ஞாயிறு, 25 அக்டோபர், 2015

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

எம்.ஜி.ஆர். 10 ஆண்டு காலம் முதல்அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா 14 ஆண்டு காலம் முதல்–அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் தொலை நோக்கு திட்டத்தோடு மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி உள்ளார்.
தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட 96 ஆயிரம் கோடி வருமானத்தை மீண்டும் மக்கள் நலனுக்காக செலவிடுபவர் முதல்அமைச்சர் ஜெயலலிதா. மொத்த வருமானத்தில் 48 சதவீதத்தை சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஒரு மனிதனுக்கு முக்கிய தேவையாகும். முதல்அமைச்சர் ஜெயலலிதா 1 கோடியே 80 லட்சம் குடும்பத்தினருக்கு ரேஷன் கடை மூலம் மாதம் 20 கிலோ ரேஷன் அரிசியினை வழங்கி வருகிறார்.
ஆண்டுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பசுமை வீடுகள் மற்றும் இலவச வீடுகள் கட்டி தருகிறார். கல்விக்கென 23 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையாகும்.

விஜயகாந்த் அமைச்சர் அந்தஸ்துள்ள எதிர்கட்சி தலைவராக முறையாக செயல்படுவதில்லை. அதனால் தான் மாபா பாண்டியராஜன் அங்கிருந்து வந்து நம்முடன் இணைந்து விட்டார். வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அவர் வெற்றி பெற முடியாது. பாரம்பரியமிக்க காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நடிகை நக்மா சினிமாவிலும் நேரிலும் அழகாக உள்ளார் என்ற கருத்தினை கண்டுபிடிப்பை சொல்லி வருகிறார். ஸ்டாலின் நடக்கிறார், ஓடுகிறார். பா.ம.க. தலைவர் நானும் என் குடும்பத்தாரும் பதவிக்கு வந்தால் நடுத்தெருவில் நிறுத்தி சாட்டையால் அடியுங்கள் என்று கூறினார். அவரது மகன் மத்திய மந்திரியாக இருந்த கதையும் முடிந்து போய் விட்டது. தற்போது முதல்அமைச்சர் கனவில் அலைகிறார். இவர்கள் எல்லாம் மக்களின் ஆதரவை பெற்று தேர்தலில் வெற்றி பெற முடியாது.
ஜெயலலிதா முதல்அமைச்சராக வந்த பின்பு தான் உச்சநீதிமன்றம் மூலம் போராடி காவிரி நதிநீர் ஆணையத்தை பெற்று தந்தார். இதே போன்று முல்லைபெரியாறு பிரச்சினையிலும் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு தான் உச்சநீதி மன்ற ஆணை மூலம் 142 அடி தண்ணீரை தேக்கி வைக்க உத்தரவு பெற்றார்.
முதல்அமைச்சர் ஜெயலலிதா கணக்கில் கெட்டிக்காரார். எப்போதும் நூற்றுக்கு நூறு பெறுபவர். உள்ளாட்சி தேர்தலில் 98 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம். கூட்டுறவு தேர்தலில் 100 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம்.
பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்றோம். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு என்பதற்கு அ.தி.மு.க. அரசின் சாதனைகளே அத்தாட்சியாக விளங்குவதால் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி. அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராதா கிருஷ்ணன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வைகைச்செல்வன், மாபா பாண்டியராஜன், கோபால்சாமி, மாநில மகளிரணி இணை செய லாளர் சக்தி கோதண்டம் ஆகியோர் பேசினர்.
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிந்து முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் செயலாளர் முத்துராஜ், மகளிரணி இணை செயலாளர் சக்தி கோதண்டம், விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வசுப்பிர மணியராஜா, ராஜபாளையம் நகர பேரவை செயலாளர் முருகேசன், விருதுநகர் ஒன்றியக்குழு தலைவர் கலாநிதி, நகர்மன்ற தலைவர் சாந்தி மாரியப்பன், நகர்மன்ற துணை தலைவர் மாரியப்பன், நகர செயலாளர் முகம்மது நெய்னார், பொதுக்குழு உறுப்பினர் அருணா நாக சுப்பிரமணியன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக