ஞாயிறு, 25 அக்டோபர், 2015

இந்தோனேசியா Dance Club தீ 17 பேர் பலி ...சுலாவசி தீவில் ஏற்றபட்ட


இந்தோனேசியாவில் சுலாவசி தீவில் உள்ள டேன்ஸ் கிளப்பில் ஏற்பட்ட தீ  விபத்தில் 17 பேர் உடல் கருகி பலியானார்கள். இந்தோனேசியாவில் சுலாவசி தீவுவில் உள்ள காரியோகி என்ற டேன்ஸ் கிளப்பில் இன்று அதிகாலை 1 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மூன்று மாடி கொண்ட அந்த கிளப் 2-வது மாடியில் இருந்து தீ குபு குபு என பற்றி எரிந்தது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்த டேன்ஸ் கிளப்பில் மகிழ்ச்சியோடி ஆடிபாடிக்கொண்டிருந்தனர்.அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.கரும்புகை வெளியேறியதால் அங்கிருந்த 71 பேருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிளப்பில் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரும் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் பலர் ஜன்னல் வழியாக கீழே குதித்துள்ளனர். அதில் சில பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக