செவ்வாய், 27 அக்டோபர், 2015

நானும் ரவுடிதான்... நயன்தாரா விஜய் சேதுபதி ஜோடியும் வெற்றி பெற்றுவிட்டது .

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘நானும் ரௌடிதான்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் புதிய படம் தயாரிக்கபோவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நம்ம ரவுடி விஜய் சேதுபதியை வைத்து எனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கயிருக்கிறேன் என்று கூறினார். விஜய் சேதுபதி கைவசம் தற்போது அதிக படங்கள் உள்ளன. ‘இடம் பொருள் ஏவல்’, ‘மெல்லிசை’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து, வெவ்வேறு நிலைகளில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதவிர, கார்த்திக் சுப்பாராஜின் ‘இறைவி’, போலீஸ் இன்ஸ்பெக்டராக ‘சேதுபதி’ ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். மேலும், ‘வா’ இயக்குனரின் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக