வியாழன், 29 அக்டோபர், 2015

100 மில்லியன் இந்தோனேசியர்களுக்கு பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வழங்கும் கூகுள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு வானில் பறக்கவிடப்படும். அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதுவரை வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதன்மூலம் இணையதள வசதிகளைப் பெறமுடியும். பிராஜெக்ட் லூன் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டமானது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரேசில் நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தோனேசியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி இன்று கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில் கூகுள் ஆல்பாபெட் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மற்றும் இந்தோனேஷியாவை சேர்ந்த 4 மொபையில் சேவை நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்குபெற்றார்கள்.

மலை மற்றும் காடுகளால் சூழப்பட்ட 1700 தீவுகளில் வசிக்கும் 100 மில்லியன் இந்தோனேசியர்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும், 2016-ம் ஆண்டில் மொத்தமாக 300 பலூன்களை பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பலூன்கள், பிற்காலத்தில் எங்கேனும் இயற்கைப்பேரழிவுகள் ஏற்பட்டு தகவல் தொடர்புகள் கிடைக்க இயலாத நிலையில் ஆகாயமார்க்கமாக மீட்புப் பணிகளில் ஈடுபட உதவக்கூடும் என்றும் கூறப்படுகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக