ஆந்திரா சிறையில் உள்ள தமிழர்களை மீட்க திமுக வழக்கறிஞர்களை நியமிக்கிறது!

சென்னை: ஆந்திரா சிறைகளில் வாடும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் தி.மு.க. வழக்கறிஞர்கள் உடனே ஈடுபடுட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
 கேள்வி : ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலையைத் தொடர்ந்து மேலும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் வாடிக்கொண்டிருப்பதாக அவர்களின் உற்றார் உறவினர்கள், "நமக்கு நாமே" பயணம் மேற்கொண்டுள்ள கழகப் பொருளாளர், தளபதி மு.க.ஸ்டாலினைப் பார்த்து கதறியிருக்கிறார்களே? 
  பதில் : "கேள்வி - பதில்" பகுதியில் இதைப் பற்றி நான் ஏற்கனவே விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன். ஆந்திராவில் இருபது தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு செய்திகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசிலே இருப்போர், ஆந்திர முதல்வருக்கு இது குறித்து ஒரு கடிதத்தை எழுதியதுடன் தங்கள் பணி முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தாய்மையை பெருமை படுத்தும் நடிகை கஸ்துரியின் புகைப்படங்கள்!

தாய்மைக்கு பெருமை சேர்த்த நடிகை கஸ்தூரி;
புகைப்படக்காரர் ஜெடி பெல்
என்பவர் ‘தாய்மையின் தேகங்கள்’ என்ற தலைப்பில் பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். இதற்கு உலகெங்கும் உள்ள 80 தாய்மார்கள் நிர்வாணமாக காட்சியளிக்க முன்வந்துள்ளனர். பிரசவகால பெண்களுக்கும், குழந்தைப் பெற்ற பெண்களுக்கும் இந்த புகைப்படங்கள் அர்பணிக்கப் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில், பிரபல நடிகை கஸ்தூரியும் ஒருவராக இருக்கிறார்.
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் கஸ்தூரி. பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ‘இந்தியன்’ படத்தில் கமலுக்கு தங்கையாக நடித்து தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தார். இவர் ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் திரைப்படங்களில் நடித்து வந்தார் கஸ்தூரி. சமீபத்தில் வெளியான ‘வடகறி’ படத்தில் ஜெய்க்கு அண்ணியாக நடித்தார்.இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தன் குழந்தையை அணைத்தப்படி நிர்வாணமாக உள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் இது பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிர்வாண புகைப்படம் பற்றி நடிகை கஸ்தூரி இணையதளத்தில் விளக்கமும் அளித்துள்ளார்.அதில், குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்கள் அழகு குறைந்துவிடுவதாக நினைக்கிறார்கள்.

வைகோ பாடிய ஊத்தி கொடுத்த உத்தமி...தள்ளாடுது தமிழகம்...சவால் விட்ட வைகோ!

திருச்சி: "ஊருக்கு ஊர் சாராயம், தள்ளாடுது தமிழகம், ஊத்தி கொடுத்த உத்தமி, போயஸ் கார்டனில் உல்லாசம் என்ற பாடலை நான் தற்போது பாடியுள்ளேன் முடிந்தால் என் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரட்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீதான கொலை வெறி தாக்குதல், கருத்துரிமை மீதான தாக்குதல்களை கண்டித்து மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.  அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ, நாடு முழுவதும் சங்பரிவார் அமைப்புகளால் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடைபெறும் கொலை வெறி தாக்குதல்களால் இந்திய ஜனநாயகத்துக்கே பேராபத்து ஏற்பட்டுள்ளது.

India Nepal நேபால் சீனாவுடன் நெருக்கம்..இந்தியாவுடன் உறவில் விரிசல் ஏன்? தினமணி

இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு ஏற்படும் மிகப்பெரிய பின்னடைவு! ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா நெருக்கம் வளர்க்கும் அதேவேளையில் நேபாளம் நம்மை விட்டு விலகிச் செல்கிறதோ என்று தோற்றமளிப்பதுபோல, சீனாவிடம் பெட்ரோலியப் பொருள்களை வாங்குவதற்கு நேபாள அரசு சில நாள்களுக்கு முன்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
 பெட்ரோலியப் பொருள்களின் அளவு எவ்வளவு, என்ன விலை கொடுத்து வாங்க இருக்கிறார்கள் என்ற விவரங்களை நேபாள அரசு வெளியிடவில்லை. ஆனால் முதல் கட்டமாக, 1,000 டன் பெட்ரோலியப் பொருள்களை சீனா உடனடியாக வழங்கவுள்ளது. இதன் மூலம், பல பதின் ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருள்களை நேபாளத்துக்கு வழங்கி வந்த வணிகத் தனித்தன்மையை இந்தியா இழக்கத் தொடங்கியுள்ளது. தற்போது நேபாளத்துடன் சீனா நெருங்கி வரத் தொடங்கியிருப்பதன் அறிகுறிதான் இந்த ஒப்பந்தம்.

கோவன் கைதுக்கு கொந்தளிக்கும் மக்கள் Who is this kovan? ..தலைவர்கள்..ஊடகங்கள்...தமிழகத்தையும் தாண்டிய புயல் .....

சென்னை: ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தேசபக்தி பாடல்களைப் பாடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் டாஸ்மாக் கடையை மூடச்சொல்லி பாடல் இயற்றி பாடிய கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே நாள் இரவில் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவனின் கைது.
யார் இந்த கோவன்? என்று கேட்டால் இவரை தமிழ்நாட்டின் ‘கத்தார்' என்று செல்லமாக அழைக்கின்றனர்.  "இட்லி ஒத்த ரூபா... கக்கூஸூ 5 ரூ.... சாப்பாடு 5 ரூபா.... பருப்பு 100 ரூபா" என்று இன்றைய நிலையை இயல்பாக பாடும் கோவன், கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். விவசாயக் கூலி தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த கோவனுக்கு அம்மா பாடும் பாடல்கள்தான் இன்ஸ்பிரேசன். ஐ.டி.ஐ. படிப்பை முடித்துள்ள கோவன், 1996ம் ஆண்டு திருச்சி பெல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அவருக்கு நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில்தான் ஆர்வம் அதிகரித்துள்ளது.

எகிப்து : 224 பயணிகளுடன் ரஷ்ய விமானம் Metro Jet வெடித்து சிதறியது...சுமார் 100 உடல்கள்...

217 பயணிகள், 7 ஊழியர்களுடன் சென்ற ரஷ்ய விமானம் சினாயில் விபத்துக்குள்ளானதாக எகிப்து பிரதமர் ஷெரிப் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். எகிப்தின் ஷாம் அல் - ஷேக் நகரிலிருந்து ரஷ்யாவின் செயின்ட் பிட்டர்ஸ்பெர்கிர்க்கு சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ரஷிய சுற்றுலா பயணிகள் என தெரிய வருகின்றன. முதலில் அந்த விமானம், ஷினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனையடுத்து, துருக்கி விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட அந்த விமானம், பத்திரமாக இருப்பதாக மற்றொரு தகவல் வெளியானது. இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று எகிப்து நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.நக்கீரன்.com

தேசிய விருதை திருப்பி கொடுக்கிறார் இயக்குனர் அருண்மொழி ..கோபன் கைதுக்கு எதிர்ப்பு..ஏழாவது மனிதன் திரைப்பட ....

சென்னை மது ஒழிப்பிற்காக "டாஸ்மாக்கை மூடு" என்ற பாடலை இயற்றி பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஏழாவது மனிதன் திரைப்படத்திற்காக தமக்கு அளிக்கப்பட்ட தேசிய விருதை திரும்பத் தருவதாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் அருண்மொழி. "மூடு டாஸ்மாக்கை..!" என மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை கையிலெடுத்துவரும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் அமைப்பான 'மக்கள் அதிகாரம் அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் ஒரு அம்சமாக   "மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு, இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சி சாகணும், எத்தனை தாலிகள் அறுக்கணும், மூடு டாஸ்மாக்கை மூடு"  எனும் பாடலை வெளியிட்டு,  அதை கலை வடிவத்தில், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதிநாடகமாக  நடத்தி வந்தார்கள்.

டாஸ்மாக் பாட்டுக்கு இவ்வளவு பயமா? கோவன் கைது...இந்திய அளவில் கண்டனம்..சும்மா அதிருதில்ல...

“சும்மா பேசியதற்காக நரேந்திரா தபோல்கர், பன்சாரே கொல்லப்பட்டார்கள், சும்மா எழுதியதற்காக கல்பர்கி கொல்லப்பட்டார், இதோ பாடலைப் பாடியதற்காக கோவன் சட்டவிரோத கைது”

1. In English Press

கிறிஸ்தவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்...லெபனானில் அவர்கள் சிறுபான்மையாகி விட்டார்கள்.......


வில்லியம் டேல்ரிம்பிள்  :tamil.thehindu.com/opinion/columns :
அரபு கிறிஸ்தவர்களின் கண்ணீர்க் கதை! தங்கள் வசிப்பிடங்களை விட்டு அகதிகளாகப் புகலிடம் தேடிச் செல்லும் அரபு கிறிஸ்தவர்களின் கண்ணீர்க் கதை.
அரபு நாடுகளில் பல்வேறு இன்னல்களுக்கு இடையே வாழும் சுமார் 12 லட்சம் கிறிஸ்தவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகள் மிகுந்த சோதனையும் வேதனையும் நிறைந்த ஆண்டுகளாகும். எகிப்து நாட்டில் ஏற்பட்ட புரட்சியும் - எதிர்ப் புரட்சியும், கிறிஸ் தவர்களுக்கு எதிரான கொலைகளும், தேவாலய எரிப்புகளுமாக முடிந்தன. காஸாவிலும் மேற்குக் கரையிலும் பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாகத் தங்களுடைய வசிப்பிடங்களை விட்டு, அகதிகளாகப் புகலிடம் தேடிச் செல்கின்றனர். இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு குடியமர்த்தும் இஸ்ரேலியர்களுக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த பாலஸ்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
சிரியா நாட்டில் பெரும்பாலான மோதல்கள் சன்னிகள் - ஆலவைட்டுகளுக்கு இடையில்தான். ஆனால், மக்கள்தொகையில் வெறும் 10% ஆக இருக்கும் கிறிஸ்தவர்கள், பாலியல் வல்லுறவுக்கும் படுகொலை களுக்கும் ஆளாகிறார்கள். தப்பிக்க முடிந்தவர்கள் லெபனான், துருக்கி, ஜோர்டானில் உள்ள அகதி முகாம் களை நோக்கி ஓடுகின்றனர். அலெப்போ நகரைச் சேர்ந்த பழமையான ஆர்மீனியச் சமூகம், ஒட்டுமொத்தமாக எரீவானை நோக்கிச் செல்கிறது.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

தமிழக முதல்வர் ஜெயலலிதா ! காதற்ற ஊசியும் வாராதுகண்...பட்டினத்தார்!

Jayalalithaa withdraws orders against Sasikalasavukkuonline.com :காதற்ற ஊசியும் வாராதுகண் கடைவழிக்கே என்றார் பட்டினத்தார். ஆனால், இந்த மனிதசமூகத்தின் காதுகளில் இவையெல்லாம் ஏறுகிறதா என்ன ?

ஊழல் இச்சமூகத்துக்கு எத்தகைய தீங்கு பயப்பிக்கக் கூடியது என்பதை, பாலகிருஷ்ண தத்தாரேயா என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
“Corruption is not only a punishable offence but also undermines human rights, indirectly violating them, and systematic corruption, is a human rights’ violation in itself, as it leads to systematic economic crimes.”
ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறுகிறது. கவனமாக செய்யப்படும் ஊழல் எனபது, மனித உரிமைகள் மீறல் மட்டுமல்ல, அது, தொடர்ந்த பொருளாதாரக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய நீதி நாயகன் மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார். தமிழ் மக்களின் சிந்தனையில் எதோ ஒரு அடிப்படை கோளாறு இருக்கிறது அங்கேயும்  அப்படித்தாய்ன் முட்டாள்தனமாக அழிவுப்பாதையில் போயி அழிந்தார்கள்... இங்கேயும் அப்படித்தாய்ன் கொள்ளை அடிப்பவர்களை அம்மா அம்மம்மா என்கிறார்கள்.....

சமந்தா ரத்னம் 6 வயதில் அரசியல் அகதியாக வந்த தமிழ் பெண் ஆஸ்திரேலியாவில் மேயர்.... மோர்லாண்ட் நகரின்...

அவுஸ்திரேலிய நகர் ஒன்றில் இலங்கைப் பெண் ஒருவர் மேயராகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகரின் மேயராக இந்த இலங்கைப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பிறந்த குறித்த பெண் போர் காரணமாக பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார். கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா ரட்னம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராகத் தெரிவாகியுள்ளார். தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து சமாந்தா தோதலில் வெற்றியீட்டியுள்ளார். இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் மேயர் பதவிக்காக போட்டியிட்ட சமந்த வெற்றியீட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா குடும்பத்தினர், 1989ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் சென்று குடியேறியுள்ளனர். தமக்கு ஆறு வயதான போது அவுஸ்திரேலியா வந்ததாகவும், 83ம் ஆண்டு கலவரம் தமக்கு நினைவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
A MIGRANT whose family fled Sri Lankan riots for a better life has been elected Moreland’s first Greens mayor.

பால்லியல் வன்முறை கொலைக்கு மரணதண்டனை விதித்தது மும்பை நீதிமன்றம்

மும்பையில் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட
வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த எஸ்தர் அனுசுயா (23), கடந்த ஜனவரி மாதம் அவரது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்குச் சென்றுவிட்டு ரயிலில் மும்பை குர்லா ரயில் நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து அவர் அந்தேரி செல்ல வேண்டும்.
அப்போது அங்கு காரில் வந்த சந்திரபன் சனாப் ரூ.300 அளித்தால் அந்தேரியில் இறக்கிவிடுவதாகக் கூறினார். எஸ்தர் அனுசுயா அந்தக் காரில் ஏறிச் சென்றுள்ளார். ஆனால், பந்தூப் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அனுசுயாவை பலாத்காரம் செய்த சந்திரபன் அவரை கொலை செய்து முட்புதரில் வீசினார்.

தோழர் கோவன் நள்ளிரவில் கைது ....டாஸ்மாக்கை எதிர்த்து பாட்டா பாடுகிறாய் ?

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிப்பாடகர் தோழர் கோவன் நேற்று நள்ளிரவு இரண்டே முக்கால் மணிக்கு, திருச்சியில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரைக் கைது செய்வதற்கென்றே சுமார் பத்துபேர் கொண்ட சைபர் கிரைம் போலீசின் தனிப்படை ஒன்று சென்னையிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. may-day-kovilpatti-kalai-2 மே நாள் நிகழ்ச்சியில் தோழர் கோவன் அதே நேரத்தில் தஞ்சையில் தோழர் காளியப்பனின் வீட்டிற்குள் கொல்லைப்புறமாக சுவரேறிக் குதித்து உள்ளே நுழைந்திருக்கிறது சென்னையிலிருந்து சென்ற இன்னொரு தனிப்படை. வீட்டில் அவர் இல்லை. தனியே இருந்த அவரது மனைவியை மிரட்டிப் பார்த்துவிட்டு பயனில்லாததால் காளியப்பனைக் கைது செய்ய தஞ்சையிலேயே முகாமிட்டிருக்கிறது தனிப்படை. தனிப்படை அமைத்து நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் அளவுக்கு இவர்கள் செய்த பயங்கரவாதக் குற்றமென்ன?
kaliyappan கூட்டம் ஒன்றில் உரையாற்றுகிறார், தோழர் காளியப்பன். டாஸ்மாக்கை எதிர்த்து இரண்டு பாடல்கள் பாடியதுதான் கோவன் செய்த குற்றம். அவர் பாடிய மூடு டாஸ்மாக்கை என்ற பாடலும், ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம் என்ற பாடலும் வினவு இணையத்தளம், யு டியூப், பேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற ஊடகங்களின் வழியே பல இலட்சம் மக்களை சென்றடைந்து விட்டது.

மீண்டும் ஜெயலலிதா புதிய சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்.....1991-96 கலாச்சாரம்? தமிழகம் முழுவதும் சொத்துக்கள் வளைப்பு..

991-96 கலாச்சாரம்? ராமதாஸ் தமிழகம் முழுவதும் சொத்துக்கள் வளைப்பு: மீண்டும் திரும்புகிறதா 1991-96 கலாச்சாரம்? என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் 11 திரைகள் கொண்ட லூக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தை ஜாஸ் சினிமா என்ற நிறுவனம் வாங்கி விட்டது என்பது தான் அச்செய்தியில் கூறப்பட்டுள்ள விஷயம். ஜாஸ் சினிமா நிறுவனம் யாருக்கு சொந்தமானது என்பது தான் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதற்கு காரணமாகும்.
வருவாய்க்கு மீறி ரூ.66.65 கோடி சொத்துக் குவித்தது தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவுடன் சேர்த்து தண்டிக்கப்பட்ட இளவரசி தான் இந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார். சொத்து வழக்கில் தண்டிக்கப்பட்ட இன்னொருவரான சசிகலா, அவரது உறவினர் சிவக்குமார், இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் ஆகியோர் தான் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆவர். சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் தான் மிடாஸ் மது ஆலையிலும் இயக்குனர்களாக உள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக லூக்ஸ் மல்டிபிளெக்ஸ் திரையரங்கத்தை அதன் உரிமையாளர்களான சத்யம் திரையரங்க குழுவினரிடமிருந்து இளவரசி தலைவராக உள்ள ஜாஸ் சினிமா நிறுவனம் வாங்கிவிட்டது.

வியாழன், 29 அக்டோபர், 2015

100 மில்லியன் இந்தோனேசியர்களுக்கு பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வழங்கும் கூகுள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு வானில் பறக்கவிடப்படும். அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதுவரை வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதன்மூலம் இணையதள வசதிகளைப் பெறமுடியும். பிராஜெக்ட் லூன் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டமானது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரேசில் நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தோனேசியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

Indigo விமான அடாவடி ..கவுன் அணிந்த பெண்ணை விமானத்தில் ஏறவிடாமல் தடுத்த ஊழியர்கள்!

மும்பை விமான நிலையத்தில் குட்டை கவுன் அணிந்த பெண்ணை விமானத்தில் ஏறவிடாமல் ஊழியர்கள் தடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண் ஒருவர் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் மும்பை வந்து, அங்கிருந்து புதுடெல்லிக்கு செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் செல்ல ஆயத்தமாகியுள்ளார். ஆனால் அந்த பெண் முழங்கால் நீள கவுன் அணிந்திருந்ததை காரணமாக கூறி அவரை விமானத்தில் ஏற்ற மறுத்துள்ளனர் இண்டிகோ விமான ஊழியர்கள். மேலும் அவரது உடை கண்ணியமாக இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது சக பெண் பயணி புரபி தாஸ் என்பவரால் பேஸ்புக்கில் பகிரப்பட்டதால், தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புரபி தாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், இண்டிகோ விமானத்தில் பணிபுரியும் பெண்களின் சீருடைகள் முழங்கால் வரைதான் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். Friends I would like to recount a disturbing instance of harassment of a young female passenger by three male Indigo employees at Mumbai airport this morning. She was connecting from Mumbai to Delhi via Indigo airlines (6.30 AM) after an international flight from Doha to Mumbai. She was not permitted to board because she was wearing a knee length frock which was considered inappropriate wear by an airlines that has frocks of the same length for its stewardesses' uniforms! She missed her flight and was told that she would be allowed to board the next Indigo flight only after she changed into something covering her legs! A male co-passenger who tried to help her was threatened that he would not be allowed to board his flight if he intervened!

தினமலர்: பா.ஜ. க வில் உள்ள அதிருப்தியாளர்களை களையெடுக்க தலைமை முடிவு !; பீஹார் தேர்தல் முடிந்ததும்...களையெடுப்பு? ஆஹா சுயோரூபம்... அப்புறம் துரோஹி பட்டம்?

புதுடில்லி : கட்சியின் மேலிட தலைவர்களை கடுமையாக விமர்சித்து வரும் அதிருப்தியாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. பீஹார் சட்டசபை தேர்தல் முடிந்ததும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு, கடந்தாண்டு பதவியேற்றதும், ஆட்சியிலும், பா.ஜ., கட்சியிலும் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட, மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர்.
கடும் விமர்சனங்கள்அத்வானிக்கு, கட்சியின் வழிகாட்டும் குழுவில் இடமளிக்கப்பட்டது. ஆனாலும், 'இது, முக்கியத்துவம் இல்லாத பொறுப்பு' என, கட்சியினரால் கூறப்படுகிறது.
துவக்கத்தில், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்த அத்வானி, பின், அமைதியாகி விட்டார். ஆனாலும், சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா போன்ற தலைவர்கள், பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக, அவ்வப்போது கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த அருண் ஷோரி, சமீபத்தில், பா.ஜ., அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து, அறிக்கை வெளியிட்டிருந்தார். ஒரு ஜனநாயக கட்சி அமைப்பில் களையெடுப்பு என்ற வார்த்தை பிரயோகத்துக்கே இடம் இல்லை. இது எல் டி டி பாணி காட்டுமிராண்டித்தனம் . பொதுக்குழு முடிவெடுத்தால் யாரையும் நீக்கலாம். ஆனால் இங்கே சர்வதிகாரி ஒருவர் உருவாகி விட்டார், அவருக்கு கொம்பு சீவிவிட மீடியாக்கள் பணமுதலைகள் ஹிந்து தீவிர வாதிகள் எல்லோரும் பச்சையாக வேலை செய்கிறார்கள். சீக்கிரம் நாகரிக நாடுகளினால் தீண்டத்தகாதவர்கள் என்று....  

இந்துவெறி காட்டுமிராண்டிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எம்.எம். கல்புர்கி

எம்.எம். கல்புர்கிசாகித்ய அகாடமி விருது பெற்றவரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பழமையான கன்னட இலக்கியங்களின் ஆய்வறிஞர், கல்வெட்டு அறிஞர் என பன்முகத் தன்மை கொண்டவருமான எம்.எம்.கல்புர்கி ஆகஸ்டு 30-ம் தேதியன்று இந்துவெறி காட்டுமிராண்டிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்துத்துவத்தையும் லிங்காயத்து சாதிவெறியையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து நின்ற பார்ப்பன எதிர்ப்புச் சிந்தனையாளர் கொல்லப்பட்டிருப்பது நாகரிக சமுதாயத்துக்கு பேரழிப்பாகும். கர்நாடகத்தில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் உருவாக்கிய வீரசைவம் அல்லது லிங்காயத்து மதக் கொள்கை என்பது இந்து மதத்தின் கொள்கைக்கும் வழிபாட்டு முறைக்கும் முற்றிலும் எதிரானது. பசவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பார்ப்பன சாதியப்படியில் மேல்நிலையில் இருந்தவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அவரது மதத்தில் இணைந்து அவர்களுக்கிடையே திருமண உறவும் நிலவியது. இருப்பினும், குமரி மாவட்டத்தில் அய்யா வைகுந்தரை தன்னுள் அடக்கிக் கொண்டதைப் போலவே, பசவரையும் லிங்காயத்துகளையும் பார்ப்பனியம் காலப்போக்கில் உட்செரித்துக் கொண்டது. இந்துத்துவ சாதிய அமைப்பை எதிர்த்து உருவாகிய லிங்காயத்துக்கள் பின்னாளில் பார்ப்பனியத்துடன் சங்கமித்து தாழ்த்தப்பட்டோரை மிருகத்தனமாக ஒடுக்கும் ஆதிக்க சாதியாக மாறிப் போயினர்.

பல்கலைக்கழக மானியக்குழு முற்றுகை! மாணவர்கள் மீது தாக்குதல்! 130000 மாணவர்களின் உதவித்தொகை நிறுத்தம்.. காலியாகும் கல்வித்துறை?

கடந்த 23.10.2015 வெள்ளிக்கிழமையன்று, மோடி கும்பல் இந்திய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இதுவரை வழங்கிவந்த தேசியத் தகுதித்தேர்வு அல்லாத உதவித்தொகையை (Non-National Eligibility Test Scholarship) நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இதனால் இந்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பி.ஹெச்.டி ஆய்வு செய்யும் பொருளாதாரீதியாக பின்தங்கிய கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி உடனடியாக இன்னும் இரண்டே மாதங்களில் முடிவிற்கு வருகிறது.
இதை எதிர்த்து வாழ்வா சாவா எனும் நிலையில் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக மானியக்குழுவை (யு.ஜி.சி) முற்றுகையிடும் (Occupy UGC) போராட்டத்தை அறிவித்து சமரசமற்று போராடிவருகிறார்கள். இதுதவிர மும்பையிலும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

சீனாவில் ஒரு குழந்தைக் கொள்கை முடிவு....பெண்களுக்கு தட்டுப்பாடு... Gender Imbalance..

பெண்குழந்தைகளை  கருவிலேயே கண்டுபிடித்து கருச்சிதைவு செய்ததன் பலனை சீனா அனுபவிக்க தொடங்கிவிட்டது. ஏராளமான ஆண்கள் பெண்களுக்காக பிற நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்கனவே ஏற்பட்டு விட்டது. அடுத்தது இந்தியாவிலும் குறிப்பாக வட மாநிலங்களிலும் இந்த நிலைவரும்   சீனா பல தசாப்தங்களாக அமலில் வைத்திருந்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக ஷின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகிறது. இனி எல்லா தம்பதியரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி , அரச செய்தி நிறுவனமான ஷின்ஹுவா கூறுகிறது.
சீனாவில் குழந்தைப்பேறு விகிதத்தைக்குறைக்கவும், மக்கள் தொகை அதிகரிப்பு விகிதத்தை மந்தப்படுத்தவும் இந்த சர்ச்சைக்குரிய கொள்கை தேசிய அளவில் 1979ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சீனாவின் முதியார் பிரச்சனை பற்றிய கவலைகள் காரணமாக இந்தக் கொள்கை மாற்றப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் தோன்றின.

நடிகர் விவேக்கின் மகன் மரணம்! டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட (13) பிரசன்னா...

சென்னை: டெங்குவின் கோரப் பிடியில் சிக்கி சென்னையில் உயிர் துறந்தார் நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா (13). பிரசன்னாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அது என்ன நோய் என்று ஆரம்பத்தில் கண்டறிய முடியவில்லை. பின்னர்தான் டெங்கு காய்ச்சலால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்குள் உடல்நிலை மோசமாகி, கோமா நிலைக்குப் போய்விட்டார். சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் மகன் அருகிலேயே இருந்து கவனித்து வந்தார் நடிகர் விவேக். அவர் பிழைத்து வர ஏராளமான பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. ஆனால் எதுவும் பலனின்று மிக இளம் வயதில் உயிரிழந்தான் பிரசன்னா. பல கோடி மக்களை தன் நகைச்சுவையால் மகிழ்வித்த இணையில்லா கலைஞனான விவேக்கை, மகனின் மரணம் ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு ஆழந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறோ Read more at://tamil.oneindia.com/

பாசுமதிக்கு 'புவிசார் குறியீடு' இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போடுவதால்....

இந்தியாவில் புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருட்கள்:
* பனாரஸ் பட்டு
* டார்ஜிலிங் தேயிலை
* பாஷ்மினா சால்வை
* சந்தேரி பட்டு
* நீலகிரி தேயிலை
* மலபார் மிளகு
* நாக்பூர் ஆரஞ்சு
* காஞ்சிபுரம் பட்டு
* கூர்க் காபி

*அசாம் தேயிலைபுதுடில்லி,:பாசுமதி அரிசிக்கு, 'புவிசார் குறியீடு' பெறுவதில் உள்ள சிக்கலுக்கு, இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து தீர்வு காணுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பிரியாணி அரிசி எனப்படும் பாசுமதி அரிசியின் பூர்வீகம், பஞ்சாப். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பஞ்சாப் இரண்டாகப் பிரிந்தது. தற்போது, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் உள்ள பஞ்சாப் மாநிலங்களில், பாசுமதி அரிசி விளைகிறது. இதுதவிர, ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், டில்லி ஆகிய இடங்களிலும், பாசுமதி அரிசி விளைகிறது. இந்த புவி சார் குறியீட்டு பதிவே ஒரு நவீன காலனித்துவ சுரண்டல்தான். காப்புரிமை சட்டம் ஒரு காப்பரெட் வழிப்பறி கொள்ளைதான் ....பட்டா இல்லாத காணி எல்லாம் என்னுது........

சோட்டா ராஜனை ஹீரோவாக்கும் பாஜக! தாவூத் இப்ராஹிமுக்கு தண்ணி காட்டியவனாம்....ஹிந்துவெறியர்களின் soft Corner.......

Chhota Rajan assets worth over Rs 4000 crore, claim Mumbai police   சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்கிறான்,  5 வருரடம் கழித்து, தாவுத் தாதாவை எதிர்த்து போர் புரிந்தவர் என்று மும்பைல இவனுக்கு சிலை வைத்தாலும் ஆச்சரிபடுவதற்கில்லை.......
தாவூத் இப்ராகிம்கும்பல் உட்பட, எந்த எதிரி கும்பலையும் பார்த்து, நான் பயப்படவில்லை' என, இந்தோனேஷியாவில் பிடிபட்ட, மும்பை தாதா
சோட்டா ராஜன் கூறியுள்ளான் . இது ஒரு குவாலிபிகேசன் ? மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் கொலைகள் கடத்தல்கள் கப்பம் பறித்தல் போன்றவற்ரில்  பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவன் சோட்டா ராஜன். கருத்து வேறுபாடு காரணமாக, தாவூத் கும்பலில் இருந்து பிரிந்து, தனியாக, ஆள், ஆயுதம், போதை மருந்து கடத்தலில், சோட்டா ராஜன் ஈடுபட்டான். இந்தியாவில் மட்டும், அவன் மீது, 20 கொலை வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப் பட்டதால், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தான். சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் இருந்து, இந்தோனேஷியாவுக்கு சென்றபோது, அங்குள்ள சுற்றுலா தலமான பாலியில், சர்வதேச போலீசார் உதவியுடன், சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டான். இவன் ராஜ்யசபா எம்பியானால்கூட ஆச்சரியம் இல்லை. விஜய் மல்லையா கூட அங்குதாய்ன்..

சுய இன்பம் நல்லதே ! Ted X Teesha Morgan: எந்தவிதத்திலும் சுய இன்பம் கேடு விளைவிப்பதில்லை..


helthyourhand.blogspot.com  
ஆண்கள் 13 வயதில் இருந்து கட்டுடலோடும், இறுக்கமான உடல் வாகோடும் இருக்க அவர்கள் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களே காரணமாக அமைகிறது. பின்னர் வயதாக வயதாக அவர்களுக்கு செக்ஸ் மேல் உள்ள நாட்டம் குறைய ஆரம்பிக்கும். பின்னர் ஆண்கள் 45 வயதை அடைய , இவ்வுணர்வு குறைவதன் காரணமாகவே அவர்கள் உடல் பருமனடைகிறது. கட்டழகை இழக்கிறது. உடல் தளதளத்துப் போகிறது. ஆனால் அவர்கள் அந்த வயதில் கூட காம உணர்ச்சிகளோடு இருப்பார்களே ஆனால், அவர்கள் உடல் இறுக்கமாகவே காணப்படும். இது ஆராய்சியில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும். இதனை விட ஆண்களி அடி வயிற்றில் புரொஸ்டேன் என்னும் ஒரு சுரப்பி உள்ளது. இச் சுரப்பியானது விந்துவுக்கு திரவத் தன்மையைக் கொடுக்கிறது.
 எட்டாம் வகுப்பிலேயே பெரும்பாலான சிறுவர்கள் சுய இன்பம் அனுபவிக்கத் தொடங்கி விடுகிறார்கள். உலகத்தின் எல்லா சமூகங்களிலும் ஒரு கால கட்டத்தில், சுய இன்பம் பற்றி அறிவியல் ஆதாரம் இல்லாத கருத்துக்கள் நிலவியிருக்கின்றன. மனித உடற்கூறு பற்றிய அறிவு பெருகப் பெருகத்தான், அவற்றில் பல கருத்துக்கள் தவறானவை என்ற விழிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
தவறான கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில், சுய இன்பம் அனுபவிக்கும் சிறுவர்களையும் சிறுமிகளையும் பெரியவர்கள் மிரட்டவும், தண்டிக்கவும்கூட செய்திருக்கிறார்கள்.
சுமார் 200 வருடங்களுக்கு முன், சிலர் தங்கள் வீட்டு சிறுமிகள் சுய இன்பம் அனுபவிக்கவிடாமல் தடுப்பதற்காக, இரவு வேளையில் சிறுமியின் கைகளில் இரும்பு இழைகளாலான கையுறைகளை மாட்டிப் பூட்டியிருக்கிறார்கள். அவளுடைய பிறப்புறுப்பின் மீது, தொட்டால் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொடி தூவியிருக்கிறார்கள். சிறுவனுக்கு பிறப்புறுப்பைத் தொட முடியாமலும், அது எழுச்சி அடைய முடியாத விதத்திலும் இறுக்கமான இரும்பு ஜட்டி அணிவித்துப் பூட்டினார்கள்.

நான் ஏன் விஷால் அணியை விமர்சித்தேன்? இயக்குனர் சேரன் விளாசல்!

சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் சரத்குமாருக்கு ஆதரவாக பேசிய போது, விஷால் அணியினரை பற்றி விமர்சனம் செய்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் சரத்குமாருக்கு ஆதரவாக பேசிய போது, விஷால் அணியினரை பற்றி விமர்சனம் செய்தது நம் மக்கள் நிறைய பேருக்கு வருத்தத்தை அடையச் செய்துள்ளது. எனக்கும் அதற்குபின் அதைப் பார்த்தபோது நாம் அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இதை இவ்வாறு பதிவு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு வந்தது. சில நேரங்களில் சில விஷயங்களை நாம் பதிவு செய்யாமலோ அல்லது புறந்தள்ளியோ போனோம் என்றால், அது நம்மை வளர்த்த சமூகத்திற்கு செய்யும் கேடு என்று நினைப்பவன் நான். அப்படியாகத்தான் நான் சரத்குமாரை ஆதரித்ததும், விஷால் அணியில் சிலர் மீது சாடியதும். 1990களில் இருந்து சரத்குமாரை நன்கு அறிந்தவன் நான்.

புதன், 28 அக்டோபர், 2015

வாடகைத் தாய்க்கு தடை? .The baby factory: huge clinic in Gujarat ..

The baby factory: In a huge clinic in India, hundreds of women are paid £5,000 each to have Western couples' babies Dr Nayna Patel is building a one-stop surrogacy shop in Gujurat, India It will house hundreds of poor women willing to carry others' children She has been accused of exploiting the poor in expanding her business Dr Patel says she is giving poor Indian women and couples a lifeline
தாய் முறையை வெளிநாட்டினர் பயன்படுத்த விரைவில் தடை விதிக்க உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எந்த வெளிநாட்டினரும் இந்தியாவில் வாடகை தாய் பெற சுப்ரீம் கோர்ட் அனுமதி அளிக்கக் கூடாது எனவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்தள்ளது.
வாடகை தாய் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு இன்று (அக், 28) மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், வர்த்தக ரீதியிலான வாடகை தாய் முறைக்கு விரைவில் தடை விதிக்க உள்ளோம். அதனால் வெளிநாட்டு தம்பதிகள் இந்திய வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வதற்கு அவுனுமதி அளிக்கப்படாது. அரசு உயர் மட்டக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மோடியின் சொர்க்க மாநிலமான  குஜராத்தில் தான் இந்த கொடுமை கொழுந்து விட்டு எரிகிறது

திமுக கூட்டணி...100 சீட் இதர கட்சிகளுக்கு...ஆட்சியிலும் பங்கு.. தேமுதிக...பாமக .பாஜகா?

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதம் இருந்தாலும் தேர்தல் களம் படு பரபரப்பாகவே இருக்கிறது. ஆளும் அதிமுகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது திமுக. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதால் அதை கூட்டணியில் சேர்க்க தயாராக இல்லை திமுக. அதே நேரத்தில் பாஜக உடன் கூட்டணிக்காக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  லோக்சபா தேர்தல், சட்டசபைத் தேர்தல் என பத்தாண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த திமுக, கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கை கழுவிவிட்டது. இந்த நிலையில் 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்புடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது திமுக. இதன் ஒருபகுதியாகவே நமக்கு நாமே பயணத்தின் போது கோவில்களுக்கு செல்வதோடு, இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல என்று கூறி வருகிறார் ஸ்டாலின் என்கின்றனர்

வாசன் கட்சிக்கு 8 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட்.... அ.தி.மு.க.வின் தாராளம்..

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அ.தி.மு.க. தொடங்கியுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் 8 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் மட்டுமே கொடுக்க அ.தி.மு.க. முன்வந்திருப்பது த.மா.கா.வை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி வியூகங்களில் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் 234 தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கான வியூகத்துடன் களமிறங்கியுள்ளது.
இதற்கு ஏதுவாக சில சிறிய கட்சிகளை கூட்டணியில் இணைத்து இரட்டை இலை சின்னத்திலேயே நிற்க வைப்பது என்பது அ.தி.மு.க.வின் வியூகம். இதன் முதல் கட்டமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது   வாசனுக்கு எப்படியாவது  பாராளுமன்றம்  போகவேண்டும் அம்புடுதே....மத்தபடி எத்தனை  எம் எல் ஏக்கள்  வந்தாலும்  அத்தனையும் அங்கே  ஓடிடுவாய்ங்க

பித்யா தேவி பந்தாரி நேபாளத்தின் புதிய அதிபராக தேர்வு..Bidhya Devi Bhandari elected 1st woman president of Nepal


காத்மாண்டு, நேபாளத்தில் ஆளும் சிபிஎன்.யுஎம்.எல். கட்சியை சேர்ந்த வித்யா தேவி பந்தாரி(54) அந்நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளர் கவுல் பகதுர் குருங்கை 100 வாக்குகள் விதியாசத்தில் தேவி பந்தாரி வீழ்த்தி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.கடந்த 2008 ஆம் ஆண்டு நேபாளம் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் அதிபராக தேர்வு செய்யப்பட்டு பதவி வகிக்கும் ராம்பரன் யாதவை தொடர்ந்து அந்நாட்டின் முதல் பெண் அதிபராக வித்யா தேவி பந்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மோடி மீது பாஜக தலைவர் அருண் ஷோரி கடும் தாக்கு...இது போன்ற ஒரு பலவீனமான பிரதமரை நாடு கண்டதில்லை..

மத்தியில் ஆட்சியிலிருந்த முந்தைய காங்கிரஸ் அரசுக்கும், தற்போதுள்ள பாஜக அரசுக்கும் வேறுபாடு எதுவுமில்லை என்று மத்திய முன்னாள் அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஷோரி குற்றம்சாட்டினார்.
 தற்போது உள்ளதைப் போன்ற பலவீனமான பிரதமர் அலுவலகத்தை இதுவரை பார்த்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இணையமைச்சராக இருந்த அருண் ஷோரி, மத்திய பாஜக அரசு மீது இத்தகைய கடும் விமர்சனங்களை முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 "பிஸினஸ் ஸ்டாண்டர்டு' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் டி.என். நைனன் எழுதிய "டர்ன் ஆஃப் டார்டாய்ஸ்' என்ற நூலின் வெளியீட்டு விழா தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் ஷியாம் சரண் ஆகியோர் பங்கேற்றனர்.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

குர்டிஷ் அவலம்..மேற்கு நாடுகளின் படுமோசமான வரலாற்று குற்றங்கள்!

அய்லான்சிரியாவிலிருந்து அகதியாகத் தப்பியோடி வந்து, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி, அய்லான் என்ற இளம் சிறுவன் கரையோர மண்ணில் பிணமாகப் புதைந்து கிடந்த காட்சி, உலகெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குர்து சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அய்லானின் பெற்றோர்கள் தமது குடும்பத்துக்கு கனடாவில் தஞ்சம் கோரியதை அந்நாட்டு அரசு ஏற்க மறுத்துவிட்டதால், ஐரோப்பாவில் ஏதாவதொரு நாட்டில் தஞ்சம் புக அக்குடும்பம் கள்ளத்தனமாக படகில் சென்றபோதுதான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. சிறுவன் அய்லானைப் போலவே இன்னும் பல நூறு பேர் கடந்த சில மாதங்களில் கடலில் மூழ்கி மாண்டு போயுள்ளனர்.

நானும் ரவுடிதான்... நயன்தாரா விஜய் சேதுபதி ஜோடியும் வெற்றி பெற்றுவிட்டது .

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘நானும் ரௌடிதான்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் புதிய படம் தயாரிக்கபோவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நம்ம ரவுடி விஜய் சேதுபதியை வைத்து எனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கயிருக்கிறேன் என்று கூறினார். விஜய் சேதுபதி கைவசம் தற்போது அதிக படங்கள் உள்ளன. ‘இடம் பொருள் ஏவல்’, ‘மெல்லிசை’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து, வெவ்வேறு நிலைகளில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

சோட்டா ஷகீல்: சோட்டாராஜன் இந்தியாவின் கைக்கூலி. அவரை இந்திய அரசு எதுவும் செய்யாது.

மும்பை: சோட்டா ராஜனை எங்களது கையால் போட்டுத் தள்ளத் திட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டு பிஜியில் சுற்றி வளைத்தோம். ஆனால் எங்களிடமிருந்து தப்பி இந்தோனேசியாவுக்கு அவர் ஓடி விட்டார். இதனால்தான் அவர் இன்டர்போல் போலீஸில் சிக்கி விட்டார். இருந்தாலும் தாவூத் ஆதரவாளர்கள் ஓய மாட்டோம். போட்டுத் தள்ளாமல் விட மாட்டோம் என்று இன்னொரு தாதா கும்பலின் தலைவரான சோட்டா ஷகீல் கூறியுள்ளார். மும்பையின் தாதா கும்பல் தலைவர்களில் ஒருவர்தான் சோட்டா ராஜன். இதேபோல இன்னொரு டான் சோட்டா ஷகீல். இருவரும் தாவூத் இப்ராகிமால் வளர்த்து விடப்பட்டவர்கள். ஆனால் ராஜன், தாவூத்தை விட்டு நீண்ட காலத்திற்கு முன்பே பிரிந்து தனியாக வந்து விட்டார். அதன் பின்னர் இவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் சோட்டா ராஜன் இந்தோனேசியாவில் வைத்து சிக்கி விட்டார்.

சோட்டா ராஜன்...6 மும்பை வெடிகுண்டு குற்றவாளிகளை கொன்று விட்டாராம்..இனி இவன்- மோடி /.மணிரத்னம் வகையாறாக்களின் ஐடியல் கீரோ?


 சோட்டா ராஜன் மும்பையில் உள்ள இப்ராகிம் கூட்டாளிகள் 6 பேரை அடுத்தடுத்து கொலை செய்தார். அந்த 6 பேரும் மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்கான வெடிகுண்டுகளை கொண்டு போய் வைத்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மும்பையைச் சேர்ந்த நிழல் உலக தாதாக்களில் உலகம் முழுவதும் ‘‘நெட்வொர்க்’’ ஏற்படுத்தி கடத்தல் தொழில் செய்து வந்தவர் சோட்டாராஜன்.
கடந்த 20 ஆண்டுகளாக இவரை மும்பை போலீசார் தேடி வந்தனர். சமீப காலமாக அவர் சர்வதேச போலீஸ் மூலமாகவும் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். ஆஸ்திரேலியாவில் பதுங்கி இருந்த அவர் நேற்று முன்தினம் இந்தோனேஷியா நாட்டின் பாலிதீவுக்கு வந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார். டென்பசார் போலீஸ் நிலையத்தில் அவரிடம் பாலித்தீவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து சோட்டா ராஜனை இந்தியாவிடம் ஒப்படைக்க இந்தோனேஷியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேசி வருகிறார்கள். இந்த வார இறுதிக்குள் மும்பை போலீசாரும், சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்தோனேஷியா செல்கிறார்கள். அதன் பிறகு சோட்டா ராஜன் இந்தியா அழைத்து வரப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சோட்டா ராஜனின் உண்மையான பெயர் ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி மும்பை செம்பூரில் 1960–ம் ஆண்டு பிறந்த இவர் 10 வயதிலேயே கிரிமினல் குற்றவாளியாக மாறி விட்டார். 1970களில் சினிமா தியேட்டர்களில் பிளாக்கில் டிக்கெட் விற்பவராக இருந்தார்.  இது  உண்மையான கைதுதான் என்று எப்படி நம்புவது? டீல் வைத்து  சீல் வைத்த விவகாரமாக கூட இருக்கலாம் அவன் வேற  கிட்னி புறப்பிளம் என்கிறான்...மீடியாக்கள் அவன் தாவூத் இப்ராஹீமுக்கு  சிம்ம சொப்பனமாக இருந்தான் என்று ஹீரோ ரேஞ்சுக்கு பலூன் ஊதுராய்ங்க 

ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு - மதுரை ஐகோர்ட்டில் 2 பேர் வழக்கு

முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ராமஜெயத்தின் மனைவி லதா, மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஐகோர்ட்டு இறுதிக்கெடு விதித்துள்ளது. இதனால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூரில் நித்யானந்தா...திருவிளையாடல் ஆரம்பம்!

திருவாரூர் மடப்புறத்தில் புகழ்மிக்க சோமநாதேஸ்வரர் மடத்தில் இருந்த நித்யானந்தா ஆட்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றனர்.வேதாரண்யம் மடத்திற்குச் சொந்தமான இந்த மடம் தற்போது ஆளாளுக்குக் கைமாறி ஆத்மானந்தா வசம் வந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நித்யானந்தாவின் நான்கு ஆண்கள் நான்கு பெண்கள் ஆக எட்டுச் சீடர்கள் அப்பகுதிவாழ் மக்களுக்குத் தெரியாமல் தங்கியிருந்திருக்கின்றனர். இன்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் புன்னியதானம் செய்வது குறித்து ஆலோசனை கேட்க சென்றிருக்கிறார். அவர் வருவதைப் பார்த்த நித்யானந்தா சீடர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி "நீங்க யாரு? எதுக்கு இங்க வர்றீங்க? மடத்தை இரண்டு கோடி கொடுத்த நாங்க வாங்கிட்டோம்" என்று ஏகவசனத்தோடு வசைபாடி வெளியேற்றியிருக்கின்றனர்.

லஞ்சம் கொடுத்தால் பத்திர பதிவு....போர்ஜெரி செய்வது சுலபம்..SSR குடும்பத்துக்கே இதுதான் நிலைமைன்னா...

வாசகர் :  சார் பதிவு அலுவலகங்களில் தனி நபர் அல்லது வாங்குபவர் விற்பவர் மட்டும் சென்று பதிவு செய்வது முடியாத காரியமாகி விட்டது. பத்திர பதிவு எஜன்ட் வந்தாலே ஒழிய மற்றும் லஞ்சம் கொடுத்தாலே ஒழிய பதிவு செய்யப்படுகிறது. வில்லங்கம் என்று வந்தால் நாங்கள் பெயர் மாற்றி கொடுக்கும் பதிவு வேலை மட்டும் தான் செய்வோம் நிலம் இப்போ யார் பெயரில் இருக்கிறது என்று எங்களிடம் மட்டும் உள்ள தச்தாவேஜீகள் பார்த்து தான் கொடுப்போம். அதே நிலத்துக்கு வேறொருவரு வேறொரு பெயரில் அல்லது அதே அபீசிலோ அல்லது வேறெங்காவது பதிவு செய்திருந்தால் அதுக்கு நாங்கள் பொறுப்பல்ல.... இப்படி சொன்னால் அப்புறம் எதுக்கு பதியனும் - இவங்க எந்த லச்சணத்துல வேலை பாக்குறாங்கன்னு இதிலேர்ந்தே தெரியாதா ? பணத்தை பாதுகாத்துகொங்க மக்களே. அது மட்டுமன்றி மூல பத்திரம்ன்னு ஒரு நடைமுறை வச்சிருக்கானுக..

What the bleep do we know? பிரபஞ்சம்/கடவுள்/ஆத்மா! அதை பற்றி எங்களுக்கு என்னதான் தெரியும்?

இந்தப்படம் மிகவும் சவாலான கற்பனையும் கலையும் சேர்ந்த விவரண படமாகும்.
ஏராளமான விமர்சனங்களையும் அதற்கு நிகரான பாராட்டுக்களையும் பெற்று  வசூலிலும் வெற்றி பெற்ற ஒரு அதிசய படமாகும்.
விஞ்ஞானிகளின் கடுமையான விமர்சனம் அதே சமயம் பாராட்டுகள் என்று இரண்டு விதமான கருத்துக்களும் இருந்தாலும் பார்வையாளர்களின்

கோணத்தில் இது ஒரு பெரும் சேவையை செய்த படம் என்று இதை கூறலாம்.
Quantum Science or Quantum Mechanics என்று படித்தவர்களாலேயே  விளங்க முடியாத ஒரு விடயத்தை சாதாரண சினிமா ரசிகர்களுக்கும் விளங்க வைக்கும் முயற்சியை இது செய்தது,
பிரபஞ்சம் அல்லது கடவுள் போன்ற பதில் காண முடியாத கேள்விகள் ஒரு பெண்ணின் மனதில் அலைமோதியது.
அவரோ காது கேளாதவர் அவரின் மௌன உலகத்தில் நாம் சாதரணமாக காணும் காட்சிகள் அவருக்கு கொஞ்சம் வித்தியசாமாக தோன்றியதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.
நாம் காணும் காட்சிகள் உண்மையில் அங்கு நிதர்சனமாக உள்ள காட்சிகள்தானா?
காணும் காட்சிகள் நாம் காண்பதாலேயே அவை காட்சிகள் ஆகின்றனவா? உண்மையில் அங்கு ஒன்றுமே இல்லையா?

ஆப்கான் பூகம்பம்..சுமார் 260 பலி..பாகிஸ்தான் இந்தியா நேபால்...சென்னையிலும் அதிர்வு...


இஸ்லாமாபாத்: வட கிழக்கு ஆப்கனை மையமாக வைத்து, நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஆப்கன், பாக்., நாடுகளில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; இந்தியாவில், டில்லி உட்பட, வட மாநிலங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியில், வீடுகளிலிருந்து ஓட்டம் பிடித்தனர்.ஆப்கன் தலைநகர் காபூலிலிருந்து, 250 கி.மீ., தொலைவில், இந்துகுஷ் மலைப்பகுதியில், 213 கி.மீ., ஆழத்தில், நேற்று பிற்பகல், 2:40 மணிக்கு, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.5 புள்ளியாக பதிவான, இந்த நிலநடுக்கத்தால், ஆப்கன் மட்டுமல்லாது, அண்டை நாடான பாகிஸ்தானின் பெரும்பகுதிகள், பலத்த பாதிப்புக்கு உள்ளாகின.

Mano Ganesan: தமிழ் கைதிகளை பிணையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு!

இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் தொடங்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் மனோ கணேசன் கூறினார். பிரமதருடனான இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான சுவாமிநாதன், திலக் மாரப்பன ஆகியோரும் காவல்துறை தலைவர் மற்றும் சட்டமா அதிபர் அலுவலக உயரதிகாரிகள் ஆகியோரும் பங்குபெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திங்கள், 26 அக்டோபர், 2015

ரூ 3 ஆயிரம் கோடி பட்டேல் சிலை..வாடகை தாய்மார்களின் தலைநகரம் குஜராத்தில்....பட்டேலின் வாரிசு மோடியாம்.


குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணைக்கட்டு பகுதியில் கேவடியா என்ற இடத்தில் பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்பட உள்ளது.
நரேந்திர மோடி குஜராத் முதல்–மந்திரியாக இருந்த போது இந்த சிலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக சர்தார் படேல் சிலை கருதப்படுகிறது.
உலகிலேயே மிக உயரமான சிலையாக 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்பட உள்ளது. ‘‘ஒற்றுமை சிலை’’ என்று புகழப்படும் இந்த சிலை ரூ.3 ஆயிரம் கோடி செலவில் தயாராகி வருகிறது.
இந்த சிலையை தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தை பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனம் பெற்றுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவில் இரும்பு கலவை வார்ப்புகளை பயன்படுத்தி படேல் சிலை உருவாகி வருகிறது.  உலக வாடகை தாய்மார்களின் தலைநகரமாக குஜராத் மாறிவிட்டது. வேறு எங்குமே நடக்காத இந்த அநியாயம் டுபாக்கூர் மோடியின் ஆட்சியில்தான் இந்த அளவு பல்கி பெருகியது இதுக்கும் சேர்த்தே சிலை வையுங்கடா ..

உதவியாளர்களை நம்பி 100 சார்-பதிவகங்கள்: நில மோசடி அபாயம்

தமிழகத்தில், 100க்கும் மேற்பட்ட சார்-பதிவாளர் அலுவலகங்களில், முறையாக தேர்ச்சி பெறாத உதவியாளர்கள், தற்காலிக அடிப்படையில், சார்-பதிவாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது, நில மோசடிக்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தமிழகத்தில், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய, 578 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒரு பதிவாளர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உதவியாளர்கள், எழுத்தர், இரண்டு அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஒரு இரவு காவலர் பணியிடங்கள் உள்ளன.இதில், 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால், அன்றாட பணிகள் முடங்கும் சூழல் நிலவுகிறது. இதை சமாளிக்க, அரசு விதிகளை மீறி, வெளியாட்களை தினக்கூலி அடிப்படையில், சார்-பதிவாளர்கள் நியமித்துக் கொள்கின்றனர். இதுபோன்ற தினக்கூலி பணியாளர்களை நம்பியே, பல சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும், 100க்கும் மேற்பட்ட அலுவலகங்களில், உதவியாளர்களும், இள நிலை உதவியாளர்களே சார்-பதிவாளர் பணியை, தற்காலிக பணியாக கவனித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாததால், நில மோசடி தொடர்பான ஆவணங்கள் பதிவாகி விடுகின்றன.   பல பதிவகங்களில் 5001000-2000 ன்னு இந்த அல்லக்கைகளை வச்சுதான் வேலையே நடக்குது.

குற்றக் கும்பல் போலீசு ! விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு காதல்கதை ஜோடிக்கும் கிரிமினல்கள்...

விஷ்ணுபிரியானிதர்களின் கழுத்தைக் கடித்து இரத்தம் குடிக்கும் வக்கிர டிராகுலாவாகிய கிரிமினல் குற்றக் கும்பலின் நெருங்கிய கூட்டாளிதாம் போலீசார் என்பதற்கு கண்முன்பாக வெளிவந்திருக்கும் சான்றுகள்: கோகுல்ராஜ் மற்றும் விஷ்ணுப்பிரியா சாவுகள் குறித்த  திருச்செங்கோடு வழக்குகள்; மேலூர், கீழவளவு – சின்னமலம்பட்டி கிராமத்தில் சட்ட ஆணையர் சகாயம் குழுவினர் தோண்டத் தோண்ட வரும் நரபலி செய்யப்பட்டவர்களின் பிணங்கள்- எலும்புக் கூடுகள். கோகுல்ராஜ்-அவருக்கு முன்பு இளவரசன், விஷ்ணுப்பிரியா-அவருக்கு முன்பு முத்துக்குமாரசாமி, கீழவளவு கிரானைட் கொள்ளைகளுக்கு நடுவில் நடந்த நரபலிக் கொலைகள் மட்டுமல்ல, மணற்கொள்ளைகளுக்கு இடையே நடக்கும் கொலைகள் – இவற்றுக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டிய போலீசார் மட்டுமல்ல, நீதிமன்றங்களும்  அநேகமாக அனைத்து அரசுத் துறைகளும் ஆட்சியாளர்களும் குற்றவாளிகளின் காவலர்களாகவும் கூட்டாளிகளாகவும் செயல்படுகிறார்கள்.

நிலநடுக்கம் 7.5 அளவு....ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் பலர் பலி..சென்னையிலும் உணரப்பட்டது..

ஆப்கானிஸ்தானின் வட-கிழக்கு மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பாடாசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 12 மாணவிகள் பலி பாகிஸ்தானில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பாடசாலையிலிருந்து வெளியேற முயற்சித்த 12 மாணவிகள் அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பல மாணவிகள் அபாயகரமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியத் தலைநகர் டில்லியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, பலர் கட்டிடங்களிலிருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்.
இந்தக் கடுமையான நிலநடுக்கம் 7.5 அளவு கொண்டது என்றும் அது ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதி நகரான ஃபைசாபாதுக்கு தெற்கே 75 கிலோமீட்டார் அளவில் மையம் கொண்டிருந்தது என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சோட்டா ராஜன் கைது..20 ஆண்டுகள் தேடப்பட்ட மும்பை தாதா ..Chota Rajan Arrested In Indonesia


இந்தோனேசியாவின் பாலி தீவில் மும்பை தலைமறைவு குற்றவாளி சோட்டாராஜன் கைது செய்யப்பட்டார்.  அவுஸ்த்ரேலியா புலனாய்வு அதிகாரிகளின் முயற்சியில் இந்தோனேசியா பாலிதீவில் கைது செய்யப்பட்டார். இவர் உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படமாட்டார். அதற்கு இந்தோனேசியாவுடன் இந்தியாவுக்கு கைதி பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாமையே காரணம் இவர்  20 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்தவர் சோட்டா ராஜன். இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போலீஸ் கூட்டாகத் திட்டம் தீட்டி பிடித்தனர். . மும்பையில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டவர் சோட்டாராஜன். தலைமறைவு குற்றவாளி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி சோட்டாராஜன்

வைகோ :அதிமுக கொள்கையே இல்லாத கட்சி: திமுக கொள்கையை இழந்த கட்சி !

விழுப்புரத்தில் மதிமுக மாவட்ட மாணவரணி துணை செயலர் பாண்டியன்-அனிதா திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று பேசுகையில், தமிழகத்தில் முகம் தெரியாத நபர்களுக்கு மதிமுக முகவரி கொடுத்துள்ளது. அதுபோன்றவர்களை, சிலர் அழைத்துக்கொள்கின்றனர். அவர்கள் எங்கு சென்றாலும் நல்லபடி இருக்கட்டும். தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக கொள்கையே இல்லாத கட்சியாக உள்ளது. திமுக கொள்கையை இழந்த கட்சியாக உள்ளது. மதிமுக மட்டுமே கொள்கையோடு லட்சக்கணக்கான தொண்டர்களை வைத்திருக்கும் இயக்கமாக செயல்படுகிறது.
இந்த கொள்கை குன்று  வைகோவின் நிரந்தர  ஆதரவை யாராச்சும்  பெற்றால்  கடைசியில் என்ன நடக்கும் என்பதை தெளிவாக  சொல்ல ஒருவரால் முடியும் ஆனா அவர்.....மாட்டார் ...வச்சுகிட்டு வஞ்சனையா...

ஸ்வேதா : மும்பை விபசார விடுதியில் பிறந்து அமெரிக்காவில் சாதனை புரியும் சிறுமி.. Shweta Katti

ஸ்வேதா கட்டிக்கு இப்போது 18 வயதுதான். மும்பையின் பிரபல சிவப்பு விளக்குப் பகுதியான காமத்திபுராவில் ஒரு  தேவதாசிப் பெண்ணின் மகளாகப் பிறந்தவர். மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தேவதாசியாக்கப்பட்டு, தன் அம்மா படும் பாலியல் கொடுமையைக் கண்டு ஸ்வேதா பயந்தார். அவரது தாய் வந்தனாவும் தனக்கு நேரும் கொடுமைகள் தன் மகளுக்கு நேர்ந்துவிடக்கூடாது என நினைத்தார்.அருகிலுள்ள ஒரு நகராட்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஸ்வேதா, சின்ன வயதிலிருந்தே நன்றாகப் படித்துவந்தார்.  காமத்திபுராவில் உள்ள இப்படிப்பட்ட பெண்குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்தும், ‘அப்னே ஆப்’ என்ற அமைப்பு,  ஸ்வேதா நன்றாகப் படிப்பதை அறிந்து, அவரை தெற்கு மும்பையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்த்தது. அந்தப் பள்ளியிலேயே அவர் மேல்நிலை வகுப்புவரை நன்றாகப் படித்து தேர்ச்சியடைந்ததால், அப்னே ஆப் அமைப்பு ஸ்வேதாவை ‘க்ரண்ட்டி’ என்ற தொண்டு நிறுவனத்திடம் அழைத்துச்  சென்றது. நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்பதுதான் தன் இலட்சியக்கனவு என்று ஸ்வேதா தெரிவித்தார். பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு உலக நாடுகள் பலவற்றில் உள்ளவர்களிடமிருந்து உதவி பெற்றுத் தரும் நிறுவனமான க்ரண்ட்டி, ஸ்வேதாவுக்கு உதவ முன் வந்தது.

பொன்.ராதாகிருஷ்ணன் :இலங்கையரசு (15 கோடி) அபராதம் விதித்தால் நாமும் அபராதம் விதிப்போம்...அதுவும் இரண்டு மடங்கு..

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அபராதம் விதித்தால்,  இந்திய
எல்லைக்குள் மீன் பிடிக்கும் இலங்கை மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் சூழல் ஏற்படும் என மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்தால், தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற இலங்கை மீன்வளத்துறை அதிகாரியின் பேச்சு ஏற்புடையதல்ல. இலங்கை சிறையிலுள்ள 86 தமிழக மீனவர்கள் விடுவிக்க முயற்சி எடுத்த பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.தமிழக மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்தால், எல்லை தாண்டும் இலங்கை மீனவர்களுக்கு இலங்கை மதிப்பில் அதுபோல் இருமடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும் சூழல் உருவாகும் என கூறினார்.dailythanthi.com

பாஜக ஆசியுடன் காவி பயங்கரவாதிகள்....ஞானிக்கு கருப்பு மை வீசுவார்களா? .


பிரச்சார இயக்கம் போஸ்டர்-3
gnani
பத்திரிகையாளர் ஞாநி
புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் பத்திரிகையாளர் ஞாநி மீது கருப்பு மை வீசுவேன் என்று மிரட்டியுள்ளது ஒரு கூலிப்படை இந்துத்துவ வானரம்.
புத்தக வெளியீட்டு நிகழ்வில் கருப்புமை வீசுவது, கிரிக்கெட் சங்கத்தில் மிரட்டுவது போன்ற சிவசேனா கட்சியினரின் சமீபத்திய ‘லீலைகள்’ குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடைபெற்றது. தமிழகத்தில் அரசியல் அனாதையாக இருக்கும் இந்துத்துவா கும்பலை மக்களிடம் பிரபலப்படுத்தும் புதியதலைமுறை, தந்தி தொலைக்காட்சிகளின் வழக்கப்படி இவ்விதாதத்திற்கும் தமிழக சிவசேனா பிரமுகர் என்று ஏதோ ஒரு கூமுட்டையை அழைத்திருந்தனர்.
இவ்விவாதத்தில் தான் இந்துத்துவத்திற்கு எதிராக பேசினால் ஞாநி மீதும் மை வீசுவோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது அந்த வானரம்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

லண்டனில் குவியும் இந்திய மாணவர்கள்! சர்வதேச தரம் இங்கில்லையா?


லண்டனில் உள்ள உலகப்புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக, இந்திய மாணவர்கள் இங்கிலாந்து செல்வது ஆண்டு தோறும் உயர்ந்த வண்ணம் உள்ளது. அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனில் சர்வதேச தரம் வாய்ந்த, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் இருப்பதால், அமெரிக்கா, இந்தியா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஹாங்காங், கிரீஸ், நைஜீரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகளவில் மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வரிசையில் சீன மாணவர்கள் முதலிடத்தையும், அமெரிக்க மாணவர்கள் 2வது இடத்தையும், இந்திய மாணவர்கள் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.  இதனால் இந்தியாவின் கல்வித்தரம் உயர்ந்துள்ளதா?....குறைந்துள்ளதா?.....ஒண்ணுமே புரியல்லையே?...

வசனகர்த்தா சேத்னா தீர்தஹள்ளிக்கு கொலை மிரட்டல்.. Kannada woman filmmaker threatened..Beef row:


பெங்களூரை சேர்ந்தவர் சேத்தனா தீர்த்தஹள்ளி. பிரபல பெண் எழுத்தாளரான இவர் கன்னடத்தில் 50–க்கும் மேற்பட்ட புனைலி நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய இதழ்களில் பெண் அடிமைக்கு எதிராக கட்டுரைகளையும் எழுதி வருகிறார். திரைப்பட இயக்குனராகவும் உள்ளார். எழுத்தாளர்கள் மீதான வன்முறை, தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டவர் கொல்லப்பட்ட விவகாரம், கோவிலுக்குள் நுழைந்த தலித் முதியவர் எரிக்கப்பட்ட விவகாரங்களை கண்டித்து தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பெங்களூரில் நடந்த மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்று மாட்டிறைச்சி சாப்பிட்டார். இதையடுத்து பேஸ்புக்கின் பல்வேறு முகவரியில் இருந்து அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் மட்டுமின்றி, பலாத்சாரம் செய்யப்போவதாகவும், முகத்தில் ஆசிட் வீசப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ராமதாஸ் விஜயகாந்துக்கு: அன்புமணியை முதல்வர் வேட்பாளரா ஏத்துங்க...

திண்டிவனம்: டாக்டர் அன்புமணி ராமதாஸை, முதல்வர் வேட்பாளராக தேமுதிக ஏற்க வேண்டும். அப்படி ஏற்பதானால் அவர்களை எங்களது கூட்டணியில் வரவேற்க நாங்கள் தயார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியாக கூறியுள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் கூறியதாவது: பாமக சார்பில் மாதிரி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மக்களிடம் விளக்கும் வகையில் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அப்போது மீனவர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிவார். பின்னர் அதன் அறிக்கையை கட்சி தலைமைக்கு தாக்கல் செய்வார்.சவுண்டு வெடியை  வெடிக்க வைத்து ஏதாவது புடுங்கலாம்னு துடிக்கிராக தாசு அய்யா ..இந்த டெக்னிக்குல  பிரேமலதா ஆயா ஏற்கனவே... 

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

எம்.ஜி.ஆர். 10 ஆண்டு காலம் முதல்அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா 14 ஆண்டு காலம் முதல்–அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் தொலை நோக்கு திட்டத்தோடு மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி உள்ளார்.
தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட 96 ஆயிரம் கோடி வருமானத்தை மீண்டும் மக்கள் நலனுக்காக செலவிடுபவர் முதல்அமைச்சர் ஜெயலலிதா. மொத்த வருமானத்தில் 48 சதவீதத்தை சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஒரு மனிதனுக்கு முக்கிய தேவையாகும். முதல்அமைச்சர் ஜெயலலிதா 1 கோடியே 80 லட்சம் குடும்பத்தினருக்கு ரேஷன் கடை மூலம் மாதம் 20 கிலோ ரேஷன் அரிசியினை வழங்கி வருகிறார்.
ஆண்டுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பசுமை வீடுகள் மற்றும் இலவச வீடுகள் கட்டி தருகிறார். கல்விக்கென 23 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையாகும்.

இந்தோனேசியா Dance Club தீ 17 பேர் பலி ...சுலாவசி தீவில் ஏற்றபட்ட


இந்தோனேசியாவில் சுலாவசி தீவில் உள்ள டேன்ஸ் கிளப்பில் ஏற்பட்ட தீ  விபத்தில் 17 பேர் உடல் கருகி பலியானார்கள். இந்தோனேசியாவில் சுலாவசி தீவுவில் உள்ள காரியோகி என்ற டேன்ஸ் கிளப்பில் இன்று அதிகாலை 1 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மூன்று மாடி கொண்ட அந்த கிளப் 2-வது மாடியில் இருந்து தீ குபு குபு என பற்றி எரிந்தது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்த டேன்ஸ் கிளப்பில் மகிழ்ச்சியோடி ஆடிபாடிக்கொண்டிருந்தனர்.அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.கரும்புகை வெளியேறியதால் அங்கிருந்த 71 பேருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

சாட்சியைக் கொல்லப்போவதாக மிரட்டும் சங்கராச்சாரி! மீண்டும் தூசி தட்டப்படும் சங்கரராமன் கொலைவழக்கு...

அப்பட்டமான ஒரு கொலை! வலுவான சாட்சிகள்! அனைத்தும் இருந்தும் செல்வாக்கு, பணம், அந்தஸ்துக்கு முன் எதுவும் செல்லுபடியாகவில்லை! துணிந்து நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முயற்சிக்கு நீதிமன்றத் தீர்ப்பு சவாலாக அமைந்தது. ஆனால், நீதியை நிலைநாட்ட அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு பிறழ்சாட்சி ரவிசுப்பிரமணியத்தின் மனுமூலம் வந்துள்ளது. பொய் சாட்சி கூறிய குற்றம் தன்னை உறுத்த உண்மையைச் சொல்ல முற்படும் ரவி சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், அந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக போலீஸ் அதிகாரி பிரேம்குமார் இருந்தார். அப்பொழுது என்னிடம் பேச வழக்கறிஞர்கள், போலீசார் என அனைவரும் பிரேம்குமார் மீது இருந்த மரியாதையால் பயந்தனர். அதனால், நான் சங்கரராமன் கொலை வழக்கில் அப்ருவராக மாறி ஜெயேந்திரர்தான் சங்கரராமனை அப்பு மூலமாக தீர்த்துக் கட்டினார். அதற்காக அவர் ரவுடிகளுக்கு பணம் கொடுத்தார் என சாட்சியம் அளித்தேன். ஜெயேந்திரர் சார்பாக சுமார் 20 வழக்கறிஞர்கள் என்னை குறுக்கு விசாரணை செய்தார்கள். பிரேம்குமார் கொடுத்த தெம்பால் உண்மையை தைரியமாக கோர்ட்டில் எடுத்து சொன்னேன். துரதிர்ஷ்டவசமாக பிரேம்குமார் அவரது பணியில் நெருக்கடிக்குள்ளானதோடு, திடீரென இறந்தும் போய்விட்டார். அதன் பிறகு நிலைமை தலைகீழானது.

தனித்து போட்டியிட்டால் திமுக 70 - 80 தொகுதிகளில் வெற்றி ! கருத்து கணிப்பு....

சட்டசபை தேர்தலில், தனித்துப் போட்டியிட்டால், தி.மு.க.,வுக்கு, 70 - 80, 'சீட்' கிடைக்கும்' என, சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளதால், அக்கட்சியினர் சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்காக பிரத்யேகமாக செயல்படும் சமூக வலைதளம், தொகுதி மக்களின் கேள்வி கேட்கும் கூட்டம், 'நமக்கு நாமே' சுற்றுப் பயணம், விடியல் மீட்பு பேரணி பொதுக்கூட்டம், வேட்பாளர் தேர்வு பணி, 234 தொகுதிகளில் வெற்றி, தோல்வி பற்றிய சர்வே உள்ளிட்ட, முக்கிய பணிகளை, 'ஒன் மேன் குரூப் - ஓ.எம்.ஜி.,: ஸ்டாலின் பார் சி.எம்.,' என்ற குழு, மேற்கொண்டு வருகிறது. இந்த குழு சார்பில், ஸ்டாலின் சுற்றுப் பயணத்திற்கு பின், எடுத்துள்ள சர்வே முடிவில், 'தி.மு.க., தனித்து போட்டியிட்டால், 70 - 80 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே கூட்டணி சரியாக அமைந்தால் அடுத்தஆட்சி அதிமுகவாக இருக்காது..... 

தி.மு.க., காங் கூட்டணியாக செயல்பட்டால் சாதகமாக இருக்கும்! முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர்!


தஞ்சாவூர்: ''வரும் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இணைந்து செயல்பட்டால், இரண்டு கட்சிக்கும் சாதகமாக இருக்கும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் கூறினார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சீன பட்டாசுகள் அதிகளவில், இந்தியாவிற்கு வருவதற்கு பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம். தனது உரையில் மேக் இன் இந்தியா என முழக்கமிட்டார். ஆனால், இன்று நடைமுறையிலோ, வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு துர்கா பூஜைக்கு கூட பொம்மைகள் சீனாவில், இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது, அதுபோல தீபாவளி பட்டாசு ரகங்களும் அதிகளவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   இது தான் மேக் இந்தியா முழக்கமா?தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மேற்கொண்டுள்ள நமக்கு நாமே நடைபயணம் மூலம், பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகள.கேட்டறிவது நல்ல விஷயம்தான் பாராட்டுகிறேன், ம்ம்ம்ம் ...காங்கிரஸ் தலைதூக்க ராகுல் சம்மதிக்க மாட்டாரே?  இன்னா பண்றது தலைவா?

வின்சென்ட் சாமிக்கண்ணு - Cinema- என்றொரு தொழில் அல்லது கலை உண்டு என்று தமிழகத்துக்கு அறிமுகம்செய்தவர்..

thamizhstudio.com/samikkannu_
இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்த சாமிக்கண்ணு வின்சென்ட் எனும் தமிழரை, நினைவூட்டும் கட்டுரையை, THE INIDAN EXPRESS நாளிதழில் மு.நியாஸ் அகமது எழுதியுள்ளார். பேசாமொழி எனும் எனது ஆவணப்படத்தில் திரு. சாமிக்கண்ணு வின்செண்ட் பற்றி சற்றே விரிவாக பதிவு செய்திருந்தேன். இத்தருணத்தில், திரு.சாமிக்கண்ணுவை நினைவு கூரும் நியாஸ் அகமதுவுக்கும் INDIAN EXPRESSக்கும் வாழ்த்துகள்!
சாமிக்கண்ணு வின்சன்ட் என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களா எனத் தெரியவில்லை. ஆனால், அந்தப் பெயருக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் சாகசங்களை, சாதனைகளை, இழப்புகளை, தாங்க இயலா துயரங்களை, ஒரு மாபெரும் வரலாற்றை நீங்கள் அனைவரும் உணர்ந்து அம்மனிதரின் வாழ்க்கையை உலகிற்கு அறிவிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதத் துவங்குகிறேன்.
திருச்சி பொன்மலை ரயில் நிலையம். 1905 ஆம் ஆண்டு. கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட சாமிக்கண்ணு எனும் 22 வயது இளைஞர் டிராப்ட்ஸ்மேனாகப் பணியாற்றுகிறார். வெள்ளைக்காரர்களும், பணக்காரர்களுமே மிகுதியாக வந்து போகும் இடம் ரயில் நிலையம். சாமிக்கண்ணு மிக எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்.