வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

மு.க.ஸ்டாலினின் சகாப்தம் இங்கே நிலைத்திருக்கும்!” : Deccan Chronicle தலையங்கத்தில் புகழாரம்

“மு.க.ஸ்டாலினின் சகாப்தம் இங்கே நிலைத்திருக்கும்!” : Deccan Chronicle தலையங்கத்தில் புகழாரம்!

கலைஞர் செய்திகள் - பிரேம் குமார்  : வாக்காளர்களின் நம்பிக்கையால் ஸ்டாலினின் சகாப்தம் இங்கே நிலைத்திருக்கும் என்று “டெக்கான் கிரானிக்கல்’’ ஆங்கில நாளேடு தனது தலையங்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.கழகம் பெற்றுள்ள வரலாறு காணாத வெற்றியின் மூலம், வாக்காளர்களின் நம்பிக்கையால் ஸ்டாலினின் சகாப்தம் இங்கே நிலைத்திருக்கும் என்று “டெக்கான் கிரானிக்கல்’’ ஆங்கில நாளேடு தனது தலையங்கத்தில் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
இதுகுறித்து “டெக்கான் கிரானிக்கல்’’ ஆங்கில நாளேடு தனது நேற்றைய (24.2.2022) இதழில் “ஸ்டாலின் சகாப்தம் இங்கே நிலைத்திருக்கும்!’’ என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-


நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியுள்ளது!

நகர்ப்புற உள்ளாட்சிமன்றத் தேர்தல்களில் தி.மு.கழகத்தின் ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறிந்த வெற்றி தமிழ்நாட்டின் வரலாற்றில் முன் எப்போதும் காணப்படாத ஒன்றாகும்; அது மக்களின் மனங்களில் ஆதிக்கம் செலுத்தியிருந்த நம்பிக்கைகள் மற்றும் அச்சங்களின் வெறும் பிரதிபலிப்பாகும். தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் அவர்கள், “இதுவும் ஆட்சிப் பொறுப்பில் கடந்த 9 மாதங்களாக நடத்திய திராவிட மாடல் ஆட்சிக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம்’’ என்று கூறியுள்ளார். ஆனால், தொடக்கத்தில் பொருளாதார வளர்ச்சிக் கும், சமூக நீதிக்கும் ஒரு தெளிவான சமநிலையை உருவாக்கிய திராவிட மாடல், சமுதாய வெறுப்பில் ஊறவைக்கப்பட்டு சிதைக்கப்பட்ட சமுதாயத்தில் எந்த மேம்பாடும் ஏற்பட முடியாது என்பதால் சமய நல்லிணக்கத்தையும் வலியுறுத் தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம், மு.க.ஸ்டாலின் அவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, அரசு தன்னுடைய குறி வைக்கப்பட்ட குறிக்கோளான ஆயிரம் லட்சம் கோடி (டிரில்லியன்) டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை உறுதிப்படுத்த சரியான எல்லாவற்றையும் மேற்கொண்டது மட்டுமின்றி, மதச்சார்பின்மை மதிப்பீடுகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பிரதான பகுதியின் சாராம் சத்தை அபகரிப்பதற்காக மூடநம்பிக்கை கொண்ட குழுக்களால் தூண்டி விடப்படும் சமூக எழுச்சிகளைத்தடுத்தும் வந்துள்ளது. ஒரு அரசியல் கட்சியால் ஆதரிக்கப்படும் சுய நலக் கும்பல்களால் விஷம் கக்கப்படுவதால் பாரம்பரியமாக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களின் ஒட்டு மொத்த உளப்பான்மையை இது இசையச் செய்து விடும் என்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் நகர்ப்புற வாக்காளர்களிடையே தங்கள் நம்பிக்கையை ஆளும் கட்சி மீது மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரு காரணமாகும்.

தமிழ்நாட்டின் தனித்தன்மை நிரூபணம்!

நாடு அரசியல் கடைசலின் மத்தியில் இருக்கும் ஒரு காலக்கட்டத்தில், தங்களுடைய முன்னுரிமைகளை எப்போதுமே கொள்கை அடிப்படையில் கொண்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டு, மீண்டும் ஒரு முறை தாங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். தொற்று முடக்கத்தை திறமையுடன் கையாண்ட, அது ஆட்சிக்கு வந்த காலக் கட்டத்தில் கடுமையாக இருந்த அந்தத் தொற்று முடக்கத்தை திறமையுடன்கையாண்ட, முதல் அமைச்சர் தலைமையில், அவரே முன்னணியில் நின்று போர் நடத்தியதன் மூலம் பேரழிவு தரக்கூடிய வெள்ள அபாயத்தை சிறு நகர்களிலும், பெரும் நகரங்களிலும் தடுத்து நிறுத்திய தற்போதைய அரசின் மீது தங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தியதன் மூலம் நல்லாட்சியின் சிறப்புகளை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதாக குறிப்பிட்டது.

கூட்டங்களில் மக்களைச்சந்திக்க வெட்கப்படுகிறார் என்பது போன்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் வாக்காளர்களின் உள்ளத்தில் ஒட்டவில்லை ஏனெனில் வாக்காளர்கள் தற்போதைய அரசின் கீழ் சிறப்பான நாட்கள் வர விருக்கின்றன என்று நம்புகிறார்கள் ஸ்டாலினின் சகாப்தம் இங்கே நிலைத்திருக்கப் போகிறது” எனத் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக