செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

சென்னை 200 வார்டுகளில் 178 மாமன்ற வார்டுகளில் வரலாறு காணாத வெற்றி ..

May be an image of text that says 'தேர்தல் முடிவுகள்- 2022 மாநகராட்சி வார்டு உறுப்பினர் (மொத்த எண்ணிக்கை: 1374) மாநகராட்சி வார்டு உறுப்பினர் (சதவீதம் வாரியாக) அறிவிக்கப்படாதது (0.29%) வேட்பு மனு தாக்கல் இன்மை (0.00%) தேர்தல் தள்ளி வைப்பு (0.07%) தேர்தல் ரத்து (0.00%) அ.இ.அ.தி.மு.க(11.94%) அ.இ.தி.கா பி.எஸ்.பி (0.00%) பி.ஜே.பி (1.60%) சி.பி.ஐ (0.95%) சி.பி.ஐ(எம்) (1.75%) தே.மு.தி.க (0.00%) தி.மு.க (69.00%) இ.தே.கா (5.31%) என்.சி.பி (0.00%) தே.ம.க(0.00%) மற்றவை (9.10%)'

Venkat Ramanujam  : பலர் ஐயையோ ஒரு வார்டில் பாஜக  சென்னை மாநகராட்சியில் ஜெயித்து விட்டது .. இனி என்ன ஆகுமோ..
என நேரடியாக புலம்புவதை பார்த்ததும்.. திமுக கூட்டணி எப்படி இதை எப்படி கோட்டை விட்டது என்று கோபத்துடன் கேட்பதை பார்த்ததும்..
வருத்தம் வரவில்லை புன்சிரிப்பு  மட்டுமே வருகிறது..
காரணம்..
 மொத்தமாக 21 மாநகராட்சியில் இட ரீதியாக கட்சிகள் பெற்ற விகிதாசாரம் முறையே:
திமுக : 69%
அதிமுக: 12%
காங்கிரஸ் : 5.3%
சிபிஎம்: 1.75 %
பாஜக : 1.6%
உண்மைதான் உலகத்திலே பணக்கார கட்சியான பாஜக ..  மேற்கு மாம்பலத்தில் அந்த ஒரு வார்டில் மட்டுமே 50 லட்ச ரூபாயை செலவு செய்து உள்ளதாக செய்திகளை நாதுராம் கோட்சே புத்திரிகள் மறுக்கவில்லை..
தனக்கென்று கொள்கைகள் ஏதும் இல்லா நாம் தமிழர் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தினகரன் கட்சி  விஜயகாந்த் கட்சி இவர்களைக் காட்டிலும் .. தீவிர இந்துத்துவா கொள்கையை போதிக்கும் #பாஜக முந்தி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை..
ஆனால் வெறும் ஒன்றரை பர்சன்டேஜ் வைத்துள்ள கட்சியை 70% உள்ள கட்சியுடன் ஒப்பிடுவது . .


இடையில் ..  
பாஜகவை விட அதிக சதவீதம் வாக்குகள் வைத்திருக்கும் இருக்கும் அதிமுக காங்கிரஸ் மற்றும் சிபிஎம் போன்ற கட்சிகளை அவமானப்படுத்தும் செயலாக தானே இருக்க முடியும்..
கோவையில் மாமன்ற தேர்தலில் அறுபத்தி ஏழு வார்டில் டெபாசிட் தொலைத்து விட்டது பாஜக..
எங்கள் கோட்டை தனி கொங்குநாடு என்று கொக்கரித்த பாஜக..
இப்போது என்ன ஆயிற்று.. கொங்கு மண்டலத்தில் சத்தமாக துடைத்து எடுக்கப்பட்டுள்ளது பாஜக..அதை நாம் பேசலாமே..
அதிகமாக இந்துக்கள் உள்ள கிருஷ்ணகிரியில்  இருபத்தி ஒன்பது இடங்களில் நின்று அதில் இருபத்தி ஏழு இடத்தை டெபாசிட் தொலைத்து விட்டது பாஜக .. அதை நாம் பேசலாமே....
சென்ற தேர்தலில் பாஜக தனியாக நின்று வென்ற வார்டு மெம்பர் களை விட இந்த முறை குறைவாக (308  / 12838) அதாவது ஜஸ்ட் 1.6% மட்டுமே பெற்று ..
அதிலயும் 200 வார்டுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே  பெற்றதால்..
17 ஸ்டேட் ஆளும் பாஜக வை தமிழ்நாட்டில் மக்கள் மாநில கட்சியாக கூட இல்லை  குமரி மட்டும் உள்ள மாவட்ட கட்சியாக சுருக்கி விட்டார்களே..அதை நாம் பேசலாமே..
இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டு கடந்த எம்எல்ஏ தேர்தலை பார்ப்போம் என்றால் பாஜக அதில் மூன்று எம்எல்ஏக்களை தொலைத்து இருப்பது கண்கூடு தானே..அதையும்  நாம் பேசலாமே..
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தனியாக நின்றால் தான் இந்த பாதிப்பு..
உணர்ந்துகொண்டு கூட்டணி பலத்தை மனதில் வைத்துக்கொண்டு இனி ஒற்றுமையுடன் செயல்பட்டால்..
கன்னியாகுமரியில் அடிப்பட்ட பாம்பாக சுருங்கி இருக்கும் பாஜகவை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிந்து விடலாம் என்பதை கடந்த கால தேர்தல் புள்ளி விவரங்கள் நமக்கு தெரிவிக்கின்றனவே..
இதை செய்யாமல் சும்மா கீரல் விழுந்த ரெக்கார்டு மாதிரி..
அந்த காலத்து கண்ணீர் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற கே ஆர் விஜயா மாதிரி ..
என்னங்க என்னங்க இப்படி ஆச்சே  என்று அழுது குழம்பி கொண்டே இருந்தால் எப்படி..
இருக்கும் 200 வார்டுகளில் 178 சென்னை மாமன்ற வார்டுகளை வரலாறு காணாத விதமாக தட்டிக் தூக்கிய திமுக கூட்டணி வெற்றி யை கொண்டாடும் நேரத்தில் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக