புதன், 23 பிப்ரவரி, 2022

கோவை தேர்தல் முடிவுகள்! சுயேச்சைகளின் கை ஓங்கியது...

   tamil.samayam.com : கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 802 பதவிகளுக்கு கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கையானது 17 மையங்களில் நேற்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஒத்தையில நிக்குறேன்; உரசி பார்க்காதே; மிரட்டும் காட்டு யானையின் வீடியோ! கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதால் இந்த மண்டலத்தில் உள்ள சேலம், கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஐந்து மண்டலங்களையும் கைப்பற்ற ஆளும் திமுக அரசு பல்வேறு வியூகங்களை வகுத்தது.

குறிப்பாக கோவை மாநகராட்சியை கைப்பற்ற அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், சேலம் மாநகராட்சியை கைப்பற்ற அமைச்சர் கே.என்.நேருவுக்கு அசைண்மெண்ட் கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை ஏற்றுக்கொண்டு இருவரும் பம்பரமாய் சுழற்றி கட்சிப்பணியாற்றினர்.

அதன் பலனாக சேலம், கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 21 மாநகராட்சிகளையும் அதிமுக தனது வசமாக்கியுள்ளது. அதிமுக மற்றும் பாஜகவுக்கு செல்வாக்கு மிகுந்த கோவை மாநகராட்சியை பிடித்து திமுக தனது பலத்தை நிரூபித்துள்ளது.
கோவை மாநகராட்சி தேர்தல் முடிவுகள்:அதிமுகவின் கோட்டையை தகர்த்த செந்தில் பாலாஜி!

இருப்பினும், பல்வேறு இடங்களில் ஆளும் திமுக அரசு குறைந்த அளவிலான வாக்குகளையே பெற்றுள்ளது. இது அக்கட்சினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக மேப்பேரிபாளையம் பேரூராட்சி தேர்தல் முடிவு ஆளும் திமுக அரசையும், கோவையில் செல்வாக்கு மிகுந்த அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மோப்பேரிபாளையம் பேரூராட்சி வரும் சூலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது.
mopperipalayam town panchayat

மேப்பேரிபாளையம் பேரூராட்சி மொத்தமுள்ள 15 வார்டுகளில் சுயேச்சைகள் 10 வார்டுகளில் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தனர். ஆளும் திமுக வேட்பாளர் 5 வார்டுகளில் வெற்றி பெற்றனர். அதிமுக வேட்பாளர்கள் ஒரு வார்டுகளில் கூட வெற்றி பெறாததால் அக்கட்சியின் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக