சனி, 31 அக்டோபர், 2015

கோவன் கைதுக்கு கொந்தளிக்கும் மக்கள் Who is this kovan? ..தலைவர்கள்..ஊடகங்கள்...தமிழகத்தையும் தாண்டிய புயல் .....

சென்னை: ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தேசபக்தி பாடல்களைப் பாடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் டாஸ்மாக் கடையை மூடச்சொல்லி பாடல் இயற்றி பாடிய கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே நாள் இரவில் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவனின் கைது.
யார் இந்த கோவன்? என்று கேட்டால் இவரை தமிழ்நாட்டின் ‘கத்தார்' என்று செல்லமாக அழைக்கின்றனர்.  "இட்லி ஒத்த ரூபா... கக்கூஸூ 5 ரூ.... சாப்பாடு 5 ரூபா.... பருப்பு 100 ரூபா" என்று இன்றைய நிலையை இயல்பாக பாடும் கோவன், கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். விவசாயக் கூலி தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த கோவனுக்கு அம்மா பாடும் பாடல்கள்தான் இன்ஸ்பிரேசன். ஐ.டி.ஐ. படிப்பை முடித்துள்ள கோவன், 1996ம் ஆண்டு திருச்சி பெல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அவருக்கு நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில்தான் ஆர்வம் அதிகரித்துள்ளது.

‘மக்கள் கலை இலக்கியக் கழகம்' அமைப்பின் மையக் கலைக் குழுப்
பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அனல் தெறிக்குமாம். ‘கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு... நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு' என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் கொப்பளிக்கிறது. ஊர் ஊராக போய் ஆளும் அரசுக்கு எதிராகவும், அநியாயத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் கோவன், 'ஊருக்கு ஊர் சாராயம்.... தள்ளாடுது தமிழகம்' என்ற பாடல் கோவனை உலக அளவில் பிரபலப்படுத்தியிருக்கிறது. Read more tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக