சனி, 26 பிப்ரவரி, 2022

போலாந்தை பிடிக்க தயாராகும் புட்டின்:செய்மதி படங்கள் கிடைத்துள்ளன என்கிறது அமெரிக்க

 tamilwin  : உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளடீமிர் புட்டின் அருகில் இருக்கும் நாடுகள் மீது போர் தொடுப்பார் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி பிலிங்கன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய படையினர் ஏற்கனவே போலாந்து எல்லையில் இருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் கனரக ஆயுதங்களை குவித்து வருவதை செய்மதி படங்கள் ஊடாக காண முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெலாரஸில் உள்ள பிரெஸ்ட் நகரில் அதிகளவிலான ரஷ்ய ஆதரவு படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ ரஷ்ய ஜனாதிபதி சில நேரம் உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர், அத்துடன் நிறுத்தாமல் போகலாம். உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் அருகில் உள்ள நாடுகளான போலாந்து, ஸ்லோவக்கியா, ஹங்கேரி, ருமேனியா வரை போரிடும் என்றால், அது நேட்டோ நாடுகள் மீதான ஆக்கிரமிப்பாக கருதப்படும்.


அப்படி நடந்தால், அது அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், கனடா உட்பட நேட்டோ அமைப்பின் நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுப்பதாக அமையும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால், நேட்டோ அமைப்பின் யாப்பின் 5வது ஷரத்திற்கு அமைய கடும் முடிவை எடுக்க நேரிடும்“ என அமெரிக்க ராஜாங்க செயலாளர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பீரங்கிகள் உட்பட கனரக ஆயுதங்கள், போர் தளபாடங்களுடன் கூடிய 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பெலாரஸின் பிரெஸ்ட் நகரில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் ரெயில்கள் மூலம் மேலும் போர் தளபாடங்கள் கொண்டு செல்லப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக