வியாழன், 24 பிப்ரவரி, 2022

உள்ளடி வேலைகளால் முதல்வர் ஸ்டாலின் வேதனை?

 Josephraj V | Samayam Tamil  : தேர்தலில் அமோக வெற்றி பெற்றும் எந்த பலனும் இல்லை என கூறி முதல்வர் ஸ்டாலின் வேதனைப்பட்டதாக கூறப்படும் தகவல் திமுகவில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது.  
இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையானது நேற்று பிப்ரவரி 22ம் தேதி தமிழகம் முழுவதும் 279 மையங்களில் நடைபெற்றது. இந்த முடிவுகள் வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றியை பெற்றுள்ளன.
இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் முதலமைச்சர் மு.கஸ்டாலின் இந்த வெற்றியை கண்டு பெரிதும் மகிழவில்லை என்றே கூறப்படுகிறது.

இதற்கு பல்வேறு காரணங்களை திமுக முன்னணி நிர்வாகிகளே அடுக்குகின்றனர். அதாவது கடந்த ஆட்சியின்போது அதிமுக மற்றும் அதனை இயக்கி வந்ததாக கூறப்பட்ட பாஜக தமிழகத்தில் நீட் உள்ளிட்ட மக்கள் விரும்பாத திட்டங்களை திணித்து தங்கள் இஷ்டத்துக்கு விளையாடின.

அப்போதெல்லாம் மக்களின் கூக்குரலை கேட்ட அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்யப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தார்.

ஸ்ட்ராங் ரூமில் நுழைந்த திமுக?; ஓ..100 % வென்றது இப்படி தானா!

இந்த சூழலில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தபோது ‘தமிழகம் அமைதி பூங்காவாக திகழ ஆதரிப்பீர் உதயசூரியன்’ என்ற கோஷத்தை பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின் முன்னெடுத்தார்.

தமிழகத்தை அமைதி பூங்காவாக மு.க.ஸ்டாலின் மாற்றுவார் என மக்கள் நம்பியதால் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இதன் பலனாக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்றதை தொடர்ந்து, ஏற்கனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்முரமாக உள்ளார்.

நகராட்சியை கைப்பற்றும் பாஜக?; திமுக, அதிமுக செம ஷாக்!

இது, தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த வரவேற்புக்கு பிரதி உபகாரமாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்து அமோக வெற்றியை பரிசாக தந்துள்ளனர்.

இந்த வெற்றியை திமுகவினர் கொண்டாடி வரும் அதே சமயம் முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த செய்தி அவரை ரொம்பவே காயப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


அதாவது தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் ரவுடிகள் உருவாகிவிடுவார்கள் என்றும், திமுக நிர்வாகிகளே அராஜகத்தில் ஈடுபடுவார்கள் என்றும் பரவலாக ஒரு பேச்சு உள்ளது.

அந்த பேச்சுக்கு வலுசேர்க்கும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு சென்னை மாநகராட்சி அதிகாரியை திமுக எம்எல்ஏ கேபி.சங்கர் தாக்கிய சம்பவம் அமைந்தது.

0 ஓட்டு வாங்கிய அதிமுக; அதிர்ச்சியில் உறைந்த ஓபிஎஸ், எடப்பாடி!

இந்த விவகாரம் மக்களின் கோபத்தை தூண்டும் முன்பாகவே, அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்து, தமிழக அரசு அதிரடி காட்டியது. அப்பாடா... என பெரு மூட்டு விட்டபடி தேர்தலை சந்தித்த சூழலில் ஓரிரு இடங்களில் ரகளை செய்து திமுகவினர் கட்சி மேலிடத்துக்கு ஷாக் கொடுத்துள்ளனர்.

இதில் உச்சப்பட்ச அத்துமீறலாக சென்னை ஓடைக்குப்பம் 179வது வார்டு வாக்குச்சாவடியில் திருவான்மியூர் பகுதியை சேர்ந்த கதிர் என்ற திமுக பிரமுகர் கத்தியோடு வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தினார்.

அதேப்போல் நடந்து முடிந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் கூட்டணி தர்மத்தை மீறி, பல இடங்களிலும் திமுகவினர் போட்டியிட்டு கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

வரலாறு படைத்த இளம்பெண்; 100 ஆண்டுகளில் முதல் சாதனை!

இந்த விவகாரங்கள் குறித்து அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனையின் உச்சத்துக்கே சென்றதாக கூறப்படுகிறது. தந்தை கலைஞர் மறைவுக்கு பிறகு, இந்த ஆட்சியை பிடிக்க பட்டப்பாடு எனக்கு தான் தெரியும்.

அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சேர்த்து வைத்த செல்வாக்கை திமுகவினரே சீர்குலைய செய்து விடுவார்கள் போல இருக்கிறது. அப்படி இருக்கு போது இந்த வெற்றியை எந்த மனநிலையில் நான் கொண்டாடுவது? என்று மூத்த நிர்வாகிகளிடம் சொல்லி முதல்வர் ஸ்டாலின் வேதனைப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே திமுகவை கட்டுக்கோப்பாக வைத்து தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்க முதல்வர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையில் இறங்க உள்ளதாகவும், இதன் எதிரொலியாக பல்வேறு உத்தரவுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக