ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

மக்கள் கவுன்சிலர்களின் பொருளாதார வளர்ச்சியை, அடாவடியை நேரடியாக பார்த்து உணர்கின்றனர்.

May be an image of 1 person and text

Kandasamy Mariyappan  : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களுக்கு..,
தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்களை காப்பாற்றும் வல்லமை, திராவிட சித்தாந்தம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மட்டுமே உண்டு என்ற எண்ணத்திலான ஒரு இணைய உடன்பிறப்பின் கடிதம்.!
நகராட்சி, மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் மூன்று நாட்களில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் தெரிந்து விடும்.!
அதற்கு பிறகுதான் உங்களது பணி கூடுதலாக இருக்கும் என்பது எனது பார்வை.!
2011ல் கழகத்தின் தோல்விக்கு..,
2G பிரச்சினை 7%
குடும்ப அரசியல் பிரச்சினை 8%
கட்சி Heavy weight சொத்துகள் 10%
கிராமப்புறங்களில் கட்ட பஞ்சாயத்து 15% என்றால்...,


கவுன்சிலர்கள் 60%.!!
உங்களுக்கு தெரியும்..,
தமிழ்நாட்டில் இதுவரை பார்க்காத கொள்ளைகளை கடந்த 4 ஆண்டுகால திரு. பழனிச்சாமி ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் பார்த்தனர். திரு. வேலுச்சாமி போன்றவர்களின் கொள்ளையை பார்த்த பிறகும்கூட, ஆட்சி மீது மக்களுக்கு மிகப்பெரிய கோபம் இல்லை.!
காரணம், அப்பொழுது கவுன்சிலர்கள் இல்லை..!!!
அமைச்சர்கள் பணம் சம்பாதிப்பதை படித்து தெரிந்து கொள்ளும் மக்கள், கவுன்சிலர்களின் பொருளாதார வளர்ச்சியை, அடாவடியை நேரடியாக பார்த்து உணர்கின்றனர். சிலநேரங்களில் கவுன்சிலர்களால் அவதிக்கு உள்ளாகின்றனர்.!
இந்த கோபம்தான் ஆட்சியாளர்கள் மீது திரும்புகிறது.!
மக்களோடு நேரடியாக தொடர்புள்ள Revenue Department மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் நடவடிக்கை மட்டுமே...,
ஆட்சியின் கண்ணாடியாக இருக்கும்.!
எனவே, தேர்ந்தெடுக்கப்படும் எல்லா கட்சி பிரதிநிகளையும் கட்டுக்குள் வைத்தால் மட்டுமே அடுத்த முறையும் ஆட்சிக்கு வரும் கனவு பலிக்கும்.!
ஒவ்வொரு பிரதிநிதியும் பல லட்ங்கள் முதல் சில கோடிகளை செலவு செய்துள்ளனர்.!
அதனை பல மடங்காக மீட்டெடுக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.!
எனவே, இவர்களை கண்காணிக்க மண்டலம் வாரியாக துறையை ஏற்படுத்தினாலும் தவறில்லை என்றே எண்ணுகிறேன்.
அவர்களே நேரடியாக பண வேட்டையில் இறங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
தமிழ்நாட்டை வேட்டையாட பலவிதமான கழுகு கூட்டங்கள் மேலே வட்டமிட்டு கொண்டிருக்கின்றன.!
அந்த கழுகு கூட்டங்களிடமிருந்து எங்களை காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை, உங்கள் மீது எங்களுக்கு உள்ளது.!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக