ஞாயிறு, 25 அக்டோபர், 2015

தி.மு.க., காங் கூட்டணியாக செயல்பட்டால் சாதகமாக இருக்கும்! முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர்!


தஞ்சாவூர்: ''வரும் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இணைந்து செயல்பட்டால், இரண்டு கட்சிக்கும் சாதகமாக இருக்கும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் கூறினார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சீன பட்டாசுகள் அதிகளவில், இந்தியாவிற்கு வருவதற்கு பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம். தனது உரையில் மேக் இன் இந்தியா என முழக்கமிட்டார். ஆனால், இன்று நடைமுறையிலோ, வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு துர்கா பூஜைக்கு கூட பொம்மைகள் சீனாவில், இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது, அதுபோல தீபாவளி பட்டாசு ரகங்களும் அதிகளவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   இது தான் மேக் இந்தியா முழக்கமா?தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மேற்கொண்டுள்ள நமக்கு நாமே நடைபயணம் மூலம், பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகள.கேட்டறிவது நல்ல விஷயம்தான் பாராட்டுகிறேன், ம்ம்ம்ம் ...காங்கிரஸ் தலைதூக்க ராகுல் சம்மதிக்க மாட்டாரே?  இன்னா பண்றது தலைவா?
கடந்த தேர்தலில் தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டனி அமையாதது தான் இருவருக்குமான தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தன. எனவே, வரும், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மீண்டும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமைந்தால், அது இருவருக்குமே சாதகமாக இருக்கும். இருப்பினும், கூட்டணி குறித்து கட்சியின் மேலிடமே முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக