வெள்ளி, 30 அக்டோபர், 2015

தோழர் கோவன் நள்ளிரவில் கைது ....டாஸ்மாக்கை எதிர்த்து பாட்டா பாடுகிறாய் ?

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிப்பாடகர் தோழர் கோவன் நேற்று நள்ளிரவு இரண்டே முக்கால் மணிக்கு, திருச்சியில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரைக் கைது செய்வதற்கென்றே சுமார் பத்துபேர் கொண்ட சைபர் கிரைம் போலீசின் தனிப்படை ஒன்று சென்னையிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. may-day-kovilpatti-kalai-2 மே நாள் நிகழ்ச்சியில் தோழர் கோவன் அதே நேரத்தில் தஞ்சையில் தோழர் காளியப்பனின் வீட்டிற்குள் கொல்லைப்புறமாக சுவரேறிக் குதித்து உள்ளே நுழைந்திருக்கிறது சென்னையிலிருந்து சென்ற இன்னொரு தனிப்படை. வீட்டில் அவர் இல்லை. தனியே இருந்த அவரது மனைவியை மிரட்டிப் பார்த்துவிட்டு பயனில்லாததால் காளியப்பனைக் கைது செய்ய தஞ்சையிலேயே முகாமிட்டிருக்கிறது தனிப்படை. தனிப்படை அமைத்து நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் அளவுக்கு இவர்கள் செய்த பயங்கரவாதக் குற்றமென்ன?
kaliyappan கூட்டம் ஒன்றில் உரையாற்றுகிறார், தோழர் காளியப்பன். டாஸ்மாக்கை எதிர்த்து இரண்டு பாடல்கள் பாடியதுதான் கோவன் செய்த குற்றம். அவர் பாடிய மூடு டாஸ்மாக்கை என்ற பாடலும், ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம் என்ற பாடலும் வினவு இணையத்தளம், யு டியூப், பேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற ஊடகங்களின் வழியே பல இலட்சம் மக்களை சென்றடைந்து விட்டது.


தோழர் கோவன் மீது இபிகோ 124ஏ பிரிவின் கீழ் தேசத்துரோக குற்றத்துக்காக, சரியாகச் சொன்னால் சட்டபூர்வமாக அமைந்த அரசை தூக்கியெறிய முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனை பொய் வழக்கென்று கூற முடியாது. டாஸ்மாக் காசில்தான் அரசாங்கம் இயங்குகிறது என்பதால், டாஸ்மாக்கை அகற்றுவதும் அரசை அகற்றுவதும் வேறல்லவே. கோவன் செய்த குற்றத்தை நீங்களும் செய்யுங்கள். பாடியவரைக் கைது செய்து விட்டார்கள். இனி பரப்பியவர்களைக் கைது செய்யட்டும். பாடலைக் கேட்பவர்களையும் கைது செய்யட்டும். நமது பாடல் கோட்டையை எட்டும் கொடநாட்டையும் எட்டும். மூடு டாஸ்மாக்கை என்ற மக்கள் குரல் அவர்களை செல்லுமிடமெல்லாம் விரட்டும். – தற்போதைய செய்தி : தோழரை கோவனை கைது செய்த போலிசு அவரை எங்கே வைத்திருக்கிறது என்பதை ஆரம்பத்தில் இருந்து கூறவில்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போடப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற உத்திரவின் பேரில் போலிஸ், தோழர் கோவனை சென்னை கொண்டு வந்திருப்பதாகவும், அவரை பார்ப்பதற்கு அனுமதிப்பதாகவும் கூறியிருக்கிறது. தற்போது வழக்கறிஞர்களும் தோழர்களும் அவரை சந்திக்க சென்று கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக