ஞாயிறு, 25 அக்டோபர், 2015

லண்டனில் குவியும் இந்திய மாணவர்கள்! சர்வதேச தரம் இங்கில்லையா?


லண்டனில் உள்ள உலகப்புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக, இந்திய மாணவர்கள் இங்கிலாந்து செல்வது ஆண்டு தோறும் உயர்ந்த வண்ணம் உள்ளது. அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனில் சர்வதேச தரம் வாய்ந்த, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் இருப்பதால், அமெரிக்கா, இந்தியா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஹாங்காங், கிரீஸ், நைஜீரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகளவில் மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வரிசையில் சீன மாணவர்கள் முதலிடத்தையும், அமெரிக்க மாணவர்கள் 2வது இடத்தையும், இந்திய மாணவர்கள் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.  இதனால் இந்தியாவின் கல்வித்தரம் உயர்ந்துள்ளதா?....குறைந்துள்ளதா?.....ஒண்ணுமே புரியல்லையே?...
2014ம் ஆண்டு நிலவரப்படி, லண்டன் பல்கலைகழகங்களில் படிக்கும் 1,06,000 வெளிநாட்டு மாணவர்களில், 13,640 சீன மாணவர்களும், 6,440 அமெரிக்க மாணவர்களும், 4,790 இந்திய மாணவர்களும் உள்ளதாக கணக்கெடுப்பு விவரம் தெரிவிக்கிறது. கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் இங்கிலாந்துக்கு 3 பில்லியன் பவுண்ட் வருமானம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக