வியாழன், 24 பிப்ரவரி, 2022

4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்! கீழக்கரை

 கலைஞர் செய்திகள்  : ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் காஜாமுகமது. இவர் கடந்த 2011ஆம் ஆண்டு நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் இவரை போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா வழங்கியுள்ளார்.
அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காஜா முகமதுவிற்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும், சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சிறுமிக்கு ரூ.3 லட்சம் வழங்க தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். இந்த தீர்ப்பை அடுத்து போலிஸார் காஜா முகமதுவை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக