திங்கள், 26 அக்டோபர், 2015

வைகோ :அதிமுக கொள்கையே இல்லாத கட்சி: திமுக கொள்கையை இழந்த கட்சி !

விழுப்புரத்தில் மதிமுக மாவட்ட மாணவரணி துணை செயலர் பாண்டியன்-அனிதா திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று பேசுகையில், தமிழகத்தில் முகம் தெரியாத நபர்களுக்கு மதிமுக முகவரி கொடுத்துள்ளது. அதுபோன்றவர்களை, சிலர் அழைத்துக்கொள்கின்றனர். அவர்கள் எங்கு சென்றாலும் நல்லபடி இருக்கட்டும். தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக கொள்கையே இல்லாத கட்சியாக உள்ளது. திமுக கொள்கையை இழந்த கட்சியாக உள்ளது. மதிமுக மட்டுமே கொள்கையோடு லட்சக்கணக்கான தொண்டர்களை வைத்திருக்கும் இயக்கமாக செயல்படுகிறது.
இந்த கொள்கை குன்று  வைகோவின் நிரந்தர  ஆதரவை யாராச்சும்  பெற்றால்  கடைசியில் என்ன நடக்கும் என்பதை தெளிவாக  சொல்ல ஒருவரால் முடியும் ஆனா அவர்.....மாட்டார் ...வச்சுகிட்டு வஞ்சனையா...
மதிமுக ஆட்சிக்கு வரக்கூடாதென்று சிலர் நினைக்கின்றனர். தமிழக மக்கள் தொகையில் அனைத்து கட்சிகளையும் சேர்த்தாலும், 35 சதவீதம் அளவில் தான் கட்சி உறுப்பினர்களாக உள்ளனர். மீதமுள்ள 65 சதவீதம் மக்கள் எக்கட்சியையும் சேராதவர்கள். இவர்கள் தீர்மானிப்பவர்கள் தான் ஆட்சியில் அமர முடியும். உதாரணமாக, புதுதில்லியில் 20 சதவீதம் உறுப்பினர்களைக் கொண்ட பாஜக, வெறும் 5 சதவீதம் உறுப்பினர்கள் கூட இல்லாத ஆம்ஆத்மியிடம் தோற்றது. ஆகவே, மக்கள் விரும்புபவர்கள் தான் ஆட்சியில் அமர முடியும் என்றார் nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக