சனி, 31 அக்டோபர், 2015

டாஸ்மாக் பாட்டுக்கு இவ்வளவு பயமா? கோவன் கைது...இந்திய அளவில் கண்டனம்..சும்மா அதிருதில்ல...

“சும்மா பேசியதற்காக நரேந்திரா தபோல்கர், பன்சாரே கொல்லப்பட்டார்கள், சும்மா எழுதியதற்காக கல்பர்கி கொல்லப்பட்டார், இதோ பாடலைப் பாடியதற்காக கோவன் சட்டவிரோத கைது”

1. In English Press

2. தமிழ் பத்திரிகைகளில்

விகடன் Comments
Balakrishnan
மக்களுக்காக நான் என்று கூறி மக்களின் மூளை சலவை செய்து ஆட்சி அதிகாரம் செய்யும் கூட்டம். ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டிய மக்களின் கலைஞனை கைது செய்திருக்கிறது.தெருவெங்கும் மதுக்கடைகளை திறந்து பெரும்பாலன குடிமக்களை குடிகாரர்களாக்கி ஆட்சி சுகம் காண்பவர்கள் எளியோரின் குரல்களை தடைசெய்ய எண்ணுகிறார்கள். சாராயக்கடைகளுக்கு பாதுகாப்பும்,சாமான்ய மக்களுக்கு சிறைக்கோட்டம் என ஆடாத ஆட்டமாடும் கூட்டத்தார் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறியப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
Sankar from Hong Kong
“””சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் “”” இதிலென்ன இரு பிரிவு….?? என்ன கொடுமை
Raja Sivakkumar from Chennai
வெளிய வந்தபிறகும் பாடுங்க தோழரே , நாங்க சப்போர்ட் பண்றோம் ,whatsapp ,நெட்ல எதில வேணாலும் போடுங்க ……………மூடாமல் ஓய்வதில்லை ……
Kathir from Singapore
ஜனநாயம் என்ற சொல்லே தவறு . சாக்கடையை மூட ஒருவன் தயாரானால், உடனே கைது. தூக்கி எறியுங்கள் டாஸ்மாக் கடைகளை.
Vijay Venkatesan from Chennai
அட பாவிகளா இது அநியாயம்!
3. பேஸ்புக்கில்
Bala G
சாராய அதிபர்களுக்காகவும் பெப்ஸி போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்காகவும் ஆட்சி நடத்துகிற ஜெயாவின் போலீஸ் டாஸ்மாக்கை மூடு பாடலுக்காக புரட்சிகர பாடகர் தோழர் கோவனை கைது செய்திருக்கிறது..
fb-bala
Panneerselvam Ramasamy
மக்களின் அவலங்களையும் . சாதி .மத.வெறி எதிராக வும் கலை இசையின் மூலம் எளிமையாக எடுத்துச் சொன்ன தோழர்கோவன் கைதுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்
சுபாஷ் சூலூர்
subash-sulur
பீமாவீரன் புரட்சிபுலிகள்
சாராயக்கடை விவகாரம் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை தோற்கடிக்கும்
Hero Pandia
காலக்கொடுமை
Shanmugam Muthusamy
Thozhar inn kural Innum ooongiii olikkummmm
Cyril Alexander
தமிழகத்தின் மக்கள் பாடகன் . ஜெயா அரசு தள்ளாடி வீழ்வது உறுதி.
Anand Ariyalur
கொடுமை சார் தமிழகத்தில்
நா.முத்துக்குமார் தமிழன்
கொடநாட்டு_கோமாளவள்ளியின்‬
கொழுப்பெடுத்த_பாசிசம்‬
பாடலைப்பாடியதற்காக_கைதா‬
மகஇகவின் கலைக்குழுவின் பாடகர் கோவனை சட்டவிரோத கஸ்டடியில் வைத்திருக்கிறார்கள்
டாஸ்மாக்கிற்கு எதிராக தொடர்ந்து
பிரச்சாரம் செய்ததுதான் காரணம்.
பாடலை பாடியதற்காக தேசதுரோக வழக்கில் கைதா? இதுதான் பாசிசம்.
கருத்துரிமையை காவு கேட்கும்
காவி பாசிசம்+ஜெ.வின் ஸ்பெசல் திமிரும்.
சும்மா பேசியதற்காக நரேந்திரா தபோல்கர், பன்சாரி கொல்லப்பட்டார்கள்
சும்மா எழுதியதற்காக கல்பர்கி கொல்லப்பட்டார்
இதோ பாடலைப் பாடியதற்காக கோவன் சட்டவிரோத கைது
அதே பாடலை நானும் பரப்புகிறேன்
கைது செய்யடா போலீஸ் நாய்களே
இந்த பாடலை அதிகம் பரப்புங்கள்
Arul Ezhilan
மூடு டாஸ்மாக்கை மூடு பாடலை பாடியதற்காக புரட்சிகர பாடகர் தோழர் கோவன் கைது அராஜகமானது.
Krishna Kumar Appu
ரொம்ப மோசம் அண்ணா.. ஒரு ஆட்சியை விமர்சிக்கிறதுக்கு பாடலும் ஒரு வழி. அதுக்காக கைது பண்றதெல்லாம் ரொம்ப ஓவர். ஒருவேளை புகழ்ந்துபாடிருந்தா ஆயிரம் பொற்கிழிகள் குடுத்துருப்பாங்களோ என்னவோ..
Hv Vichu
கருத்து சுதந்திரம் மக்களாட்சியின் உயிர்மூச்சு. அதை மறுக்கும் ஆட்சியை அனைவரும் கண்டிக்க வேண்டும். எதிர்க்க வேண்டும். கலைஞனுக்கு எதிரான செயலை கலை உலகம் கண்டிக்க வேண்டும்.
Muralitharan Mauran via வினவின் பக்கம்
மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !
இன்று 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்து செய்தனர். தற்போதைய நிலவரப்படி அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 ஏ சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரம் தோழர் கோவனை கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல போலிசு மறுக்கிறது. vinavu.com

3. In Twitter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக