனியர் சிறுவர்கள் அருமையாக நடித்திருந்தனர்.
ரஷ்ய சரக்கு கப்பலைச் சிறைபிடித்த பிரான்ஸ்!
நக்கீரன் செய்திப்பிரிவு : ரஷ்யா, உக்ரைன் மீது மூன்றாவது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. இந்தச்சூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. கடலிருந்தும், வான்வெளியாகவும் ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷ்யா, கீவில் உள்ள கீவ் நீர்மின் நிலையத்தையும், மெலிடோபோல் நகரையும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 8 உக்ரைன் போர் கப்பல்களையும் அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு பயிற்சி கட்டணம் அதிரடியாக குறைப்பு! தமிழக அரசு தாராளம்
மின்னம்பலம் : வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் 3 லட்சத்து 54 ஆயிரத்தில் இருந்து 29 ஆயிரத்து 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதி நவீன நரம்பியல் சிகிச்சைப் பிரிவிற்கான புதிய கட்டடத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(பிப்ரவரி 25) திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம், எலும்பு புற்றுநோய்ப் பாதிப்பிலிருந்து குணமடைந்த14 வயது சிறுமியை அமைச்சர் வாழ்த்தினார்.
போலாந்தை பிடிக்க தயாராகும் புட்டின்:செய்மதி படங்கள் கிடைத்துள்ளன என்கிறது அமெரிக்க
tamilwin : உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளடீமிர் புட்டின் அருகில் இருக்கும் நாடுகள் மீது போர் தொடுப்பார் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி பிலிங்கன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய படையினர் ஏற்கனவே போலாந்து எல்லையில் இருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் கனரக ஆயுதங்களை குவித்து வருவதை செய்மதி படங்கள் ஊடாக காண முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெலாரஸில் உள்ள பிரெஸ்ட் நகரில் அதிகளவிலான ரஷ்ய ஆதரவு படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ ரஷ்ய ஜனாதிபதி சில நேரம் உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர், அத்துடன் நிறுத்தாமல் போகலாம். உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் அருகில் உள்ள நாடுகளான போலாந்து, ஸ்லோவக்கியா, ஹங்கேரி, ருமேனியா வரை போரிடும் என்றால், அது நேட்டோ நாடுகள் மீதான ஆக்கிரமிப்பாக கருதப்படும்.
முற்போக்கு பேசிய சிறுவன் அப்துலின் தாய் இந்துவாக இருந்து முஸ்லீமாக மதம் மாறி கறுப்பு அங்கி ... சமூகவலை விவாதம்
Rishvin Ismath : தமிழக முதல்வரையே கேவலப் படுத்தும் இந்தப் புகைப்படம் பல செய்திகளைச் சொல்கின்றது.
எதற்காக முதல்வரிடம் இருந்து தள்ளி நிற்க வேண்டும்?
Borgia Borgie : Âbû Ûmâr இந்த புகைப்படத்தில் எந்த தவறுமே உங்க கண்ணுக்கு தெரியலையா??
ஒரு மதம் எந்த அளவுக்கு உங்கள் கண்களை மறைக்கிறது பாருங்கள்!
悟り 美知 : Borgia Borgie நீங்க வேற.. அதெல்லாம் அவங்க கண்ணுக்கு தெரியாது.
வேணும் னா அந்த அம்மாவோட தலை முடி கொஞ்சம் வெளியே தெரியுது. அத வேண்ணா தவறுன்னு சொல்லுவாங்க
Arm Jemsir : Borgia Borgie என் கண்ணுக்கு எந்த தவரும் தெரிலயே. ஒரு வேல காஜில இருக்குர கலிசட பயலுக்கு தவரா தெரியலாம்
Borgia Borgie : Arm Jemsir எல்லாரையும் உங்களைப்போல் காஜியில் இருக்கும் கழிசடை பயலாக நினைத்து கொண்டே இருப்பதால் தான் இந்த படத்திலும் பிரச்சினை இருக்கிறது என்று சொல்கிறோம்.எல்லா ஆண்களையும் கேவல படுத்தாதீர் முதல்வர் உட்பட!
Borgia Borgie : தீண்ட தகாத ஒரு இனமாக அந்த பெண் ஒரு மூலையில், ஒரு கறுப்பு பேக்கிங் இற்குள் இருப்பது உங்களுக்கெல்லாம் பிரச்சினையாவே படாது.
ஜேஆர் ஜெயவர்தனவும் ஜெயக்குமார் ஜெயவர்தனவும் .. என்ன உறவோ ... என்ன அறிவோ
செல்லபுரம் வள்ளியம்மை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனவின் பிறந்த தேதி 29 May 1987 -
இந்த காலப்பகுதியில் இலங்கை அதிபர் ஜெ ஆர் ஜெயவர்த்தனா அரசின் ராணுவம் தமிழ் பகுதிகளில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது..
4 ஜூன் மாதம் 1987 ஆண்டு இந்திய அரசின் விமானபடையின் விமானங்கள் அச்சுவேலி பகுதியில் அரிசி பருப்பு போன்ற உணவு பொதிகளை போட்டு ஜேயார் ஜெயவர்தனவுக்கு இந்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டினை தெரிவித்தது
29 ஜூலை 1987 இல் இலங்கை அரசு வேறு வழியின்றி இந்திய அரசோடு சமாதான ஒப்பந்தம் செய்தது
அதுதான் ராஜீவ் ஜேஆர் ஒப்பந்தம்
இப்படியான வரலாற்று பின்புலத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 29 May 1987 பிறந்த மகன்தான் (அதிமுக முன்னாள் எம்பி) ஜெயவர்த்தன் ஜெயக்குமார்!
வெள்ளி, 25 பிப்ரவரி, 2022
இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டி: வென்றவர்களுக்கு கேடயம் பரிசளிப்பு!
நக்கீரன் செய்திப்பிரிவு - பி.அசோக்குமார் : தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு குடியரசு தினத்தன்று கவிதை, கட்டுரை உள்ளிட்ட படைப்பாற்றல் போட்டிகள் நடத்தப்பட்டன.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் இணைய வழியில் இதனைத் தொடங்கி வைத்திருந்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை நந்தனம் ymca அரங்கில் நடைபெறும் புத்தக காட்சியின் சிற்றரங்கில் நேற்று (பிப். 24) அன்று மாலை கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.
மு.க.ஸ்டாலினின் சகாப்தம் இங்கே நிலைத்திருக்கும்!” : Deccan Chronicle தலையங்கத்தில் புகழாரம்
கலைஞர் செய்திகள் - பிரேம் குமார் : வாக்காளர்களின் நம்பிக்கையால் ஸ்டாலினின் சகாப்தம் இங்கே நிலைத்திருக்கும் என்று “டெக்கான் கிரானிக்கல்’’ ஆங்கில நாளேடு தனது தலையங்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.கழகம் பெற்றுள்ள வரலாறு காணாத வெற்றியின் மூலம், வாக்காளர்களின் நம்பிக்கையால் ஸ்டாலினின் சகாப்தம் இங்கே நிலைத்திருக்கும் என்று “டெக்கான் கிரானிக்கல்’’ ஆங்கில நாளேடு தனது தலையங்கத்தில் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
இதுகுறித்து “டெக்கான் கிரானிக்கல்’’ ஆங்கில நாளேடு தனது நேற்றைய (24.2.2022) இதழில் “ஸ்டாலின் சகாப்தம் இங்கே நிலைத்திருக்கும்!’’ என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-
ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம்- இந்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கும் ரஷியா
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பிராந்தியங்கள் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
ரஷியாவின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்தும்படி அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன.
இதனை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. அதில் உலக நாடுகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தன.
சென்னை மேயர் பதவியை விசிக கோருகிறது? சாந்தி என்கின்ற யாழினியை ....
மின்னம்பலம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் ஆளும் தி.மு.க கூட்டணி அதில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகமெங்கும் இருந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவாலயத்திற்கு வந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து செல்கிறார்கள்.
கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து தங்களது அடுத்தகட்ட தேவைகளை மனுவாக கொடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
கவுன்சிலர்கள் மூலமே மேயர், துணை மேயர், நகராட்சி- பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால்... தங்களது கட்சிகளுக்கு இந்த பதவிகளில் பங்கு வேண்டுமென கூட்டணி கட்சி தலைவர்கள் ஸ்டாலினிடம் நேரடியாகவும் வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்தோனேசியாவில் 6 .2 ரிச்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
நக்கீரன் செய்திப்பிரிவு : இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்தோனேஷியாவிவின் சுமத்ரா தீவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
புடினுக்கு போன் போட்டேன் எடுக்கவில்லை.. உக்ரைன் அதிபர் உருக்கமான உரை!
Nantha Kumar R - Oneindia Tami : s கிவ்: ‛‛ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் பேசவில்லை.
இதனால் இது ஐரோப்பிய பிராந்தியத்தில் மிகப்பெரிய போரின் தொடக்கமாக இருக்கலாம்'' என உக்ரைன் அதிபர் வோலோடிமைர் ஜெலன்ஸ்கி உருக்கமாக நாட்டு மக்களிடம் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளது.
வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் உக்ரைனில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.
உயிர் பயத்தில் உக்ரைன் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயர்கின்றனர்.
இதனால் நாட்டில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமைர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் வீடியோ மூலம் உருக்கமாக பேசினார்.
வீடியோவில் அவர் பேசியதாவது:
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை காப்பாற்றுங்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்
கலைஞர் செய்தி : உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்கக் கோரி ஒன்றிய வெளியுறவு அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
உக்ரைன் நாட்டில் ரஷ்யா இராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி
ஒன்றிய வெளியுறவு அமைச்சர் டாக்டர்.எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24-2-2022) கடிதம் எழுதியுள்ளார்.
Ex. Min ஜெயக்குமார் கைதை கண்டித்து வரும் 28-ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
தினத்தந்தி : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 28-ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அரைநிர்வாணப்படுத்தி தாக்கினர்.
வியாழன், 24 பிப்ரவரி, 2022
உலகப் பொருளாதாரம் மிகுந்த அச்சத்தில் இருக்கிறது.. உக்கிரேன் ரஷ்ய போர்
Karthikeyan Fastura : உக்ரைன், ரஷ்யா போர் சூழல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.
அதிபர் புட்டின் படைகளையும் ஆயுத தளவாடங்களையும் உக்ரைன் பக்கம் நிறுத்தியிருக்கிறார். அணுவாயுதம் உள்ளிட்ட அனைத்து விதமான ஏவுகணைகளையும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.
உக்ரைன் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் எமர்ஜென்சி அமல்படுத்தி இருக்கிறார்கள்.
உக்ரேனிய மக்கள் ஆயுதம் ஏந்தி கொள்ளவும் அனுமதி அளித்து சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால் இந்தப் போரினை நிறுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளையும் பேச்சுவார்த்தைகளையும் ஒரு பக்கம் நடத்திக்கொண்டு மறுபக்கம் ஐரோப்பா நாடுகளில் உக்ரைனுக்கு ஆதரவாக சில நாடுகளும் அமெரிக்காவும் தங்களது படைகளை தயார்ப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
கூட்டணிக் கட்சிகளுக்கு மேயர் உண்டா? திமுகவில் அடுத்த சலசலப்பு!
மின்னம்பலம் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து திமுக கூட்டணி பெரு வெற்றி பெற்றிருக்கிறது. அதிலும் திமுக மிகப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி தமிழக நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை முழுமையாக தன் கைக்குள் கொண்டு வந்திருக்கிறது.
வெற்றி பெற்ற ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியையும் அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் அடுத்தகட்டமாக மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி - பேரூராட்சிகளுக்கான தலைவர் - துணைத் தலைவர் பதவிகளை குறிவைத்து ரேஸ் தொடங்கிவிட்டது.
குறிப்பாக கூட்டணிக் கட்சியினருக்கு இவற்றில் என்ன பதவி கிடைக்கும் என்ற கேள்வி திமுக கூட்டணிக்குள் இயல்பாகவே எழுந்திருக்கிறது.
உக்கிரேன் மீது ரஷியா போர்! உக்ரைன் தலைநகருக்குள் Kiev ரஷ்யா படைகள் |
தினத்தந்தி : மாஸ்கோ . வரலாற்றில் இதுவரை சந்திக்காத விளைவுகளை சந்திக்க நேரிடம் எனவும், நான் கூறியது உங்களுக்கு கேட்டிருக்கும் என நம்புகிறேன் என்று உலக நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா உக்ரைன் மீது இன்று போர் தொடுத்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் பிற நகரங்களை குறிவைத்து ரஷிய படைகள் இன்று வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. ஏவுகணை தாக்குதல், விமானப்படை தாக்குதல், தரைவழி தாக்குதல் என அனைத்து வகை தாக்குதல்களையும் உக்ரைன் மீது ரஷியா தொடங்கியுள்ளது. உக்ரைன் அரசு துறைகளில் சைபர் தாக்குதலையும் ரஷியா நடத்தியுள்ளது.
அதிமுக-வின் சந்தர்ப்பவாதமே இந்தத் தோல்விக்குக் காரணம்! இந்து ராம்
Chinniah Kasi - தீக்கதிர் : மூத்த பத்திரிகையாளர் என்.ராம் நேர்காணல்
“அ.தி.மு.கவின் சந்தர்ப்பவாதமே இந்தத் தோல்விக்குக் காரணமெனக் கருதுகிறேன். வரவிருக்கும் தேர்தல்களிலும் தி.மு.கவின் வெற்றிகள் தொடரும். பா.ஜ.கவை மக்கள் ஏற்கவில்லை” என்கிறார் மூத்த ஊடகவியலாளர் என். ராம்.
சந்திப்பு : முரளிதரன் காசி விஸ்வநாதன் நன்றி : பிபிசி தமிழ்
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?
இது மிகப்பெரிய பாய்ச்சல் வெற்றி என்பது தெளிவாகத் தெரிகிறது.
தி.மு.கவும் முதலமைச்சரும் இதை எதிர்பார்த்தார்கள். குறிப்பாக மேற்கு தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு நல்ல ஆட்சி எனக் கருதுகிறேன். இந்த வெற்றிக்கு அதுதான் காரணமாக இருக்கும்.
மக்களுக்கு எது நல்லதாக இருக்கும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
ஓசூரில் நிலத்தை வாங்கி குவிக்கும் தமிழ்நாடு அரசு.. அடுத்த சென்னை ஓசூர்-தானா..!!
Prasanna Venkatesh - GoodReturns Tamil : தமிழ்நாட்டில் புதிதாகத் தொழில் துவங்க வேண்டும் எனத் திட்டமிடும் அனைத்து பெரு நிறுவனங்களுக்குத் தற்போது ஓசூர் விருப்பமான இடமாக மாறியுள்ளது. கடந்த 2 வருடத்தில் டாடா மற்றும் ஓலா ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலையை ஓசூரில் அமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனங்கள் ஓசூரைத் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஓசூரில் வர்த்தக வளர்ச்சிக்காகவும், புதிய நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் சுமார் 4000 ஏக்கர் நிலத்தை வாங்க முடிவு செய்து அதற்கான பணிகளை வேக வேகமாகச் செய்து வருகிறது..
புலிகள் காப்பகம் எனும் பெயரில் முடக்கப்படும் பர்கூர் மலைப்பகுதி மக்கள்!
வினவு : சிறை பிடிக்கப்பட்டதுபோல் நகர முடியாமல் முடங்கிக் கிடக்கிறது 85 பழங்குடி மற்றும் 120-க்கும் மேற்பட்ட வனக்குடி கிராமங்கள். நீதிமன்றத்தின் உத்தரவால் கிட்டத்தட்ட 1 இலட்சம் மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்து போய்விட்டது. வாழ்க்கை பறிபோய்க் கொண்டிருப்பதை தடுக்க கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டியத் தமிழ்ச்சமூகம் தூங்கிகொண்டிருக்கிறது.
சத்தியமங்கலம் வழியாக பெங்களூரு செல்லும் திம்மம் சாலையை வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன என்று சொல்லி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரைக்கும் வாகனங்கள் செல்லக்கூடாதென முடக்கியதால்தான் இவ்வளவு விபரீதமும்.
உள்ளடி வேலைகளால் முதல்வர் ஸ்டாலின் வேதனை?
Josephraj V | Samayam Tamil : தேர்தலில் அமோக வெற்றி பெற்றும் எந்த பலனும் இல்லை என கூறி முதல்வர் ஸ்டாலின் வேதனைப்பட்டதாக கூறப்படும் தகவல் திமுகவில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையானது நேற்று பிப்ரவரி 22ம் தேதி தமிழகம் முழுவதும் 279 மையங்களில் நடைபெற்றது. இந்த முடிவுகள் வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றியை பெற்றுள்ளன.
இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் முதலமைச்சர் மு.கஸ்டாலின் இந்த வெற்றியை கண்டு பெரிதும் மகிழவில்லை என்றே கூறப்படுகிறது.
வெற்றி பெற்றவர்களை 6 மணி நேரத்துக்கு மேலாக நின்றுகொண்டே. வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
கலைஞர் செய்திகள் : உங்களை பார்த்ததும் கால் வலியும் உடல் அயர்ச்சியும் காணாம போச்சு!
“6 மணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே இருந்தாலும் உங்களைப் பார்த்ததும் கால் வலியும் உடல் அயர்ச்சியும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுகிறது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றன.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.கவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்! கீழக்கரை
கலைஞர் செய்திகள் : ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் காஜாமுகமது. இவர் கடந்த 2011ஆம் ஆண்டு நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் இவரை போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா வழங்கியுள்ளார்.
அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காஜா முகமதுவிற்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும், சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சிறுமிக்கு ரூ.3 லட்சம் வழங்க தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். இந்த தீர்ப்பை அடுத்து போலிஸார் காஜா முகமதுவை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
குளித்தலை திமுக எம்.எல்.ஏ மாணிக்கத்திற்கு பிடி ஆணை
நக்கீரன் செய்திப்பிரிவு : குளித்தலை திமுக சட்டமன்ற உறுப்பினரிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் விரைவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை எம்எல்ஏவாக இருப்பவர் மாணிக்கம். திமுகவைச் சேர்ந்த இவர் மீது செக் மோசடி தொடர்பான ஒரு வழக்கு கரூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் மாணிக்கத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேட்டி கொடுத்த சிறுவன் அப்துல்கலாம் வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்க!!" l சிறுவனின் தாய் கண்ணீர் பேட்டி
Behindwoods : கடந்த சில நாட்களுக்கு முன் அப்துல்கலாம் என்ற சிறுவன் சமூக ஊடகங்களில் மனித இயல்பு குறித்து பேசியது VIRAL ஆனது.
இந்நிலையில் அச்சிறுவனின் குடும்பத்தை வீட்டை விட்டு காலி செய்யுமாறு வற்புறுத்தப்படுவதாக சிறுவனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். என்ன நடந்தது? பேட்டி
புதன், 23 பிப்ரவரி, 2022
வடமாவட்டங்களில் திமுகவின் வெற்றி.. பாமக சரிந்தது எப்படி?
Shyamsundar - Oneindia Tamil : s தருமபுரி: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. முக்கியமாக வடக்கு மாவட்டங்களில் திமுக நல்ல வெற்றியை பெற்று இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளி வந்தன.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது. அதேபோல் நகராட்சி வார்டுகள், பேரூராட்சி வார்டுகளிலும் திமுகதான் பெரும்பான்மை பெற்றுள்ளது.
952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது.
2360 நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது.
அதேபோல் 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது.
வட மாவட்டங்களில் வெற்றி விவரம்
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் உள்ளடங்கிய வடமாவட்டங்கள் அனைத்திலும் திமுகதான் வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி அரியலூர் - நகராட்சி வார்டுகளில் திமுக 17, அதிமுக 11. பேரூராட்சி வார்டுகளில் திமுக 14, அதிமுக 1.
தே.மு.தி.க, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு?
tamil.indian express: மக்களவைத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்களில கெத்து காட்டிய தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்திருக்கிறது என்று விவாதங்கள் எழுந்துள்ளன.
2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியாக உருவெடுத்த தேமுதிகவும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கனிசமான வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்த நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்திருக்கிறது என்று விவாதங்கள் எழுந்துள்ளன.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல்
நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரைத் தாக்கி,
அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பழம்பெரும் மலையாள நடிகை லலிதா காலமானார்
தினத்தந்தி : பிரபல பழம்பெரும் மலையாள நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 74. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட லலிதா தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து உடல்நிலை சற்று தேறியநிலையில் கொச்சியில் உள்ள தனது மகன் சித்தார்த் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.22) இரவு நடிகை லலிதா காலமானார்.
கோவை தேர்தல் முடிவுகள்! சுயேச்சைகளின் கை ஓங்கியது...
21 மாநகராட்சிகளையும் கைப்பற்றிய திமுக: முழு விவரம்!
மின்னம்பலம் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
மாநகராட்சி வாரியான விவரம்
1.சென்னை மாநகராட்சி (200 வார்டுகள்)
திமுக - 153, அதிமுக - 15, காங்கிரஸ் -13, சுயேச்சைகள் -5, சிபிஐ-1, சிபிஐ(எம்)-4, மதிமுக-2, ஐயுஎம்எல்-1, விசிக-4, பாஜக -1, அமமுக- 1
2.தாம்பரம் மாநகராட்சி (70 வார்டுகள்)
தி.மு.க. கூட்டணி-55, அதிமுக-8, சுயேச்சை-7
3.ஆவடி மாநகராட்சி (48 வார்டுகள்)
திமுக-34 அதிமுக-4, காங்கிரஸ்- 3, சுயேச்சை-1, சிபிஎம்-1, மதிமுக-3 விசிக-1
4.காஞ்சிபுரம் மாநகராட்சி (51 வார்டுகள்)
திமுக - 31, காங்கிரஸ்-1 , அதிமுக - 9, பாமக - 2, பாஜக -1,தாமக-1 சுயேச்சைகள்- 6
5.கோவை மாநகராட்சி (100 வார்டுகள்)
திமுக -76, காங்கிரஸ்-9, அதிமுக-3, மற்றவை-4, சி.பி.ஐ(எம்)-4, சி.பி.ஐ-4
6.சேலம் மாநகராட்சி (60 வார்டுகள்)
உக்ரேனிய இரண்டு பிரதேசங்களை சுதந்திர நாடுகளாக ரஷியா அங்கீகரித்தது
BBC : உக்ரேனுடனான அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் செவ்வாய் அதிகாலையில் உக்ரேனின் இரண்டு பிரிவினைவாத பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகியவற்றின் சுதந்திரத்தை அங்கீகரித்தார்.
நாட்டிற்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரைக்கு பின்னர், புடின் உக்ரேனின் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதத் தலைவர்களுடன் நட்பு மற்றும் உதவி ஒப்பந்தங்களில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டார்.
இரண்டு உத்தியோகபூர்வ ஆணைகளில் புடின், நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தை கிழக்கு பிராந்தியங்களில் “அமைதியைப் பேணுவதற்கான செயல்பாட்டை” ஏற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
செவ்வாய், 22 பிப்ரவரி, 2022
சென்னை 200 வார்டுகளில் 178 மாமன்ற வார்டுகளில் வரலாறு காணாத வெற்றி ..
Venkat Ramanujam : பலர் ஐயையோ ஒரு வார்டில் பாஜக சென்னை மாநகராட்சியில் ஜெயித்து விட்டது .. இனி என்ன ஆகுமோ..
என நேரடியாக புலம்புவதை பார்த்ததும்.. திமுக கூட்டணி எப்படி இதை எப்படி கோட்டை விட்டது என்று கோபத்துடன் கேட்பதை பார்த்ததும்..
வருத்தம் வரவில்லை புன்சிரிப்பு மட்டுமே வருகிறது..
காரணம்..
மொத்தமாக 21 மாநகராட்சியில் இட ரீதியாக கட்சிகள் பெற்ற விகிதாசாரம் முறையே:
திமுக : 69%
அதிமுக: 12%
காங்கிரஸ் : 5.3%
சிபிஎம்: 1.75 %
பாஜக : 1.6%
உண்மைதான் உலகத்திலே பணக்கார கட்சியான பாஜக .. மேற்கு மாம்பலத்தில் அந்த ஒரு வார்டில் மட்டுமே 50 லட்ச ரூபாயை செலவு செய்து உள்ளதாக செய்திகளை நாதுராம் கோட்சே புத்திரிகள் மறுக்கவில்லை..
தனக்கென்று கொள்கைகள் ஏதும் இல்லா நாம் தமிழர் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தினகரன் கட்சி விஜயகாந்த் கட்சி இவர்களைக் காட்டிலும் .. தீவிர இந்துத்துவா கொள்கையை போதிக்கும் #பாஜக முந்தி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை..
ஆனால் வெறும் ஒன்றரை பர்சன்டேஜ் வைத்துள்ள கட்சியை 70% உள்ள கட்சியுடன் ஒப்பிடுவது . .
மாநகராட்சி + உள்ளூராட்சிகளில் திமுக சூறாவளி அதிர்ச்சியில் அதிமுக பஜாக.... கொங்கு மண்டலத்தையும் கைப்பற்றியுள்ளோம்: மகிழ்ச்சியில் ஸ்டாலின்
மின்னம்பலம் : இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 21 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் திமுக 140 வார்டுகளிலும், காங்கிரஸ் 8 வார்டுகளிலும், அதிமுக 13 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கிறது.
100 வார்டுகளை கொண்ட மதுரையில் திமுக 51 வார்டுகளிலும், அதிமுக 12 வார்டுகளிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
100 வார்டுகளை கொண்ட அதிமுகவின் கோட்டையான கோவையில் திமுக 35 வார்டுகளிலும், அதிமுக - 3, சிபிஐ-1. சிபிஐ (எம்)-3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
சேலத்தில் திமுக 29 இடத்தையும், அதிமுக 4 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
நகராட்சிகளில் ஒவ்வொரு கட்சிகளும் பிடித்த வார்டுகள் எண்ணிக்கை: முழு விவரம்
மாலைமலர் : நகராட்சி வார்டுகளில் தி.மு.க. 2,360 வார்டுகளை கைப்பற்றிய நிலையில், அ.தி.மு.க. 638 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. பா.ஜனதா 56 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. 138 நகராட்சிக்கான 3,843 வார்டுகளில் ஒரு வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 18 வார்டுகளில் போட்டியின்றி உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டார்.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றது. நேரம் செல்லசெல்ல அவை அனைத்தும் வெற்றிகளாக மாறின. மாலை 6.30 மணியளவில் அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.
தி.மு.க. 2360 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 638 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ்- 151
பா.ஜனதா- 56
பா.ம.க.- 48
சி.பி.ஐ(எம்)- 41
மதிமுக- 34
அமமுக- 33
விடுதலை சிறுத்தைகள்- 26
ஜெயக்குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..! AIADMK ex-minister Jayakumar remanded in custody for 15 days
tamil.asianetnews.com : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்தது. அன்றைய தினம் ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும், அவரது கையை கட்டும்படியும் கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின. ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நபர் திமுக தொண்டர் என்பது தெரிய வருகிறது.
ஆர் கே செல்வமணி நிஜமாகவே இயக்குனரா? பாக்யராஜ் கடும் தாக்கு
tamil.indianexpress.com : நீ எடுத்த படம் எல்லாம் நல்ல ஒடிச்சுன்னு சொன்னாங்க. ஆனால் அந்த படம் எல்லாம் நீதான் எடுத்தியா என்ற சந்தேகம் வந்து விட்டது” என இயக்குனர் செல்வமணியை, கே.பாக்யராஜ் விமர்சித்துள்ளார்
K.Bhagyaraj slams RK Selvamani on Director Association election issue: சர்க்கார் படக்கதை விவகாரத்தில் ஆர்.கே.செல்வமணி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும், உண்மையிலேயே அவர் இயக்குனர் தானா என எனக்கு சந்தேகம் வந்துவிட்டதாகவும் இயக்குனர் கே.பாக்யராஜ் விமர்சித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனைவி மகன் பேட்டி . கைதின் போது நடந்தது என்ன?
நக்கீரன் செய்திப்பிரிவு : நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் வாக்களிக்கச் சென்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அ.தி.மு.க.வினர் தாக்கியதாக, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை மாஸ்டர்ஸ் ரபிட் செஸ் போட்டியில் தோற்கடித்தார்
தினத்தந்தி : சென்னை : தமிழக இளம் வீரரான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் ரபிட் செஸ் போட்டியில் தோற்கடித்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை பாடியில் பிறந்த சிறுவனான பிரக்ஞானந்தா உலக அளவில் செஸ் போட்டி களில் அசத்தி வருகிறார்.
5 வயது முதல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் ஏழு வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
10 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்ற அவர் இளவயது சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதேபோல் பல பட்டங்களையும் அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திங்கள், 21 பிப்ரவரி, 2022
சித்ரா ராமகிருஷ்ணன் + ஆனந்த் சுப்பிரமணியன்= தேசிய பங்கு சந்தையில் மெகா ஊழல்...
Senthilraj Thiraviyam : இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பங்கு சந்தையில் ஒரு மெகா ஊழல் நடந்து இருக்கிறது.
ஆனந்த் சுப்பிரமணியன் என்ற பார்ப்பனர் சித்ரா ராமகிருஷ்ணன் என்ற NSE யின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனரை மத நம்பிக்கையில் வசியம் செய்து தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு போலியான ஈ மெயில் முகவரியை உருவாக்கி இமயமலையில் இருக்கும் யோகியிடம் இருந்து கட்டளைகள் வருவது போன்று இவனே அனுப்பி ஒரு சாதாரண வேலையில் ஆண்டுக்கு 15 லட்சங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவன் சித்திரா ராமகிருஷ்ணனின் மூலம் 1.68 கோடிகள் சம்பளத்துக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே மிகப்பெரிய பங்கு வர்த்தக மையங்களுள் ஒன்றான என் எஸ் சியின் ஆலோசகராக நுழைந்து விடுகிறான்.
அந்நியன் படத்தில் விக்ரம் அம்பி அந்நியன் ரெமோ என்று வேறு வேறு அவதாரம் எடுப்பது போன்ற ஒரு சினிமாத்தனமான நிகழ்வு உண்மையில் நடந்தேறி இருக்கு.
மயிலாப்பூர் கிளப் பூட்டி சீல் வைப்பு - ரூ.4 கோடி வாடகை பாக்கி! அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி!
மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான, மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில் உள்ள 42 கிரவுண்ட் 1566 சதுரஅடி பரப்பளவுள்ள மனை மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு 99 வருட நீண்ட கால குத்தகைக்கு விடப்பட்டு 27.8.2000 அன்று குத்தகை காலம் முடிவடைந்தது.
அந்த இடத்தினை மீண்டும் குத்தகைக்கு விடுவது தொடர்பாக மயிலாப்பூர் கிளப் நிறுவனம் கோரியதையடுத்து,
தமிழ் வளர்ச்சி, அறநிலையம் மற்றும் செய்தித்துறை 2007-ல் 42 கிரவுண்ட் 1566 சதுரஅடியில் ஒரு பகுதியான 18 கிரவுண்ட் 2364 சதுரஅடி நிலத்தை திருக்கோயில் வசம் ஒப்படைத்தனர் அரசாணையின்படி மயிலாப்பூர் கிளப் நிறுவனத்தார் 18 கிரவுண்ட் 2364 சதுரஅடி பரப்பளவுக்கு பதிலாக 2007ஆம் ஆண்டு 18 கிரவுண்ட் 1581 சதுர அடி நிலத்தை ஒப்படைத்தனர். தற்போது மயிலாப்பூர் கிளப் நிறுவனத்தார் வசம் 23 கிரவுண்ட் 2,385 சதுரஅடி பரப்பளவுள்ள மனை உள்ளது. மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவிகிதம் வாடகை உயர்வு செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது.
கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி படுகொலை! தொடரும் பதற்றம்
தினமலர் : ஷிவமொகா: கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஷிவமொகா நகரில் நேற்றிரவு (பிப்.,20) பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகியான ஹர்ஷா (26) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. சீகேஹட்டி பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு - கைது செய்யப்படுவார்?
மின்னம்பலம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டதாக அதிமுக குற்றம்சாட்டியது.
சென்னை ராயபுரம் பகுதியில் திமுகவினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியதாக அன்றைய தினம் மாலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டார். அதற்கு முன்னதாக ஜெயக்குமார் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு கள்ள ஓட்டுப் போட்டதாக ஒருவரைப் பிடித்து வைத்துக்கொண்டு அவரை தாக்க முயன்றனர்.
சென்னையில் திமுக நிர்வாகி மதன் கொலை!
மின்னம்பலம் : சென்னையில் திமுக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்தச் சூழலில் உச்சக்கட்டமாக நேற்று திமுக நிர்வாகி மதன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக வேட்பாளரின் அடியாட்கள் கைது!
மின்னம்பலம் : சென்னை 176ஆவது வார்டு அதிமுக வேட்பாளருக்குத் தொடர்புடைய இடங்களில் ரவுடிகள் பிம்பத்திலிருந்த கொத்தனார் உள்ளிட்ட கூலியாட்கள் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேட்பாளர் தேர்வு, மனு பரிசீலனை, பிரச்சாரம், பறக்கும் படை சோதனை, வாக்குப்பதிவு என கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக இருந்த உள்ளாட்சித் தேர்தல் களம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் உள்ளாட்சித் தேர்தலில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதால் வேட்பாளர்களை மிக கவனமாகத் தேர்வு செய்தது அதிமுக.
வேளச்சேரி 176ஆவது வார்டில் போட்டியிடுவதற்காக அதிமுகவைச் சேர்ந்த எம்.ஏ.மூர்த்தி சீட் கேட்டதற்கு, அந்த மாவட்ட செயலாளர் அசோக் மறுத்திருக்கிறார். இதனால், நேரடியாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி சீட் வாங்கினார். ‘எனக்கு கட்சி சார்பில் பணமெல்லாம் செலவு செய்ய வேண்டாம். அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துக் காட்டுகிறேன்’ எனக் கூறி சீட் கேட்டு பெற்றார் எம்.ஏ.மூர்த்தி.
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022
பாகிஸ்தான் 31 இந்திய மீனவர்களை கைது செய்தது
மாலைமலர் : இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கடற்பகுதியில் சில இடங்களில் கடல் எல்லையை அறிய முடியாததால் மீனவர்கள் எல்லை தாண்டும் நிலை ஏற்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த 31 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்படித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் 5 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஊடுருவிய படகுகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்ததாக பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் பதற்றம்; இந்திய தூதரகத்தின் புதிய அறிவுறுத்தல்!
ukraine indian embassy instruction
நக்கீரன் : உக்ரைனில் போர் பதற்றம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், அங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்துச் செல்வதற்கான பணிகளை வெளிநாட்டு தூதரகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன.
அந்த வகையில், உக்ரைனில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், அவ்வப்போது அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது.
மேலும், அந்நாட்டில் இருக்கும் இந்தியர்களை மீட்க கூடுதல் விமானங்களை இயக்க, விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த வகையில், இன்று (20/02/2022) மீண்டும் இந்திய தூதரகம், உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மக்கள் கவுன்சிலர்களின் பொருளாதார வளர்ச்சியை, அடாவடியை நேரடியாக பார்த்து உணர்கின்றனர்.
Kandasamy Mariyappan : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களுக்கு..,
தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்களை காப்பாற்றும் வல்லமை, திராவிட சித்தாந்தம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மட்டுமே உண்டு என்ற எண்ணத்திலான ஒரு இணைய உடன்பிறப்பின் கடிதம்.!
நகராட்சி, மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் மூன்று நாட்களில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் தெரிந்து விடும்.!
அதற்கு பிறகுதான் உங்களது பணி கூடுதலாக இருக்கும் என்பது எனது பார்வை.!
2011ல் கழகத்தின் தோல்விக்கு..,
2G பிரச்சினை 7%
குடும்ப அரசியல் பிரச்சினை 8%
கட்சி Heavy weight சொத்துகள் 10%
கிராமப்புறங்களில் கட்ட பஞ்சாயத்து 15% என்றால்...,
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அவுட் லுக் நோட்டீஸ்
Chinniah Kasi : - தீக்கதிர் : இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம் கேட்டு பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்த தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அவுட்லுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள தேசிய பங்குச்சந்தையின் தலைமை அலுவலகத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணா.
அப்போது தேசிய பங்குச்சந்தையில் முறைகேடாக பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் பல இடைத்தரகர்கள் பயனடையும் வகையில் பங்குச்சந்தையின் விதிமுறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதுமட்டும் இல்லாமல் இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியார் ஒருவரிடம் ஆலோசித்து பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்ததாக சித்ரா மீது புகார் எழுந்தது.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சதவீத விவரம்!
அதிகபட்சமாகத் தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 12,838 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57,778 பேர் போட்டியிட்டனர். கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி 21 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
1.37 கோடி ஆண் வாக்காளர்களும், 1.42 கோடி பெண் வாக்காளர்களும், 4,323 திருநங்கைகளும் என மொத்தம் 2.79 கோடி பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருந்தனர்.
மதுரை வாக்குச்சாவடி ஹிஜாப் - பாஜக முகவருக்கு சிறை!
மின்னம்பலம் : மதுரையில் வாக்கு செலுத்த வந்த இஸ்லாமிய பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்சினை செய்த பாஜக பூத் முகவர் கிரிராஜனை மார்ச் 4 ஆம் தேதிவரை சிறையில் அடைக்க மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. இதையடுத்து வருகிற 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த நகராட்சியில் 8வது வார்டில் அல்அமீன் உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தார்.
பெங்களூரு ஹிஜாப் விவகாரத்தில் தொடர் போராட்டம்; 58 முஸ்லிம் மாணவிகள் இடைநீக்கம்
தினத்தந்தி : ‘பெங்களூரு: ‘ஹிஜாப்’ விவகாரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்ததால் சிராளகொப்பா அரசு கல்லூரியில் இருந்து 58 மாணவிகள் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே திலகமிட்டு வரும் மாணவர்களை தடுக்க கூடாது என மந்திரி நாகேஸ் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் போராட்டம்
கா்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லிம் மாணவிகள் வகுப்பை புறக்கணித்துவிட்டு பள்ளி, கல்லூரி முன்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.