சனி, 31 அக்டோபர், 2015

வைகோ பாடிய ஊத்தி கொடுத்த உத்தமி...தள்ளாடுது தமிழகம்...சவால் விட்ட வைகோ!

திருச்சி: "ஊருக்கு ஊர் சாராயம், தள்ளாடுது தமிழகம், ஊத்தி கொடுத்த உத்தமி, போயஸ் கார்டனில் உல்லாசம் என்ற பாடலை நான் தற்போது பாடியுள்ளேன் முடிந்தால் என் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரட்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீதான கொலை வெறி தாக்குதல், கருத்துரிமை மீதான தாக்குதல்களை கண்டித்து மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.  அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ, நாடு முழுவதும் சங்பரிவார் அமைப்புகளால் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடைபெறும் கொலை வெறி தாக்குதல்களால் இந்திய ஜனநாயகத்துக்கே பேராபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் வரலாற்று சாதனையாளர்கள் கூட சாகித்ய அகடாமி விருதுகளை திரும்ப கொடுத்து வருகிறார்கள். இந்த ஆபத்தை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அரியானா மாநிலத்தில் தலித் சிறுவர்கள் 2 பேர் வீட்டிற்குள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம், உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி வீட்டில் வைத்திருப்பதாக கூறி இஸ்லாமிய முதியவர் ஒருவரை அடித்துக்கொன்ற சம்பவம், காஷ்மீரில் சட்டசபையிலேயே மாட்டிறைச்சி விருந்து பரிமாறியதாக எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட சம்பவம் போன்றவை நாட்டையே பேராபத்துக்கு இழுத்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. இதைக்கண்டிக்காத மத்திய அமைச்சர் வி.கே.சிங், 2 நாய்களை கொன்றால் கூட பிரதமரும், பதில் சொல்ல வேண்டுமா? என்று ஏளனமாக பேசுகிறார். இதை மோடி கண்டிக்கவில்லை. அவரை உடனடியாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

Read more at://tamil.oneindia.com

1 கருத்து: