வியாழன், 24 பிப்ரவரி, 2022

குளித்தலை திமுக எம்.எல்.ஏ மாணிக்கத்திற்கு பிடி ஆணை

பரக

‎நக்கீரன் செய்திப்பிரிவு  : குளித்தலை திமுக சட்டமன்ற உறுப்பினரிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் விரைவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை எம்எல்ஏவாக இருப்பவர் மாணிக்கம். திமுகவைச் சேர்ந்த இவர் மீது செக் மோசடி தொடர்பான ஒரு வழக்கு கரூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் மாணிக்கத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே மூன்று முறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் நேரில் வராத காரணத்தால் அவருக்கு தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கரூர் திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக