வெள்ளி, 30 அக்டோபர், 2015

தமிழக முதல்வர் ஜெயலலிதா ! காதற்ற ஊசியும் வாராதுகண்...பட்டினத்தார்!

Jayalalithaa withdraws orders against Sasikalasavukkuonline.com :காதற்ற ஊசியும் வாராதுகண் கடைவழிக்கே என்றார் பட்டினத்தார். ஆனால், இந்த மனிதசமூகத்தின் காதுகளில் இவையெல்லாம் ஏறுகிறதா என்ன ?

ஊழல் இச்சமூகத்துக்கு எத்தகைய தீங்கு பயப்பிக்கக் கூடியது என்பதை, பாலகிருஷ்ண தத்தாரேயா என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
“Corruption is not only a punishable offence but also undermines human rights, indirectly violating them, and systematic corruption, is a human rights’ violation in itself, as it leads to systematic economic crimes.”
ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறுகிறது. கவனமாக செய்யப்படும் ஊழல் எனபது, மனித உரிமைகள் மீறல் மட்டுமல்ல, அது, தொடர்ந்த பொருளாதாரக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய நீதி நாயகன் மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார். தமிழ் மக்களின் சிந்தனையில் எதோ ஒரு அடிப்படை கோளாறு இருக்கிறது அங்கேயும்  அப்படித்தாய்ன் முட்டாள்தனமாக அழிவுப்பாதையில் போயி அழிந்தார்கள்... இங்கேயும் அப்படித்தாய்ன் கொள்ளை அடிப்பவர்களை அம்மா அம்மம்மா என்கிறார்கள்.....

A-1 is occupying a high position in the Government of State of Tamil Nadu. It is often observed “just as those at high places behave, so others below”. If persons holding higher positions indulge in corruption, not only those below get encouraged to indulge in corruption, but also the person holding higher position will not be in a position to exact honesty from them or to take action against delinquent officials.
குற்றவாளி 1 (ஜெயலலிதா) தமிழக அரசில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். ‘மேலே இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ, கீழே இருப்பவர்களும் அப்படியே நடந்து கொள்வார்கள் என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு’. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபட்டால், அவருக்கு கீழே உள்ளவர்கள் ஊழலில் ஈடுபட துணிவு கொள்வார்கள் என்பதோடு, தலைமைப் பொறுப்பில் இருக்கும் அந்த ஊழல் நபரால் தனக்குக் கீழ் உள்ளவர்களிடம் நேர்மையை எதிர்ப்பார்க்க இயலாது என்பதோடு, தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இயலாது.
ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, உரக்க உரக்க கூவிய அதிமுக அடிமைகள்…. ஏன் கருணாநிதி ஊழல் செய்யவில்லையா ? திமுக நேர்மையான கட்சியா என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். கருணாநிதி ஊழல் அரசியல்வாதிதான். திமுக ஊழல் கட்சிதான். அப்படிப்பட்ட கருணாநிதி மீதும், திமுக மீதும், 2001 முதல் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? 2011 முதல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? ஜெயலலிதாவை யாராவது கையைப் பிடித்துத் தடுத்தார்களா ?
திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்றாலும், இரண்டுக்கும் மெல்லிய வேறுபாடு இருக்கிறது.
திமுக ஆட்சியில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும். சாலைகள் போடப்படும். குளங்கள் தூர் வாரப்படும். புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். அதிலிருந்து பெரிய குடும்பம், சின்ன குடும்பம், துணைக் குடும்பம், இணைக் குடும்பம் என்று அத்தனை குடும்பங்களும் கமிஷன் பெறும். அரசு நூறு ரூபாய் செலவு செய்தால், ஒரு எழுபது ரூபாய் மக்களைச் சென்றடையும்.
ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சியில்….. ? கடந்த மூன்று வருடங்களாக, ஒரே ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டிருக்கிறதா ? ஒரு புதிய தொழிற்திட்டங்கள் வந்திருக்கின்றனவா ? டாஸ்மாக் விற்பனையைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகம் நடக்கின்றதா ? முதல்வர் பன்னீர்செல்வம், கருணாநிதியைப் பார்த்து சொன்ன அதே பழமொழியை சொல்ல விரும்புகிறேன். “அறுக்கமாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவா” என்ற பழமொழிக்கு ஏற்ப, சாதா முதல்வர், மக்கள் முதல்வர், சாதா தலைமைச் செயலர், மக்கள் தலைமைச் செயலர், சாதா டிஜிபி, மக்கள் டிஜிபி என்று ஆயிரத்தெட்டு அமைச்சர்கள், அதிகாரிகள்.
தமிழ்நாட்டில் நடப்பது போல கேடுகெட்ட ஆட்சி எங்குமே நடக்காது தோழர்களே…. ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி, அரசுக் கோப்புகளைப் பார்க்கிறார். அந்த தண்டிக்கப்பட்ட குற்றவாளியிடம், படித்த அரசு அதிகாரிகள் மண்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
jjsasikalanakeeran
தமிழக அரசில் என்ன நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா ? 2011ல் ஜெயலலிதா பதவியேற்ற நாள் முதலாகவே …. ? வசூல், வசூல், மற்றும் வசூல். மாத வசூல் கிடையாது. வார வசூல். ஒவ்வொரு அமைச்சருக்கும், அவரது துறைக்கு ஏற்றார்ப்போல, டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் வாரந்தோறும் பணத்தை வசூல் செய்து, கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படும் ஒரு பங்களாவில் தங்கள் வசூல் தொகையை கொண்டு செலுத்த வேண்டும். அப்படி செலுத்துகையில் அத்தனையும் புதிய கரன்சித் தாள்களாக இருக்க வேண்டும். அந்த கரன்சிக் கட்டின் மேல்புறத்தில், முதல் நோட்டின் எண்ணையும், கடைசி நோட்டின் எண்ணையும் ஒரு தாளில் குறிப்பிட்டு சொருகியிருக்க வேண்டும். தொகையைக் கொடுத்ததும், ஒவ்வொரு அமைச்சருக்கம் அவர்கள் கொடுத்த தொகையில் 30 சதவிகிதம் திரும்ப அளிக்கப்படும். யாராவது ஒரு அமைச்சர் தனக்குச் சேர வேண்டிய 30 சதவிகிதத்தை எடுத்துக் கொண்டு தொகையைக் கொடுத்தால் அவ்வளவுதான்.. ங்கொய்யால என்ன நடக்கும்னே தெரியாது. அப்படி வசூல் செய்யப்பட்ட தொகை, பல்வேறு ஆடிட்டர்களின் வழியாக ஹவாலா மூலமாகவும், பல்வேறு இடங்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது.
ஒரே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். தமிழ்நாடு ஒரு நாளைக்கு 3000 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து வாங்குகிறது. தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதலாக ஒரே ஒரு மின் உற்பத்தித் திட்டம் கூட செயல்படுத்தப்பட வில்லை. ஏறக்குறைய ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய்க்கும் அதிகமாக மின்வாரியத்தால் தனியாரிடமிருந்து வாங்கப்படுகிறது. இதில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு ஒரு யூனிட்டுக்கு கமிஷன் 20 பைசா. மின்வாரிய சேர்மன் கப்பர் சிங் என்கிற ஞானதேசிகன் ஐஏஎஸ்க்கு ஒரு யூனிட்டுக்கு இரண்டு பைசா. இந்த கணக்குப்படி பார்த்தால், கப்பர்சிங்குக்கு ஒரு நாளைய வருமானம் 14.40 லட்சம் மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு ஒரு நாளைய வருமானம் 1.44 கோடி. இவர்கள் இருவரும் தனித்தனியாக ஜெயலலிதாவுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
Natham Viswanathan
டாஸ்மாக் கடைகளை பார்வையிட்டிருக்கக் கூடியவர்களுக்கு டாஸ்மாக்கில் ஒரு நாளும் விற்பனை குறைவதேயில்லை என்பது நன்கு புலப்படும். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், இரண்டு முறை சரக்கு விலை உயர்த்தப்பட்டது. இருந்தபோதும், டாஸ்மாக் வருவாய் கடந்த தீபாவளியன்று குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இணைப்பு  இது எப்படி ?
டாஸ்மாக்கோடு இணைக்கப்பட்டுள்ள பார்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். பெரும்பாலானவர்கள் பார்களில் அமர்ந்தே குடிக்கின்றனர். இவ்வாறு குடிப்பவர்கள், பார்களில் அமர்ந்து சப்ளை செய்பவர்களிடமே ஆர்டர் செய்கின்றனர். அவர்களுக்கு, சப்ளையர், டாஸ்மாக் கடையில் சரக்கை வாங்குகிறாரா அல்லது, அவர் பாரில் உள்ள சரக்கை எடுத்துத் தருகிறாரா என்பது தெரியாது… அதை தெரிந்து கொள்ளவும் யாரும் ஆர்வம் காட்டப்போவதில்லை. நத்தம் விஸ்வநாதன் தன்னுடைய நூதனமான தந்திரத்தின் மூலமாக, சரக்கு விற்பனையாளர்களிடமிருந்து, நேரடியாக பார்களுக்கு தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் சரக்கை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்பவர், நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் கோபி.
உதாரணத்துக்கு எஸ்என்ஜே டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அரசுக்கு ஒரு பாட்டில் பியரை 100 ரூபாய்க்கு வழங்குகிறதென்றால் அதன் அடக்க விலை 30 ரூபாய் இருக்கும். மீதம் உள்ள 70 ரூபாயும், அரசு விதிக்கும் வரி. அரசுக் கணக்குக்கே வராமல், நேரடியாக பார்களுக்கு எஸ்என்ஜே டிஸ்டில்லரிஸ் சரக்கு வழங்கினால், அதாவது டாஸ்மாக் கணக்குக்கே வராமல். அரசுக்கு வர வேண்டிய 70 ரூபாய் வருவாய் யாருக்குப் போகும் ? இது ஒரு பியர் பாட்டிலினுடைய கணக்கு. இது போல, லட்சக்கணக்கான பாட்டில் பியர்கள் மற்றும் இதர மதுபானங்கள் பார்களுக்கு சப்ளை செய்யப்பட்டால் கிடைக்கும் வருவாயை யோசித்துப் பாருங்கள். டிஸ்டில்லரீஸ் மற்றும் ப்ரூவரி நிறுவனங்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. எங்கே கொடுத்தாலும் அவர்களின் அடக்கவில்லை கிடைத்தால் போதுமல்லவா ? இது போல கிடைக்கும் வருமானத்திலும் பெரும்பங்கு, கொடநாடு கோமலவள்ளிக்கே செல்கிறது.
சரி. இப்படியெல்லாம் வசூல் செய்யும் பணத்தை என்ன செய்கிறார்கள் ஜெயலலிதா மற்றும் சசிகலா என்ற கேள்வி இயல்பாக எழும் அல்லவா ? அவர்கள் அந்தப் பணத்தை என்ன செய்திருக்கிறார்கள் என்பதைப் பற்றித்தான் இந்த கட்டுரை.
ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல்வரான பிறகு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயரில் ஏராளமான பினாமி நிறுவனங்களை தொடங்குகிறார் என்று கூறியுள்ளார் மைக்கேல் குன்ஹா. இவை அனைத்தும் பினாமி நிறுவனங்கள் என்பது, அந்த வழக்கில் தெள்ளத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
Cho_ramasamy
இது போல ஜெயலலிதாவின் பினாமி நிறுவனமாக தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட். 05 செப்டம்பர் 2005ல் இந்த நிறுவனம் தொடங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் தொடக்க கால இயக்குநர்களாக யார் இருந்தார்கள் என்ற விபரம் இல்லை.
ஆனால், சசிகலா டிசம்பர் 2011ல் வெளியேற்றப்பட்ட உடனே இந்த ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தில் இயக்குநர்களாக நியமிக்கப்படுபவர்கள் இரண்டு பேர். ஒருவர் தன்னை தமிழகத்தின் மிகப்பெரிய நியாயவானாக சித்தரித்துக்கொள்ளும், தலைச்சிறந்த ப்ரோக்கர் சோ ராமசாமி. இவர் பேசும் ஊர் நியாயத்தைக் கேட்டால் காது கிழியும். அப்படி ஒரு நேர்மையாளர் போல பேசுவார். நேரம் இருந்தால் கேளுங்கள்.     யு ட்யூப் இணைப்பு
மிடாஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த இந்த மிடாஸ் மாமா சோ ராமசாமிதான் இந்த ஹாட்வீல்ஸ் நிறுவனத்தில் மன்னார்குடி மாபியாவின் வெளியேற்றத்துக்குப் பிறகு இயக்குநராக இருந்தார். இவராடு இருந்த மற்றொரு இயக்குநர் பூங்குன்றன். இந்த பூங்குன்றன் யார் தெரியுமா ? இவரது தந்தையின் பெயர் புலவர் கலியபெருமாள். சொந்த ஊர் சூரக்கோட்டை. இவருக்கு வேலை, நமது எம்ஜிஆரில் கட்டுரை எழுதுவது, ஜெயலலிதாவுக்கு அறிக்கைகள் எழுதித்தருவது ஆகியன. இந்த கலியபெருமாளை சசி ஜெயா சகோதரிகள் ஒரு நாள் திடீரென்று விரட்டி விட்டனர். அவரை விரட்டி விட்டு விட்டு, அவர் மகன் பூங்குன்றனை அவர் தந்தை இடத்தில் வேலைக்கு வைத்துக் கொண்டனர்.
அந்தா வலது ஓரத்துல கோழி திருடுன மாதிரி நிக்கிறாரே.... அவருதான் தொழில் அதிபர் பூங்குன்றன்.
அந்தா வலது ஓரத்துல கோழி திருடுன மாதிரி நிக்கிறாரே…. அவருதான் தொழில் அதிபர் பூங்குன்றன்.
Form 32 Cho_Page_1
பூங்குன்றனின் தற்போதைய பணி, ஜெயலலிதாவுக்கு வரும் கடிதங்களை பிரித்து அவர் மேசையில் வைப்பது, செய்தித்தாள்களை அவர் பார்வைக்கு வைப்பது உள்ளிட்டன. இந்த பூங்குன்றனும், ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் இயக்குநராம். ஜெயலலிதா தன்னை இயக்குநராக இருக்கும்படி கேட்டதும், உடனடியாக ஒப்புக்கொண்டு சாராய ஆலையான மிடாஸுக்கும், ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கும் இயக்குநராக இருக்க ஒப்புக்கொண்ட சோ ராமசாமி, நவம்பர் 2012ல், இந்த நிறுவனங்களையெல்லாம் விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்.
இந்த நிறுவனங்களில் மீண்டும் இயக்குநரானவர்கள் இரண்டு பேர். ஒருவர் டாக்டர் கே.எஸ்.சிவக்குமார். மற்றொருவர் கார்த்திகேயன் கலியபெருமாள்.
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்துக்கு மொத்தம் இரண்டு மகள்கள். ஒருவர் பிரபாவதி. மற்றொருவர் அனுராதா. இந்த அனுராதாவின் கணவர்தான் டிடிவி.தினகரன். மற்றொரு மகளான பிரபாவதியின் கணவர்தான் டாக்டர் கே.எஸ்.சிவக்குமார். இந்த சிவக்குமார்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பவர்.
சிவக்குமார் மற்றும் பிரபாவதி தம்பதியினர்
சிவக்குமார் மற்றும் பிரபாவதி தம்பதியினர்
மற்றொரு இயக்குநரின் பெயர் கார்த்திக்கேயன் கலியபெருமாள். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள இளவரசிக்கு இரண்டு மகள்கள். ஒருவர் பெயர் ஷகீலா ஜெயராமன். மற்றொருவர் பெயர் கிருஷ்ணபிரியா ஜெயராமன். ஒருவரின் கணவர் பெயர் ராஜராஜன். மற்றொருவரின் கணவர்தான் கார்த்திகேயன். இது தவிர இளவரசிக்கு விவேக் ஜெயராமன் என்றொரு மகன் உண்டு. அவர்தான் இப்போது போயஸ் தோட்டத்து கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார்.
sasi2
சசிகலா மற்றும் இளவரசி
இளவரசியின் மகன் மற்றும் இரு மகள்கள்
இளவரசியின் மகன் மற்றும் இரு மகள்கள்
இந்த ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பெயரை ஜாஸ் சினிமாஸ் என்று திடீரென்று ஜுலை 2014ல் மாற்றுகிறார்கள். ஏன் திடீரென்று ஒரு நிறுவனத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று வியப்பாக இருக்கிறதா ? சோழியன் குடுமி சும்மா ஆடாதது போலவே, மன்னார்குடி மாபியாவின் மயிர் கூட சும்மா அசையாது.
இந்த ஜாஸ் சினிமாஸ் நிறுவனமும் இவர்கள் தொடங்கிய நிறுவனம் அல்ல.  சினிமா தயாரிப்பாளர் பதம் சந்த் போத்ரா மற்றும் சண்முகம் என்ற இருவர் தொடங்கியதே ஜாஸ் சினிமாஸ்.
சென்னை வேளச்சேரியில் ஃபீனிக்ஸ் மால் என்று ஒரு வணிகவளாகம் தொடங்கப்பட்டு அமோகமாக நடைபெற்று வருவதை அறிவீர்கள் அல்லவா ? இணைப்பு
இந்த வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகம் மும்பையைச் சேர்ந்த பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்தோடு சேர்ந்து தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகத்தில் மொத்தம் 11 தியேட்டர்கள் கட்டப்பட்டன. வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டாலும், இதில் உள்ள தியேட்டர் மட்டும் மார்ச் 2014ல்தான் தொடங்கப்பட்டது. சென்னை நகரத்திலேயே மிகப்பெரிய வணிகவளாகத்தைக் கட்டியவர்களுக்கு தியேட்டரை மட்டும் உடனடியாக கட்டத் தெரியாதா ? ஒரு ஆண்டு தாமதம் ஏன் ? ஏன் தாமதம் என்றால் சென்னை மாநகரக் காவல்துறையும் இதர அமைப்புகளும், இந்த தியேட்டர்களைத் திறக்க அனுமதி தரவில்லை.
நம்மைப் போன்ற சாதாரண நபர்கள் ஒரு வீடோ அல்லது கடையோ கட்டினால், அதற்கு மாநகராட்சியோ, சிஎம்டிஏவோ, காவல்துறையோ அனுமதி தராமல் மாதக்கணக்கில் இழுத்தடிப்பது இயல்பான விஷயமே. ஆனால், பல கோடி ரூபாய் முதலீட்டில் வணிக வளாகம் தொடங்குபவர்கள் எதற்காக இப்படி அல்லாட வேண்டும் ? அதுவும் ஒரு வருடமாக ? ஒரு வருடம் பதினோரு தியேட்டர்களை பூட்டி வைத்திருந்தால் ஏற்படும் நஷ்டம் என்ன சிறு தொகையா ? அதுவும், சத்யம் சினிமாஸ் போன்ற மிகப்பெரிய குழுமத்துக்கு சொந்தமான ஒரு தியேட்டரை திறக்க ஒரு வருடமா ? பிறகு ஏன் இவ்வளவு தாமதம் ?
இந்த நேரத்தில்தான் சென்னை 17, தியாகராய நகர், வெங்கட்ராமன் தெரு, பழைய எண் 19 மற்றும் 20/12 புதிய எண் 38/12 என்ற முகவரியில் காலை 10.30 மணிக்கு நடந்த ஒரு கூட்டத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த கூட்டம் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் அசாதராணமான பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கியது யார் தெரியுமா ? சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியான விவேகானந்தனின் மகள் வி.கே.சசிகலா. அதில் பங்கெடுத்த மற்றொருவர் சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளியும், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகளுமான இளவரசி.
VK Sasikala, Ilavarasi, minutes_Page_1
VK Sasikala, Ilavarasi, minutes_Page_2
VK Sasikala, Ilavarasi, minutes_Page_9
கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது என்பதுதான் சிறப்பான செய்தி. ஹாட் வீல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களாகவும், லீஸ் உரிமையாளர்களாகவும் தியேட்டர்கள், மல்டிப்ளெக்ஸுகள், விளையாட்டு அரங்கங்கள், வீடியோ கேம் நிலையங்கள் ரெக்கார்டிங் நிலையங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது என்று முடிவெடுத்தனர் இரண்டு குற்றவாளிகளும். சத்யம் சினிமாஸ் நிறுவனம், வேளச்சேரி மாலில் உள்ள 11 தியேட்டர்களை வாங்குவதென்று, இந்த மால் கட்டத் தொடங்கப்பட்ட காலத்திலேயே ஒப்பந்தம் போட்டது. அதன்படி, இந்த மால் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே, மன்னார்குடி மாபியா கூட்டம் சத்யம் நிறுவனத்தாரிடம் இந்த 11 தியேட்டர்களையும் தங்கள் வசம் ஒப்படைக்குமாறு மிரட்டுகிறது. ஆனால் அவர்களோ, முடியவே முடியாது என்று உறுதியாக மறுக்கின்றனர். சின்னம்மாவுக்காக கேட்கிறோம் என்று சொன்ன பிறகும் முடியாது என்று சொல்ல எவ்வளவு இறுமாப்பு இருக்கும். வந்ததே கோபம் சின்னம்மாவுக்கு. விஷயத்தை தன் வேலையாள் ஜார்ஜிடம் சொல்லுகிறார். சின்னம்மா காலால் இட்ட பணியை தலையால் முடிப்பதல்லவா ஜார்ஜின் கடமை ???
இதற்கு முன்னதாகவே, சின்னம்மா இந்த தியேட்டரை விலைக்கு வாங்க விருப்பமாக இருக்கிறார் என்பதை அறிந்த ஜார்ஜ், இந்த தியேட்டரை திறக்க தடையில்லா சான்று தராமல் மாதக்கணக்கில் இழுத்தடிக்கிறார். ஆனால் சத்யம் குழுமம் எதற்கும் சளைக்கவில்லை.  சின்னம்மா வேண்டும் என்று சொல்லியும், விற்க மறுப்பதற்கு உனக்கு என்ன துணிச்சல் என்று வெகுண்டெழுந்தார் ஜார்ஜ். உடனடியாக நில அபகரிப்புப் புகார் பாய்கிறது சத்யம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது. சத்யம் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஸ்வரூப் ரெட்டி மற்றும் அவர் உறவினர் சுஜய் ஆனந்த் ரெட்டி ஆகியோர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சுஜய் ஆனந்த் ரெட்டி கைது செய்யப்படுகிறார். ஸ்வரூப் ரெட்டி தலைமைறைவாகிறார். ஆர்ச்சிட் ஃபவுன்டேஷன் என்ற நிறுவனத்தின் இயக்குநரான சவுந்தரபாண்டியன் என்பவரும் கைது செய்யப்படுகிறார். தலைமறைவாக இருந்த ஸ்வரூப் ரெட்டியிடம் விஷயம் தெள்ளத்தெளிவாக விளக்கப்படுகிறது. தியேட்டரை விற்றால் தப்பிப்பாய். இல்லையென்றால் புழல்தான் என்ற விஷயம் விளக்கிச் சொல்லப்படுகிறது. பணிகிறார் ரெட்டி. தியேட்டர் கைமாறுகிறது. இணைப்பு 1   இணைப்பு 2  இணைப்பு 3
ஒரு தொழில் என்று தொடங்கினால் அதை சரியாகச் செய்யவேண்டுமல்லவா ? அதற்காகத்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தின் பெயரை ஜாஸ் சினிமாஸ் என்று சின்னம்மா மாற்றுகிறார்.
இன்னும் ஒரே மாதத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர இருந்த நிலையில், இப்படி ஒரு கூட்டத்தை நடத்தி, அடாவடியாக 11 தியேட்டர்களை அடித்துப்பிடுங்க இந்த பேராசைக்காரிகள் இருவருக்கும் எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும் ? இது யார் தந்த துணிச்சல் ? ஜெயலலிதா இல்லாவிட்டால், இவர்களால் சினிமாத் தொழிலில் பழம் தின்று கொட்டை போட்ட சத்யம் குழுவினரை மிரட்டி 11 தியேட்டர்களை விலைக்கு வாங்க முடியுமா ?
தியேட்டர்கள் கைக்கு வந்த பிறகு, சென்னை சத்யம் தியேட்டர்கள் குழுமத்துக்கு இந்த 11 தியேட்டர்களும் லீசுக்கு விடப்பட்டுள்ளன.
1991ல் 66.5 கோடி ரூபாய்க்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து, அதற்கான வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்து, 30 நாட்களில் அந்த வழக்கில் தீர்ப்பு என்று இருக்கும் நிலையில், ஒரு தொழிலதிபரை மிரட்டி 11 தியேட்டர்களை விலைக்கு வாங்குகிறார்கள் என்றால், இந்த முட்டாள் மக்கள் நம்மை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்ற திமிரும் அகம்பாவமும்தானே… ?
sasi3
இந்த விவகாரங்களையெல்லாம் கையில் எடுத்து போராட்டத்தில் இறங்க வேண்டிய திமுக, இதை விட பகாசுர ஊழலில் ஈடுபட்டு, மகளும் மனைவியும் எப்போது சிறை செல்வார்களோ என்று அதன் தலைவரை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. திமுகவில் அமைச்சர்களாக இருந்த பெரும்பாலான அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
இதுதான் தமிழகத்தின் இன்றைய வேதனையான நிலைமை. இந்தக் கட்டுரை இத்தோடு முற்றுப்பெறவில்லை. ஜெயலலிதா 2001க்குப்பிறகு மன்னார்குடி மாபியா பெயரில் புதிதாக தொடங்கியுள்ள பல்வேறு புதிய நிறுவனங்களின் விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.
மைசூர் சீமாட்டி நிரந்தரமாக இருக்க வேண்டிய இடம் சிறை அல்லவா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக