வியாழன், 29 அக்டோபர், 2015

சீனாவில் ஒரு குழந்தைக் கொள்கை முடிவு....பெண்களுக்கு தட்டுப்பாடு... Gender Imbalance..

பெண்குழந்தைகளை  கருவிலேயே கண்டுபிடித்து கருச்சிதைவு செய்ததன் பலனை சீனா அனுபவிக்க தொடங்கிவிட்டது. ஏராளமான ஆண்கள் பெண்களுக்காக பிற நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்கனவே ஏற்பட்டு விட்டது. அடுத்தது இந்தியாவிலும் குறிப்பாக வட மாநிலங்களிலும் இந்த நிலைவரும்   சீனா பல தசாப்தங்களாக அமலில் வைத்திருந்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக ஷின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகிறது. இனி எல்லா தம்பதியரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி , அரச செய்தி நிறுவனமான ஷின்ஹுவா கூறுகிறது.
சீனாவில் குழந்தைப்பேறு விகிதத்தைக்குறைக்கவும், மக்கள் தொகை அதிகரிப்பு விகிதத்தை மந்தப்படுத்தவும் இந்த சர்ச்சைக்குரிய கொள்கை தேசிய அளவில் 1979ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சீனாவின் முதியார் பிரச்சனை பற்றிய கவலைகள் காரணமாக இந்தக் கொள்கை மாற்றப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் தோன்றின.

இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, சுமார் 40 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்தக் கொள்கையை மீறி அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொண்ட தம்பதியர், அபராதங்கள் , வேலையிழப்பு, கட்டாயக் கருச்சிதைவு போன்ற பல்வேறு தண்டனைகளுக்கு உள்ளானார்கள்.
இந்தக் கொள்கையின் விளைவாக, அதிகரித்த சமூகச் செலவினம் மற்றும் வீழ்ச்சியடைந்த தொழிலாளர் எண்ணிக்கை போன்றவை குறித்து, மக்கள் தொகையியலாளர்களும் சமூகவியலாளர்களும் கவலைகளை எழுப்பிய நிலையில், காலப்போக்கில் இந்தக் கொள்கை சில மாகாணங்களில் தளர்த்தப்பட்டது .
தேசிய அளவில் விதிகளை இரண்டாண்டுகளுக்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சி தளர்த்தத் தொடங்கிவிட்டது. ஒரு தம்பதியரில் குறைந்தது ஒருவர் மட்டும் அவரது குடும்பத்தில் ஒரே குழந்தையாக இருந்தால், அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக