திங்கள், 21 பிப்ரவரி, 2022

சித்ரா ராமகிருஷ்ணன் + ஆனந்த் சுப்பிரமணியன்= தேசிய பங்கு சந்தையில் மெகா ஊழல்...

May be an image of 2 people

Senthilraj Thiraviyam  :  இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பங்கு சந்தையில் ஒரு மெகா ஊழல் நடந்து இருக்கிறது.
ஆனந்த் சுப்பிரமணியன் என்ற பார்ப்பனர்  சித்ரா ராமகிருஷ்ணன் என்ற NSE யின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனரை மத நம்பிக்கையில் வசியம் செய்து தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு போலியான ஈ மெயில் முகவரியை உருவாக்கி இமயமலையில் இருக்கும் யோகியிடம் இருந்து கட்டளைகள் வருவது போன்று இவனே அனுப்பி ஒரு சாதாரண வேலையில் ஆண்டுக்கு 15 லட்சங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவன் சித்திரா ராமகிருஷ்ணனின் மூலம்  1.68 கோடிகள் சம்பளத்துக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே மிகப்பெரிய பங்கு வர்த்தக மையங்களுள் ஒன்றான என் எஸ் சியின் ஆலோசகராக நுழைந்து விடுகிறான்.  
அந்நியன் படத்தில் விக்ரம் அம்பி அந்நியன் ரெமோ என்று வேறு வேறு அவதாரம் எடுப்பது போன்ற ஒரு சினிமாத்தனமான நிகழ்வு உண்மையில் நடந்தேறி இருக்கு.


பின்னர் ஒரே ஆண்டில் 4.4 கோடி சம்பள உயர்வு பெற்றதும் அல்லாமல் பங்குச் சந்தையின் எந்த நிறுவனங்கள் என்ன செய்யப்போகின்றன என்ற முக்கியமான தகவல்களை வேண்டியவர்களுக்கு கசிய விட்டு அதன் மூலம் மற்றவர்கள் வாங்கும் முன்னரே குறைந்த விலையில் நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்து பல்லாயிரம் கோடிகளை மர்ம நபர்கள் ஆதாயம் தேடியது பற்றி எல்லாம் இப்போது புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
மதம் மனிதர்களை எப்படி மடையர்களாக்குகிறது என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. கோவில்களில் பூஜை செய்யும் பூசாரிகள் மக்களை ஏமாற்றும் வழக்காமான ஒரு சிறிய பார்முலாவை பெரிய அளவுக்கு ஒரு தேசிய பங்கு சந்தையில் நிகழ்த்தி இருக்கிறார்கள்.
கடவுள் இருக்கு என்று சொல்பவன் ஏமாளி. கடவுள் இல்லை என்று சொல்பவன் புத்தி சாலி. நான் கடவுள் என்று சொல்பவன் நாட்டுக்கே மிகவும் ஆபத்தானவன்.
இந்தியாவின் GDP போன்று ஒன்றரை மடங்கு வர்த்தகம் செய்யும் ஒரு தேசிய பங்குச் சந்தையின் பாதுகாப்பு விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டிருக்கு. பத்து லட்சம் ரூபாய் ஆலோசனை கட்டணம் பெற்றார் என்ற ஒரே குற்றச்சாட்டின் பெயரில் நூறு நாட்களை சிறையில் கழித்தார் நமது முன்னாள் நிதி அமைச்சர். ஆனால் இந்தியா மீது ஒரு மிகப்பெரிய பொருளாதார போர் செய்து இருக்கிறார்கள் இந்த பார்ப்பனர்கள். அவர்களுக்கு இன்னும் தண்டனைகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஒரு கைது நடவடிக்கை கூட இல்லை. குறைந்த பட்ச தண்டனையாக சுயமாக ராஜினாமா செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு லீவு காசை சரண்டர் செய்து பெற்றுக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறதாம். அடேங்கப்பா எவ்வளவு பெரிய தண்டனை அந்த அம்மணிக்கு.
இதைத்தான் ஆ ராசா ஒவ்வொரு முறையும் குறிப்பிடுகிறார். தலித் என்பதாலேயே இல்லாத ஒரு ஊழலை இந்த பார்ப்பனர்களும் பார்ப்பன மீடியாக்களும் ஊதி பெரிதாக்கி காட்டுகிறார்கள் என்பார். உண்மையில் பார்ப்பனர்களின் ஊழல்கள் பவானி ஜமுக்காளங்கள் போட்டு மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.
இன்றளவும் ஜெயலலிதாவின் இமாலய ஊழல் எந்த பார்ப்பன மீடியாவிலும் பேசப்படாது. ஆனால் கலைஞர் செய்யாத ஊழலைக் கூட செய்தார் என்று பேசு பொருளாக்குவதே பார்ப்பனர்களின் வேலை.
இப்போது நடந்திருக்கும் ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்து இருந்தால் இந்நேரம் ஸ்மிரித்தி இராணி குஷ்பூ போன்றவர்கள் இந்திய பிரதமரின் வீட்டின் முன்னால் போராடிக்கொண்டு இருந்திருப்பார்கள். அவரை ராஜினாமா செய்யச் சொல்லி தங்களது வானர பரிவாரங்களுடன் அவருடைய வீட்டை முற்றுகை இட்டு இந்த உலகையே திரும்பிப் பார்க்க செய்து இருப்பார்கள். இந்தியாவை செயல்பட விடாமல் செய்து இருப்பார்கள். ஹெச் ராஜா போன்றவர்கள் ஸ்டாலின் வீட்டின் முன் கொடி பிடித்து இவர்களுக்கும் கொள்ளையில் பங்கு என்று பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள். நல்ல வேளை நாமெல்லாம் மோடியின் அச்சே தினத்தில் ஒரு பிரச்சனையும் இல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்போதே இந்த மெகா ஊழலின் பின்னணியில் இருக்கும்  ஆனந்த சுப்பிரமணியன் என்ற யோகி என்ற கஞ்சனின் நாக்பூர் தொடர்புகள் கண்டறியப்பட்டு தேர்தலில் பேசு பொருளாக்கப்படவேண்டும். பஜகவை  வீழ்த்த கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பை எதிர் கட்சிகள்  பயன்படுத்திக் கொள்ளுமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக