வியாழன், 24 பிப்ரவரி, 2022

உக்கிரேன் மீது ரஷியா போர்! உக்ரைன் தலைநகருக்குள் Kiev ரஷ்யா படைகள் |

 தினத்தந்தி :  மாஸ்கோ . வரலாற்றில் இதுவரை சந்திக்காத விளைவுகளை சந்திக்க நேரிடம் எனவும், நான் கூறியது உங்களுக்கு கேட்டிருக்கும் என நம்புகிறேன் என்று உலக நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா  உக்ரைன் மீது இன்று போர் தொடுத்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் பிற நகரங்களை குறிவைத்து ரஷிய படைகள் இன்று வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. ஏவுகணை தாக்குதல், விமானப்படை தாக்குதல், தரைவழி தாக்குதல் என அனைத்து வகை தாக்குதல்களையும் உக்ரைன் மீது ரஷியா தொடங்கியுள்ளது. உக்ரைன் அரசு துறைகளில் சைபர் தாக்குதலையும் ரஷியா நடத்தியுள்ளது.


ரஷியாவின் தீவிர தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவோருக்கு ரஷிய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக புதின் கூறுகையில், உக்ரைன் விவகாரத்தில் வெளி நபர்கள் (நாடுகள்) யாரேனும் தலையிட விரும்பினால், இந்த விவகாரத்தில் தலையிட்டால் வரலாற்றில் இதுவரை சந்தித்திராத விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். அனைத்து வகையான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. நான் கூறியது உங்களுக்கு கேட்டிருக்கும்  என நம்புகிறேன்’ என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக