செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை மாஸ்டர்ஸ் ரபிட் செஸ் போட்டியில் தோற்கடித்தார்

 தினத்தந்தி : சென்னை : தமிழக இளம் வீரரான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் ரபிட் செஸ் போட்டியில் தோற்கடித்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை பாடியில் பிறந்த சிறுவனான பிரக்ஞானந்தா உலக அளவில் செஸ் போட்டி களில் அசத்தி வருகிறார்.
5 வயது முதல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் ஏழு வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
10 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்ற அவர் இளவயது சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதேபோல் பல பட்டங்களையும் அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராபிட் செஸ் போட்டி
இந்நிலையில் இணைய வழியே நடைபெறும் ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் ரபிட் செஸ் போட்டியில் இளம் வயதில் வீரரான பிரக்ஞானந்தா கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனும் கலந்து கொண்டார். தொடரில் வெற்றி தோல்வி என அடுத்தடுத்து விளையாடிய பிரக்ஞானந்தா கடைசியாக ஏழு சுற்றுக்களில் விளையாடி ஒரு வெற்றி 4 தோல்விகள் இரண்டு ட்ராக்கள் என போராடி வந்தார்.
நம்பர் 1 வீரர்
தொடரில் பங்கேற்ற உலகின் நம்பர்-1 செஸ் வீரர் கார்ல்சன் மூன்று ஆட்டங்களில் வென்றிருந்த நிலையில் 8-வது சுற்றில் பிரியானந்தா உடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது.
உலகின் முதல் நிலை வீரரான கார்ல்சனை எதிர்கொள்கிறோம் என்ற பரபரப்பு இல்லாமல் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனுக்கு எதிராக கருப்பு நிற காய்களுடன் அற்புதமாக விளையாடி முப்பத்தி ஒன்பது நகர்த்தல்களில் வெற்றி பெற்றார். கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா பெற்றுள்ள முதல் வெற்றி இது.

குறிப்பாக கடைசியாக அவர் விளையாடிய 3 ஆட்டங்களிலும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது.
நம்பர் 1 வீரர்

தொடரில் பங்கேற்ற உலகின் நம்பர்-1 செஸ் வீரர் கார்ல்சன் மூன்று ஆட்டங்களில் வென்றிருந்த நிலையில் 8-வது சுற்றில் பிரியானந்தா உடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது.

உலகின் முதல் நிலை வீரரான கார்ல்சனை எதிர்கொள்கிறோம் என்ற பரபரப்பு இல்லாமல் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனுக்கு எதிராக கருப்பு நிற காய்களுடன் அற்புதமாக விளையாடி முப்பத்தி ஒன்பது நகர்த்தல்களில் வெற்றி பெற்றார். கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா பெற்றுள்ள முதல் வெற்றி இது.

சிறப்பான வெற்றி இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தொடரில் ஏற்று சுற்றுகளின் முடிவில் 8 புள்ளிகளுடன் 12ஆம் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா.

அவருக்கு முன்னர் 6 இடங்களில் அதாவது 13 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளார் கார்ல்சன். இனைய வழி ரபிட் செஸ் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்று நிலையில் ஒவ்வொரு வெற்றிக்கும் மூன்று புள்ளிகளும் டிராவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகிறது. குவியும் வாழ்த்துகள்.
சிறப்பான வெற்றி இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தொடரில் ஏற்று சுற்றுகளின் முடிவில் 8 புள்ளிகளுடன் 12ஆம் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா.

அவருக்கு முன்னர் 6 இடங்களில் அதாவது 13 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளார் கார்ல்சன். இனைய வழி ரபிட் செஸ் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்று நிலையில் ஒவ்வொரு வெற்றிக்கும் மூன்று புள்ளிகளும் டிராவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகிறது.
குவியும் வாழ்த்துகள்

உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரை வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அரசியல் கட்சியினர் திரைப்பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் என சிறுவன் பிரக்ஞானந்தாவை பாராட்டு மழையில் நனைய வைத்து வருகின்றனர். பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக