சனி, 24 அக்டோபர், 2015

குறும்படங்கள் வியாபார வெற்றியை பெற முடியும்....அதற்கு....



thamizhstudio.com :குறும்படங்களை சந்தைப்படுத்துவதில் பெரிய சிக்கல்கள் இருந்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் குறும்படங்களை சந்தைப்படுத்துவதற்காக பலர் முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதற்கு குறும்பட இயக்குனர்கள் சரியான ஒத்துழைப்பு தருவதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. காரணம் அவர்களுக்கு குறும்படம் என்பது திரைப்படங்களில் நுழைவதற்கு ஒரு நுழைவு சீட்டு. எனவே அதை வைத்து பொருள் ஈட்டுவதற்கு அவர்கள் பெரிதும் சிரமப்படுவதில்லை. அதன் மூலம் தங்களுக்கு ஏதாவது திரைப்பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றே நினைக்கிறார்கள்.
தற்போது BOLLYVERSE LLC என்கிற நிறுவனம் குறும்படங்களை சந்தைப் படுத்தும் புது முயற்சி ஒன்றை தொடங்கி இருக்கிறது.

சவுகார் பேட்டை...பயமுறுத்த வருகிறார் ராய் லக்ஷ்மி ....

சவுகார்பேட்டை’ படம் முழுக்க பேய்களின் அராஜகமும், ஆர்ப்பாட்டமும் நிறைந்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(20.10.15) நடைபெற்றது. நடிகர் ஸ்ரீகாந்த், சுமன், வடிவுக்கரசி, ரேகா, இயக்குனர் வடிவுடையான், இசையமைப்பாளர் ஜான் பீட்டர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீகாந்த். பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்தது. சவுக்கார் பேட்டை திரைப்படத்தில் அந்த ஆசை நிறைவேறியிருப்பதுடன், போனஸாக டபுள் ரோலில் நடித்திருக்கிறேன். ராய் லட்சுமி நிறைய பேய் படங்களில் நடித்தவர். என்னை விட அனுபவசாலி. அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவருக்கு அவரே மேக்-அப் போட்டுக்கொள்வதைப் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். சமயத்தில் ராய் லட்சுமி எனக்கே மேக்-அப் போட்டுவிடுவார்.

கோவில் திருவிழாக்களில் தமிழினியின் அம்மா கடலை விற்று...வீடு தகர கொட்டகை....

Unbenanntஇது கிளிநொச்சியில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிவபுரம் கிராமத்தில் உள்ள சிவகாமியின் வீடு.
சிவசுப்பிரமணியம் சிவகாமி இவர் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினி ஆவார். மீள்குடியேற்றத்தின் போது அரசசார்பற்ற நிறுவனங்களால் ஒரு வருட காலத்திற்கு என அமைத்துக்கொடுக்கப்பட்ட தற்காலிக கொட்டில்கள் இவை. 2013 ஆம் ஆண்டு யூன் 26 ஆம் திகதி பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் வைத்து தாயாராகிய சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் ஓப்படைக்கப்பட்டார். அன்று முதல் இறக்கும் வரை கடந்த மூன்று வருடங்களாக தமிழினி இந்த கொட்டிலில்தான் வாழ்ந்திருக்கின்றார்… 2009 இற்கு முன் ஈழத்துப் பெண்களின் தலைமை பாத்திரமாக இருந்தவர் தமிழினி.

France பேருந்து விபத்து..42 பேர் பலி!


Crash_aerial_1_3480982b  பிரான்ஸில் கோரவிபத்து: இது வரை  42 பேர் பலி - (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Crash aerial 1 3480982b
தென்மேற்கு பிரான்ஸில் இன்று (23) இடம்பெற்ற கோர விபத்தில் இது வரை 42 பேர் பலியாகியுள்ளனர்.
ஓய்வூதியம் பெறும் வயதானோர் பயணித்த பஸ் ஒன்றுடன் லொறி ஒன்று மோதியதை அடுத்து இரண்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதன்போது இரு வாகனங்களும் தீயினால் கருகியதாக, அவசர பணியாளர்கள் மற்றும் அப்பிரதேசத்தில் இருந்தோர் தெரிவித்துள்ளனர்.
crash_Emergency-se_3480779b  பிரான்ஸில் கோரவிபத்து: இது வரை  42 பேர் பலி - (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) crash Emergency se 3480779bஇதன்போது அதில் பயணித்த 8 பேர் தப்பியுள்ளதாகவும், அதில் 4 பேரின் நிலை மிகவும் மோசமாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடந்த 30 ஆண்டுகளில் இடம்பெற்ற கோர விபத்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1982 இல் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று காருடன் மோதியதில் 44 சிறுவர்கள் உட்பட 53 பேர் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

மாலைதீவு துணை அதிபர் கைது.....தேசதுரோக குற்றச்சாட்டு...

மாலத்தீவின் அதிபரைக் கொல்வதற்கான சதித் திட்டம் தொடர்பாக துணை அதிபர் அஹ்மத் அதீப் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டிருக்கும் மாலத் தீவின் துணை அதிபர் அஹ்மது அதீப். தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்படுள்ள அஹ்மத் அதீப் மீது துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் நஸீர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
செப்டம்பர் 28ஆம் தேதி, விமான நிலையத்திலிருந்து அதிபர் அப்துல்லா யமீன் வீடு திரும்புவதற்காக தனது படகில் வந்துகொண்டிருந்தது குண்டு ஒன்று வெடித்தது.
இதில் அதிபர் காயமின்றித் தப்பினார். இதில் அவரது மனைவி, உதவியாளர், மெய்க்காப்பாளர் ஆகியோர் காயமடைந்தனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை

தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதனடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு: அரசு பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று, விடுப்பு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, வெளிநாடு செல்ல முடியும்.

நக்மா:ஜெயலலிதா ஒரு பக்கம் சாரிகள் கொடுத்துகொண்டே பெண்களை விதவைகளாக்குகிறார்



குஷ்புவுக்கு ஒரு சுயமரியாதை சரித்திரம் இருக்கிறது.ஆனால் நக்மாவுக்கு என்ன ஒரு அரசியல் சரித்திரம் இருக்க போகிறது? டபுள் ஸ்ரீயின் ஆஷ்ராமவாசம் கொஞ்ச நாள் அப்புறம் இயேசுவின் பிரசாரம் கொஞ்ச நாள், பாவம் எதோ மனக்குழப்பம் ? இனி நக்மாவும் குஷ்புவும் விஜயதரணியும் இளங்கோவனும் திருநாவுக்கரசரும்  ஒன்று சேர்ந்துவிட்டார்கள் இனி காங்கிரஸ் உருப்படும். ஆனால் இந்த நக்மா அதிமுகவில் சேர்ந்துவிடாமல் இருக்கவேண்டுமே?

வெள்ளி, 23 அக்டோபர், 2015

டாஸ்மாக்குக்கு எதிராக சிறைசென்ற பச்சையப்பன் கல்லுரி மாணவர்களின்......

மூடு டாஸ்மாக் போராட்டத்தில் பங்கேற்று, 38 நாட்கள் புழல் சிறையிலடைக்கப்பட்டிருந்து நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்களுடன்...
டாஸ்மாக் போராட்டம் - சிறை சென்ற மாணவர்கள்டாஸ்மாக்கை மூடு” என்ற முழக்கத்துடன் கடந்த ஆகஸ்ட் 3 அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி நடத்திய போராட்டத்தில் அக்கல்லூரிக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது. அப்போராட்டத்தில் பங்கேற்று, சாராய பாட்டிலை உடைத்ததற்காக 38 நாட்கள் புழல் சிறையிலடைக்கப்பட்டிருந்த 13 மாணவர்கள் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

மனிதக்கறி தின்பது தேசப்பற்று மாட்டுக்கறி உண்பது தேச துரோகமா?

உலக மதங்களிலேயே, மாடுகளை யாகங்களில் எப்படிப் பலியிடுவது? அதை எப்படித் தனித் தனியாகக் கறியாகப் பிரிப்பது, பிரித்த கறிகளை யார் யாருக்கு எந்த எந்தப் பகுதிகளைப் பங்குப்போட்டுத் தருவது’ – ‘அதை எப்படி வேக வைப்பது?’ என்று மாட்டுக்கறிக்கு ‘ரெசிபி’ போட்ட ஒரே மதம் வேதமதம் தான்.
தாத்ரியில் அக்லக் என்ன செய்தார், பசுவைக் கொன்றார். அவர் செய்தது பாவச் செயல். பசுக்களை வதம் செய்வது இந்துக்களின் கெளரவத்தைச் சீர்குலைக்கும் செயல்.’ – என்கிறது ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான பான்ச்ஜன்யா.
அக்லக் பசுவை அல்ல, எருமையைக் கூடக் கொல்லவில்லை. அவரிடம் எந்த மாட்டிறைச்சியும் இல்லை. வெறும் வதந்தியினாலேயே படுகொலை செய்யப்பட்டார் என்ற உண்மை விசாரணையில் வந்திருக்கிறது.
இது ஊரறிந்த உண்மை மட்டுமல்ல, உலகறிந்த உண்மை. ஆனாலும் ஆர்.எஸ்.எஸ்க்கு மட்டுமல்ல, இந்து அமைப்புகளுக்கே எப்போதும் உண்மைகள் சுத்தமாகப் பிடிப்பதில்லை. காரணம், பாசிஸ்டுகளின் அடிப்படைத் தத்துவமே பொய். ஹிட்லரிலிருந்து ஆர்.எஸ்.எஸ் வரை அவர்களின் பொது மொழியே பொய்தான்.

35 சாஹித்திய விருதுகளை திரும்ப தந்துள்ளனர்....டெல்லியில் மௌன ஊர்வலம்..எழுத்தாளர்கள் மீது தாக்குதல்களைக் கண்டித்து...


கருத்துரிமை மீதான தாக்குதல்களுக்கு சாஹித்திய அகாடெமி கண்டனம்
இந்தியாவில் சகிப்புத்தன்மையற்ற சூழல் அதிகரித்து வருவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியத் தலைநகர் டில்லியில் சுமார் 100 எழுத்தாளர்கள் மௌன ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.இந்திய எழுத்தாளர்கள் மீது தாக்குதல்களைக் கண்டித்து மௌன ஊர்வலம் பின்னர் அந்த எழுத்தாளர்கள் இந்தியாவின் முன்னணி இலக்கிய அமைப்பான, சாஹித்திய அக்காடெமிக்கு , அளித்த மனு ஒன்றில், கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்கக் கோரினர்.
கடந்த சில வாரங்களில் , 35 எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட கௌரவம் மிக்க விருதான, சாஹித்திய விருதுகளை, எழுத்தாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்துத் திரும்பத் தந்துள்ளனர்.
பிரதமர் மோடி இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக வெளிப்படையான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரினர்.

கருப்பு பண பதுக்கலைவிட பருப்பு பதுக்கலே மக்களை அதிகம் பாதித்துள்ளது...ஒரு கந்துவட்டிகாரனின் ஸ்டேட்மென்ட்..

 தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பான்மையான இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருளான, புரதச்சத்து நிறைந்த பருப்பானது உணவுப்பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஏழை, எளிய மக்களின் அன்றாட உணவுப்பொருளான பருப்பின் விலை ரூ.50-லிருந்து ரூ.200-யாக உயர்ந்து நிற்கிறது.வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கொண்டுவந்து,இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வதாகக் கூறும் மத்திய அரசு முதலில் இந்தியாவில் பருப்பு பதுக்கலை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம்,திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் சுவையான பருப்பு உற்பத்திக்கு புகழ் பெற்றவை,பெயர் பெற்றவை.ஆனால் முறையான நீர்மேலாண்மை செய்யப்படாத காரணத்தால் வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் இம்மாவட்டங்களில் பருப்பு விளைச்சல் வெகுவாக குறைந்துவிட்டதும் ஒரு காரணம்.

ஓ காதல் கண்மணி - அடிமை விலங்கை ஆராதிக்கும் வியாபாரம்

thamizhstudio.com  தன்னுடைய இத்தனை ஆண்டுகால திரைப்பட அனுபவத்தில் மணிரத்னம் ஏதேனும் ஒரு திரைப்படத்தை நேர்மையான கருத்தியலோடு எடுத்திருக்கிறாரா என்றால் இல்லை என்பதுதான் கசப்பான உண்மையாக இருக்கிறது. ஒரு நேர்காணலில் தான் எதற்கு தீர்வு சொல்லமுடியாது என்று சொல்லியிருந்தார். ஆனால் மணியின் ஒவ்வொரு படத்திலும் எல்லாவற்றிற்கும் அவரால் ஒரு தீர்வை முன்வைக்க முடிகிறது. ஓ காதல் கண்மணி திரைப்படத்திலும், திருமண பந்தம்தான் சிறந்தது என்கிற கருத்தை மிக தெளிவாகவே தீர்வாக முன்வைக்கிறார். திருமணம் என்பது என்ன? இரண்டு உடல்கள் சேர்ந்துகொள்ள நான்கு பேர் முன்னிலையில் நடக்கும் ஒரு சம்பிரதாயம். ஆனால் இந்த திருமணம் என்கிற சம்பிரதாயத்தின் பின்னணியில் மோசமான அரசியல், பெண்ணின் மீது கட்டவிழ்த்துப்படும் வன்முறை, அடிமைத்தனம் போன்ற விரும்பத்தாகத நிகழ்வுகள்தான் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

வியாழன், 22 அக்டோபர், 2015

மதுவால் தமிழகம் சீரழிகிறது: நக்மாவின் கவலை.. பாவம் விஜயதரணி....

தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் எஸ்.விஜயதாரணி, காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் நக்மா | படம்: க.ஸ்ரீபரத் ஒருபக்கம் இலவசங்களை கொடுக்கும் தமிழக அரசு, மறுபக்கம் மது விற்பனை செய்கிறது. மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது" என்று மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா கவலை தெரிவித்து குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நக்மா இன்று வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, "முதல்வர் ஜெயலலிதா மீது மரியாதை வைத்துள்ளேன். ஆனால், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, குடிநீர், மின் பற்றாக்குறை என தமிழகம் மோசமான நிலையில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.  அடடே அப்படிங்களா வேற என்னன்னா இல்லை என்கிறதை  விலாவாரியா சொல்லுங்க மேடம் ...

Oslo: ஈழத்தமிழ் பெண்-நார்வே தலைநகர் துணைமேயராக தேர்வு.


wpid-oslo_deputy_mayor_karthigajini.jpg
3வயதில் அகதியாக இலங்கையில் இருந்து தனது பெற்றோருடன் நார்வே சென்ற ஈழ தமிழ்பெண் ஒருவர், அந்த நாட்டின் தலைநகர் ஆஸ்லேவின் துணைமேயராக தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
வட ஐரோப்பா நாடுகளில் ஒன்றான நார்வேயில் கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தொழிலாளர் கட்சியின் ஒஸ்லோ மாநகர கிளை துணைத் தலைவர் மற்றும் இளைஞர் பிரிவு தலைவராக இருக்கும் கம்சாஜினி குணரத்தினம் அந்த நாட்டு தலைநகர் ஆஸ்லேவில் துணை மேயர் பதவிக்கு  தனது தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார்.
நார்வே நாட்டின் பல்வேறு சமூக மற்றும் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர்,  அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணமாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு நோர்வேயில் உள்ள உடோயா என்ற தீவுப்பகுதியில் நடைபெற்ற  அந்நாட்டின் தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில்  கம்சாஜினி கலந்துகொள்ள சென்றார். எதிர்பராதவிதமாக அங்கு தீவிரவாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே  இடியேயான பிரச்னையில் மாநாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 72 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இவர் கடலில் குதித்து நீந்தியவாறு கடற்கரையை அடைந்த பின்னர் மருத்துவமனையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார் ஈழ தமிழ் பெண்  கம்சாஜினி குணரத்னம்,

அமராவதி! ஆந்திராவின் புதிய தலைநகரம் அடிக்கல் நாட்டு விழா!

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திற்கான புதிய தலைநகருக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆந்திராவில், குண்டூர் மாவாட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள உத்தண்டராயனிபாளையம் என்ற இடத்தில் தான் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அமரவாதி என்ற பெயரில், 16.9 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற விதத்தில் இந்தத் தலைநகரம் உருவாக்கப்படவுள்ளது.
மின்சாரம், நீர் போன்றவற்றிக்கு தட்டுப்பாடு இல்லாத, மாசு ஏற்படாத தூய்மையான நகராகவும் இந்த பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் மிகக் குறைவான நகரங்களே உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

பா.ஜ., ஆட்சியில் தலித் மற்றும் ஏழைகளுக்கு பாதுகாப்பில்லை!

பரீதாபாத்:ஹரியானாவில், தலித் குழந்தைகள் இருவர் எரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், வன்முறையை கட்டுப்படுத்த தவறிய, பா.ஜ., அரசை கண்டித்தார்.பரீதாபாத் அருகே உள்ள கிராமத்தில், ஜாதி தகராறு காரணமாக, தலித் ஒருவரின் வீட்டுக்கு சிலர் தீ வைத்தனர்.இதில் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் உடல் கருகி இறந்துவிட்டனர். குழந்தைகளின் தாயும், தந்தையும் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக, 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பரீதாபாத்துக்கு நேற்று காலை சென்ற, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், இறந்த குழந்தைகளின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.பின், வன்முறையை கட்டுப்படுத்த தவறிய, மனோகர் லால் கட்டார் அரசை கண்டித்தார்.  முதலில் மாட்டு இறைச்சி பிரச்னை பண்ணி ஒரு முஸ்லிமை கொன்றனர் . அதை மறைக்க ரெண்டு தலித் குழந்தைகளை எரித்தனர் . நேற்று அதை மறைக்க சீக்கியர்களின் புனித நூலை கிழித்தனர் .ஒன்றை விட மற்றது பெருசா இருக்கும் போது சின்ன விஷயம் மறந்து போகும் .விரலில் அடிபட்டு கத்தி கொண்டு ஆசுபத்திரி போனால் அங்கே கை உடைந்து ஒருவர் அமர்ந்து இருப்பார்.கத்தி கொண்டுவந்தவர் அமைதியாகி விடுவார் . இதனால் தான் இந்தியாவின் புகழ் உயர்ந்து வருகிறது

டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை கொண்டு வந்தது ராஜிவ்: பிட்ரோடா

மும்பை:''டிஜிட்டல் இந்தியா எனப்படும், அனைத்து துறைகளிலும் தகவல் தொழில்நுட்ப திட்டத்தை தொடங்கியது, முன்னாள் பிரதமர் ராஜிவ்; இப்போதைய பிரதமர் நரேந்திர மோடியல்ல,'' என, இந்திய தகவல் தொழில்நுட்ப உலகின் தந்தை என பாராட்டப்படும், சாம் பிட்ரோடா கூறியுள்ளார்.
பிரதமராக ராஜிவ் இருந்த போது, இந்திய தொலை தொடர்பு கமிஷனின் தலைவராக, சாம் பிட்ரோடா நியமிக்கப்பட்டார். இவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான், தொலை தொடர்புத்துறையில், இந்தியா மாபெரும் வளர்ச்சி பெற முடிந்தது.
பெரிய கனவு; இந்தியாவை இணைப்பதற்கான பயணம்' என்ற தலைப்பில், தன் சுயசரிதையை பிட்ரோடா எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை, மும்பையில், 'ரிலையன்ஸ்' நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, வெளியிட்டார். அப்போது, பிட்ரோடா பேசியதாவது: இப்போதைய அரசால் பின்பற்றப்படும், 'டிஜிட்டல் இந்தியா' புதிய திட்டம் இல்லை. இது, இப்போதைய பிரதமர் மோடியின் திட்டமும் இல்லை. இந்த திட்டத்தை தொடங்கியது ராஜிவ், 25 ஆண்டுக்கு முன், இந்த திட்டம் தொடங்கப்பட்டது  ஐ டி துறை முன்னேற ராஜீவ் மட்டும் காரணமில்லை. 1977 இல் தொழில்துறை மந்திரியாக வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஏகபோகமாக ( காயலாங்கடைக்குப் போகவேண்டிய ) பழைய கம்பியூட்டர்களை மட்டும் இறக்குமதி செய்து விற்ற ஐ பி எம் மை துரத்தி வெளியேற்றினார்.அதனால் நம்பிக்கையடைந்த பல இந்திய தொழில் முனைவோர்கள் சிறு நடுத்தர கம்பியூட்டர் தொழிற்சாலைகளை நிறுவினர் ( அப்போது HCL ஷிவ் நாடார் போன்றவர்கள் வெளிநாடுகளிலும் எலெக்ட்ரானிக் வர்த்தகத்தைத் துவக்கினர்

வழக்கறிஞர்களுக்கு எதிரான அடக்குமுறை...நீதித்துறையை எதிர்த்து கேள்வி கேட்காதே...நீதியா? சதியா?இல்லை ஜாதியா?

நீதிபதி கிருபாகரன்மிழக வழக்கறிஞர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் ஒரு போர் தொடுத்திருக்கிறது. தங்களது ஊழல் முறைகேடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்கறிஞர்களைக் களையெடுப்பதன் வாயிலாக கேள்விக்கிடமற்ற சர்வாதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதே நீதிபதிகளின் நோக்கம்.
நீதித்துறைக்கு எதிராகப் பேசுவதற்கு ஓட்டுக்கட்சிகள் தயங்குகின்றன. பார்ப்பன ஊடகங்களோ பக்க வாத்தியம் வாசிக்கின்றன. வழக்கறிஞர்களுக்கு எதிராக சதித்தனமாக எப்படிக் காய் நகர்த்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள கடந்த சில நாட்களில் என்ன நடந்திருக்கிறது என்பதைப் அறிந்து கொள்வது அவசியம். எனவே, நாள் வாரியாக அந்த விவரங்களைக் கீழே தொகுத்துத் தருகிறோம். ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கி அளித்த தீர்ப்பில் போலீசின் வசூல் வேட்டைக்குச் சாதகமாக உத்தரவுகளை அளித்த நீதிபதி கிருபாகரன்
ஜூலை-1 ஆம் தேதி முதல் பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்றும், தவறுவோரின் உரிமம் மட்டுமின்றி வாகனத்தையும் பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இது சட்டவிரோதமான தீர்ப்பு என்று விமரிசித்து போராடிய மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், செயலர் மீது நீதிமன்றத்தை அவமதித்ததாக உயர்நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியது. இதற்கெதிராக மதுரை வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்

மும்பை: R.S.S. சீருடையில்மத்திய மந்திரி நிதின் கட்காரி, முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அரசு டிவியில் நேரலை

1925ஆம் ஆண்டு விஜய தசமி அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதனையொட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் தசரா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன நாள் விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசுகையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்தியில் உள்ள பாஜக அரசின் செயல்பாடுகள் பாராட்டக் கூடிய வகையில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை மாறி தற்போது புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்றார். மேலும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் தத்துவம். ராம ராஜ்ஜியம் என்பதே தங்களின் விருப்பம் என்றார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா மாநில முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். சீருடையில் பங்கேற்றனர்.

புதன், 21 அக்டோபர், 2015

உங்க முகத்திலும் கரியை பூசுவோம்..டி.வி. லைவ்-ல் ஞாநியை மிரட்டிய சிவசேனா நிர்வாகி..

இந்நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிவசேனாவின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், இந்துக்களுக்கு எதிராக யார் பேசினாலும் கரியை பூசுவோம்... இதே அரங்கத்தில் உள்ள உங்கள் மீதும் கரியை பூசுவோம்" என பத்திரிகையாளர் ஞாநியை நோக்கி எச்சரிக்கை விடுத்தார். இது அரங்கத்தில் இருந்தவர்களை மட்டுமின்றி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் கடும் அதிர்ச்சியடைய வைத்தது. மும்பையிலும் டெல்லியிலும் வலதுசாரி இந்துத்துவா அமைப்புகள் சுதீந்தரா குல்கர்னி, காஷ்மீர் எம்.எல்.ஏ. ரஷீத் மீது கருப்பு மை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்திலும் விரைவில் நடக்கப் போகிறது என்பதையே இந்த மிரட்டல் வெளிப்படுத்தி இருக்கிறது.  இது குறித்து பத்திரிகையாளர் ஞாநி தமது ஃபேஸ்புக் பக்கத்தில், "சிவசேனை பிஜேபி இதர இந்துத்துவ இயக்கப் பேச்சாளர்களுடன் டி.வி.விவாத அரங்குகளில் பங்கேற்க இனி செல்வதாயிருந்தால்,அழைக்கும் டிவி நிலையங்கள் போதுமான பாதுகாப்பு அளித்தால்தான் வர இயலும் என்று இதன்படி தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பதிவு செய்துள்ளார்.நிச்சயமாக இந்துத்வா பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் கலவரம் உண்டாக்க போகிறார்களோ என்ற பயம் உண்டாகிறது .

கனடா தேர்தலில் ஆனந்தசங்கரியின் பிரமாண்டமான வெற்றி....சொல்வதென்ன?

நான் வாழும் ரூஜ்பார்க் ‌தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட நியமனம் கோரிய Gaரி ஆனந்தசங்கரி லிபரல் உட்கட்சித் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார். (இனி 2015இல் வரப்போகும் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்.) அவரது நியமனத் தேர்தல் நடந்த மண்டபத்திற்குப் போயிருந்தேன். தமிழ்கனடாவின் பெரும்புள்ளிகள் மட்டுமல்ல லிபரல் தமிழ்ப் பொது மக்களும் பெருமளவில் வந்திருந்தார்கள் ஏற்கனவே சூடு பிடித்திருந்த இந்த உட்கட்சித்தேர்தல் கடைசிவரை விறுவிறுப்பாகவே போய் முடிந்தது. Gaரியின் வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் வந்திருந்தவர்களிடையே ஏற்பட்ட ஆரவாரத்தை ரசிக்க முடிந்தது. புதிய அரசியல் உலகம் தெரிகிறது… Gaரியைத் தோற்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உலகத்தமிழர் இயக்கத்தினர் வேலை செய்தபடியால்தான் Gaரிக்கு இன்னும் பலமாக ஆதரவு அலை வீசியிருந்திருக்க வேண்டும். உலகத்தமிழர் இயக்கத்தினர் Gaரியை எதிர்த்திருக்காவிட்டால் இந்த அளவிற்கு மக்கள் ஆதரவு Gaரிக்குக் கிட்டியிருக்காது.
லிபரல்கள் ஊடாக ஒரு புதிய இளம் தமிழ்த் தலைமை கனடாவில் தமிழர்களுக்கு உருவாகியிருப்பதுபோன்ற தோற்றப்பாடு அனைவர் மனதிலும் இப்போது வேரூன்றி விட்டிக்கிறது. இது விடுதலைப் புலிகளும் உலகத்தமிழர் இயக்கமும் சேர்ந்து ஏற்கனவே உருவாக்கி வைத்திருநத அரசியல் வெற்றிடத்தால் ஏற்பட்டதேயன்றி வேறில்லை.. இனியாவது படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
Gaரி வென்றதாக அறிவிக்கப்பட்டாலும் எனக்கென்னவோ ”Gaரியின் தந்தை வீ. ஆனந்த சங்கரிதான் வென்றிருக்கிறார்” என்றே தோன்றுகிறது. காரணம்??? இத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அப்பா ஆனந்தசங்கரியைத் “துரோகி” “துரோகி” என்று சொல்லித்தான் மகன் ஆனந்தசங்கரியை டிஸ்க்கிரடிட் பண்ணியது உலகத்தமிழர் இயக்கம்.

ஜெயலலிதா... கொடநாட்டில் 900 ஏக்கரில்...சிறுதாவூரில் 25.40 ஏக்கரில், பையனூரில் 3 ஏக்கரில், கன்னியாக்குமரியில் 1190 ஏக்கர்...திருவைகுண்டத்தில் 1167 ஏக்கர்.....இன்னும் பல பல...

DSC_4486savukkuonline.com :   Flashback : ஜெயலலிதா வேனில் ஏறியதும் சசிகலாவிடம், (MGR)“ஜனங்களை எப்படி கெடுத்து வச்சிருக்கான் பாரு” என்று கூறியதை நேரில்...
தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ”
ஜெயலலிதா அதிமுகவின் 44வது தொடக்க நாளையொட்டி, ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.    ஜெயலலிதா என்றாலே ஆணவத்தின் மறுபிறப்பு என்பது அனைவரும் அறிந்ததே.  அப்படிப்பட்ட ஜெயலலிதா “உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன்” என்று உருக்கமாக பேசுவது, தேர்தலையொட்டிய அவரது நடிப்பின் தொடர்ச்சியேயன்றி வேறல்ல.

8 மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்த Rio ஒலிம்பிக் டிக்கெட்டுகள். அப்புறம். ..ப்ளாக் டிக்கெட்டு....

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் விற்பனை தொடங்கிய 8 மணி நேரத்திற்குள் 2 லட்சத்து 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகளுக்கான டிக்கெட் வாங்குவதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதால் முதல் ஒரு மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகின. மூன்றாம் கட்ட டிக்கெட் விற்பனையில், முதலில் வருவோருக்கு முதல் முன்னுரிமை என்ற அடிப்படையில் உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 20 லட்சம் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. nakkheeran.com

டப்பிங் தலைவர் ராதாரவி இனி விஷால் அணிக்கு குடைச்சல் கொடுப்பார்...பிரச்சனை இன்னும் ஓயவில்லை.

அதிகபட்சம் 3000 ஓட்டுகள்தான் என்றாலும் ஒரு மாதத்திற்கும் மேலான பிரச்சாரம், அதிரடி குற்றச்சாட்டுகள், மேடை சீறல்கள், பணபலம், புஜபலம், மொத்த தமிழகத்தையும் கட்டி இழுத்துப் போட்ட மீடியாக்களின் லைவ் கவரேஜ் என அரசியல் தேர்தல் களத்துக்கு கொஞ்சமும் குறையாமல், சில நேரங்களில் அரசியலையும் மிஞ்சும் வகையில் நடந்து முடிந்துள்ளது நடிகர் சங்கத் தேர்தல்>தொடரும் சிக்கல்கள்>டைரக்டர்கள் சங்கத் தலைவர் விக்ரமனும், செயலாளர் ஆர்.கே.செல்வமணியும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவிடம் பேசினார்கள்.""சரத் டீமும், விஷால் டீமும் பேசுற பேச்சுல பப்ளிக் மத்தியில சினிமா பில்டப் பத்தியே அவர்ஷன் வந்துருச்சு. ரெண்டு டீமையும் சமாதானப்படுத்த நாமெல்லாம் சேர்ந்து நடவடிக்கை எடுக்கணும்'' என கேட்டுக் கொண்டனர்.

2 தலித் குழந்தைகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை ! உபியில் உயர்ஜாதினரின் கொடுமை..

அரியானா மாநிலம், பரிதாபாத் மாவட்டம், பல்லாப்கரையை அடுத்த சன்பெட் கிராமத்தில் ஜிதேந்தர் என்பவரின் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் அவரது வைபவ், திவ்யா என்ற இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். அவரும், அவரது மனைவி ரேகாவும் படுகாயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஜிதேந்தர் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க ஏற்கனவே போலீசாருக்கு உத்தரவிட்டப்பட்டிருந்ததும், இந்த நிலையில் உயர் வகுப்பினர் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜிதேந்தர் வீட்டிற்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறிய 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தீ வைப்பு சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி பாதிக்கப்பட்ட ஜிதேந்தரின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்  nakkheeran,com

வாடகைத் தாய்கள்! வெறும் 10 , 15 ஆயிரங்களை கொடுத்து ஏமாற்றுகிறார்கள்!

வாடகை  தாய் முறையை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில்தான் வாடகை தாய் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், வாடகை தாய் முறையை கடுமையாக விமர்சனம் செய்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான சட்ட திருத்தங்களை உருவாக்கவும் அறிவுறுத்தியது. வாடகை தாய் முறையை இன்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கும் இதே உச்ச நீதிமன்றம் 2008-ல், வாடகை தாய் முறையில் நடக்கும் வணிகத்தில் பிரச்னை இல்லை என்று சொல்லியது. மேலும் இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், ‘’ குறைந்தது 3 முறை ஒரு பெண் வாடகை தாயாக இருக்க முடியும். கர்ப்ப காலத்தில் வரும் எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மாதம் 3 ஆயிரம் கொடுக்கவேண்டும். குழந்தை பிறந்த பின் குறைந்தபட்சம் ரெண்டரை லட்சம் வாடகை தாய்க்கு கொடுக்கவேண்டும்  என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்திருந்தது.

"தீபம்" ஸ்ரீனிவாச ராகவன் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை! பொறுப்பாசிரியர் மனைவியுடன்..

சென்னை: கல்கி குழுமத்தின் தீபம் இதழ் பொறுப்பாசிரியர் ஸ்ரீனிவாச ராகவன் மனைவியுடன் இன்று சென்னையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். கல்கி குழுமத்தில் இருந்து வெளிவரும் இதழ்களில் தீபமும் ஒன்று. இந்த இதழின் பொறுப்பாசிரியராக இருந்தவர் ஸ்ரீனிவாச ராகவன்.  சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இன்று மாலை ஸ்ரீனிவாச ராகவனும் அவரது மனைவி ஜானகியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களுக்கு பள்ளிக்கூடம் செல்லும் சிறுவயது மகன் இருக்கிறான். இந்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Read more at: //tamil.oneindia.com/

தத்து : நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சி மத்திய அரசுக்கு உள்ளது...ஜெயா ஜாமீன் புகழ் சாத்தானின்......

மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பு குறித்து மத்திய அரசு தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தி உள்ளது. முக்கியமாக மத்திய சட்டத்துறை மந்திரி சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், அருண் ஜெட்லி ஆகியோர் உச்ச நீதிமனற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு பற்றி முதல் முறையாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து. ”நீதிமன்ற தீர்ப்பை ஏற்கொள்ளும் முதிர்ச்சி மத்திய அரசுக்கு உள்ளது. தீர்ப்பு பற்றி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். மேலும் அதை வெளிப்படுத்து உரிமை அவர்களுக்கு உள்ளது. அதேசமயம் மத்திய அரசு இந்த தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார் மாலைமலர்.com

செவ்வாய், 20 அக்டோபர், 2015

திருச்சி : லாரி மீது பஸ் மோதியதில் 18 பேர் பலி

திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது அரசுப்பேருந்து மோதியதில் 18 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த பலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசுப்பேருந்து, இருங்களூரில், tn18k6939 என்ற எண் கொண்ட இரும்புத்தகடு ஏற்றியபடி நின்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் டிரைவர் பக்கம் உட்கார்ந்த பலர் பரிதாபமாக பலியானார்கள். 18 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வருகிறது. விபத்து நடந்ததுமே, பேருந்து - லாரி டிரைவர்கள் தப்பியோடிவிட்டனர் nakkheera,com

பிரியங்கா காந்தியை அரசியல் வாரிசாக்க விரும்பிய இந்திரா காந்தி- மூத்த காங். தலைவர் பொடேதார்

எம்.எல். பொடேதார் "Chinar Leaves" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம் வரும் 30-ந் தேதியன்று டெல்லியில் வெளியிடப்பட உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் விவரம்: 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்தியில் இந்திரா காந்தி காஷ்மீரத்துக்கு சென்றிருந்தார். இந்து கோவில் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது தனக்கு மரணம் நெருங்குவதை குறிப்பிட்டு அவர் பேசினார். அப்போது பிரியங்கா காந்தியை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும்.. அவர் நீண்டகாலம் சக்திவாய்ந்த தலைவராக வலம் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் இந்திரா. Indira preferred Priyanka as her political successor, says ML Fotedar சோனியாவை அரசியல் வாரிசாக்க இந்திரா விரும்பவில்லை. இது தொடர்பாக 1991ஆம் ஆண்டு ராஜிவ் படுகொலைக்குப் பின்னர் சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் இதை சோனியா ஏற்கவில்லை. 1990ஆம் ஆண்டு வி.பி.சிங் அரசு கவிழ்ந்த போது ராஜிவ் காந்தி பிரதமராவதற்கு ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

காந்தி ஆஷ்ரம மோசடி...காந்தியின் கொள்ளு பேத்தி தென்னாபிரிக்காவில் மோசடி வழக்கு

A 45-year-old great- granddaughter of Mahatma Gandhi has been accused of defrauding two businessmen of more than $ 830,000 in South Africa.
காந்தியின் கொள்ளுப் பேத்தி மீது மோசடி வழக்கு காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆஷிஸ் லதா ராம்கோபின்(45) மீது ரூ.5 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னாப்ரிக்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகச் சேவை தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த லதா, இரண்டு உள்ளூர் பணக்காரர்களிடம், சில மருத்துவமனைகளுக்குத் தேவையான படுக்கைகள் இந்தியாவில் இருந்து வந்திருப்பதாகவும், அதற்கு சுங்கவரிக் கட்ட நிதியுதவி தேவை எனக் கூறி பணத்தை பெற்றுள்ளார்.

கேரள உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய தமிழக தொழிலாளர்கள்: அரசியல் கட்சியினர் அதிர்ச்சி

ஆர்.சௌந்தர்:கேரள உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட தமிழக தோட்டத் தொழிலாளர்கள் அதிக அளவில் களம் இறங்கி உள்ளதால், அம்மாநில அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள உள்ளாட்சித் தேர்தல் வருகிற நவ. 2, 5-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இடுக்கி மாவட்டத்தில் நவ. 2-ல் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு தொடுபுழா நகராட்சியில் 35 வார்டுகள், கட்டப்பனை நகராட்சியில் 34 வார்டுகள் என 69 வார்டுகள் மற்றும் மூணாறு, தேவிகுளம், சின்னகானல், சாந்தம்பாறை உள்ளிட்ட 52 ஊராட்சிகளில் 792 வார்டுகளுக்கு 1,453 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் : பெண்கள் முகத்திரை அணியவேண்டியத்ல்லை ..அது அவரவர்கள் சுதந்திரம்...

பாகிஸ்தானில் அரசினுடைய அங்கீகாரம் பெற்ற இஸ்லாமிய அமைப்பு, இஸ்லாமிய விதிகளின்படி, பெண்கள் முகத்திரை அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது. மவுலானா முகமது கான் ஷெரானியின் தலைமையில் நேற்று இஸ்லாமிய சித்தாந்த கவுன்சிலைச்(CII) சேர்ந்த முக்கியஸ்தர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஷெரானி, "முகம், கை மற்றும் பாதங்களை மறைப்பது இஸ்லாமிய பெண்களுக்கு கட்டாயம் கிடையாது" என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் இத்தகைய நெறிமுறைகளை கடைபிடிப்பது சமூகத்தில் கவனமான அணுகுமுறையோடு இருக்க உதவும் என்றும் குறிப்பிட்டுள்ள இவர், ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருந்தால் முகம் மற்றும் முழு உடலை மறைப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார். மாலைமலர்.com

நடிகர் சங்கம்..யானை புலி சிங்கத்தைஎல்லாம் அடித்து வீழ்த்திய பூச்சியின் (முருகன்)கதை!

சரத்குமாரை வீழ்த்திய பூச்சியின் கதை!‘‘யானை, சிங்கம், புலிக்கு எல்லாம் நான் பதில் சொல்வேன். ஆனால், பூச்சிக்கு பதில் சொல்ல முடியாது’’ - 2012 நவம்பர் 28 ஜூனியர் விகடன் இதழுக்கு பேட்டி அளித்தபோது, ராதாரவி இப்படி பகிரங்கமாகச் சொன்னார்! அந்த பூச்சி முருகனின் கதை இது.
‘‘பூச்சி முருகன் சங்க நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது. அவர் பொதுக்குழுவுக்கு வரக் கூடாது” என தடை விழுந்தபோது சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் போனார் பூச்சி முருகன். ‘பொதுக்குழுவுக்குச் செல்லலாம்’ என நீதிமன்றம் அனுமதி வழங்கியவுடன் போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழுவுக்குப் போனார். அப்போதும் தடுத்து நிறுத்தப்பட்டார். விஷால் தனது ஒவ்வொரு பேட்டியின்போதும், ‘‘பூச்சி முருகன் கேட்கும் கேள்விக்கு சரத்குமாரின் பதில் என்ன?” என்று கேட்டு வந்தார். ராகவேந்திரா மண்டபத்தில் சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாசர், பூச்சி முருகனை மேடைக்கு அழைத்தார். ‘‘இவர்தான்  பூச்சி முருகன். நம்முடைய பாண்டவர் அணி உருவாக இவர்தான் காரணம்” என்று சொல்லி கெளரவப்படுத்தினார்.
மிகச் சாதாரணமாக நடிகர் சங்கத்துக்குள் நடந்த விஷயத்தை தனி ஓர் ஆளாகக் கிளப்பி, அதற்கு முக்கிய நடிகர்கள் அனைவரையும் திருப்பி... சரத்குமார், ராதாரவி டீம் தோல்வியைத் தழுவக் காரணமாக இருந்துள்ளார் பூச்சி முருகன்.

ஆப்பிரிக்காவில் 8,300 செல்போன் டவர்களை விற்ற ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனமாக இருந்து வரும் ஏர்டெல் நிறுவனம் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொலைதொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.68,134 கோடி நிகர கடன் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கடனை சரிகட்டும் விதமாக ஆப்பிரிக்காவில் உள்ள 7 நாடுகளில் ஏர்டெல்லுக்கு சொந்தமான சுமார் 8,300 செல்போன் டவர்களை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், அவற்றை விற்பனை செய்ததை இன்று உறுதிப்படுத்தியுள்ளது ஏர்டெல். ஆப்பிரிக்காவில் மட்டும் 14 ஆயிரம் செல்போன் டவர்கள் ஏர்டெல்லுக்கு இருக்கிறது. இது ஏர்டெல்லின் மொத்த டவர் எண்ணிக்கையில் 60 சதவீதமாகும். டவர் பிசினஸில் இருந்து வெளியேற முடிவு செய்ததால் ஏர்டெல் 8,300 டவர்களை விற்றுள்ளது.

கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி ! Justin Trudeau பிரதமராகிறார்..கன்சர்வேடிவ் ஆட்சி முடிவு!

டொரண்டோ: கனடாவில் 9 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இங்கு லிபரல் கட்சி புதிய அத்தியாயத்தை உருவாக்குகிறது. மாற்றம் வேண்டி மக்கள் இந்த கட்சிக்கு ஓட்டளித்துள்ளதாக கனட நாட்டு பத்திரிகைகள் கூறுகின்றன. லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ருதா கனடாவின் புதிய பிரதமராகிறார் . கனடாவில் நடந்த பார்லி., தேர்தல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. முழு முடிவுகள் நாளைக்குள் வந்து விடும். இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, எதிர் கட்சியான லிபரல் கட்சி, இடது சாரியான என் டி பி கட்சி மற்றும் சில உதிரி கட்சிகள் போட்டியிட்டன . ஓட்டு எண்ணிக்கையில் லிபரல் கட்சி 185  தொகுதிகளில் வெற்றி . கன்சர்வேடிவ் கட்சி 99 தொகுதி, . இடது சாரியான என் .டி .பி., கட்சி 44 தொகுதிகளில் முறையே வெற்றி பெற்றுள்ளது.

ராஜா சொத்து குவிப்பு வழக்கு: சி.பி.ஐ.,க்கு திடீர் நெருக்கடி

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீதான வழக்கை துரிதப்படுத்தும்படி, சி.பி.ஐ.,க்கு மேலிடத்தில் இருந்து, நெருக்கடி கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க.,வைச் சேர்ந்தவர் ஆ.ராஜா. அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக, 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பாக, ராஜா, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில், ஆகஸ்ட், 20ல் சோதனை நடந்தது. சென்னை, பெரம்பலுார், டில்லி, திருச்சி, கோவை உட்பட, 17 இடங்களில் நடைபெற்ற அதிரடி சோதனையில், 200க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள், 6.5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும்படி, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தற்போது நெருக்கடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ராசாவையும் கனிமொழியையும் எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்ற ரேஞ்சுக்கு வந்துள்ளார்கள் இதைதான் காங்காரு நீதி என்று சொல்வது.

கனடா தேர்தலில் ஆனந்தசங்கரி வெற்றி ! பாராளுமன்ற தேர்தலில்....லிபரல் கட்சியின்...



19 அக்டோபர். நடந்து
முடிந்த கனடிய பாராளுமன்ற தேர்தலில் புதிய லிபரல் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. புதிய அரசை அமைக்கபோகும் லிபரல் கட்சியின் எம்பியாக  சத்தியசங்கரி  ஆனந்தசங்கரி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இவர் பழம்பெரும் ஈழத்தமிழ் தலைவரும் TULF கட்சியின் தலைவருமான வீரசிங்கம்  ஆனந்தசங்கரியின் புதல்வராவார். இவர் நிச்சயமாக அமைச்சராவார் என்று நம்ப படுகிறது,

சிறுமியரை கற்பழித்தால் தூக்கு தண்டனை? ஆம் ஆத்மி அறிவிப்பு!

புதுடில்லி:சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, துாக்கு அல்லது ஆயுள் தண்டனை அளிக்கலாமா என ஆய்வு செய்ய, உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.அதிர்ச்சி அலை...டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு, இரண்டு பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.'டில்லி காவல் துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் தான், இதுபோன்ற சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. காவல் துறையை, டில்லி மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்' என, கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார்.

ஸ்டாலின்:எம் எல் ஏக்களை மக்களே பதவிநீக்கம் செய்யும் சட்டம் கொண்டுவருவோம்!

விருத்தாசலம்:''தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மக்களை சந்திக்காத மக்கள் பிரதிநிதிகளை, மக்களே பதவி நீக்கம் செய்யலாம் என, சட்டம் கொண்டு வர உறுதியாக உள்ளோம்'' என, ஸ்டாலின் கூறினார்.
'நமக்கு நாமே' சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில், மகளிர் சுய உதவிக் குழுவினர் மத்தியில் பேசியதாவது: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறிய, பெண்களுக்கு, 25 சதவீத மானியத்துடன், 1 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் என்ன ஆனது.

திங்கள், 19 அக்டோபர், 2015

சென்னை IIT யில் கேரளா மாணவன் தற்கொலை..30 ஆண்டுகளில் 68 IIT மாணவர்கள் தற்கொலை

சென்னை ஐஐடி-யில் மாணவர் ஒருவர் தனது ஹாஸ்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவர் சென்னை ஐஐடி-யில் எலக்ட்ரீகல் என்ஜினீயரிங் நான்காம் ஆண்டு படித்து வந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவரின் கடைசிக் கடிதம் எதுவும் இதுவரை மீட்கப்படவில்லை.அம்மாணவரின் பெற்றோர் கேரளாவில் கொல்லத்தில் வசித்து வருகின்றனர். இன்று இரவுக்குள் அவர்கள் சென்னை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த மாதம் ஆந்திராவைச் சேர்ந்த 23 வயது சென்னை ஐஐடி மாணவர் நாகேந்திர ரெட்டி, தனது ஹாஸ்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார். வேலை கிடைக்காத மனவிரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

நடிகர் சங்கம்- எஸ்பிஐ சினிமாஸ்" ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம் ! சரத்குமார் அறிவிப்பு! too late too little..

சென்னை: சர்ச்சைக்குரிய நடிகர் சங்கம்- எஸ்பிஐ சினிமாஸ் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகம் கட்டுவதற்கு எஸ்பிஐ சினிமாஸுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக நடிகர்கள் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி குற்றம்சாட்டி வந்தது.  தற்போது நடைபெற்று முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் இதுதான் பிரதான பிரச்சனையாகவும் இருந்தது. நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற விஷால் அணியினர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 15 ஆண்டுகளாக நடிகர் சங்கத்துக்காக பாடுபட்டுள்ளேன். 2004ல் ரூ 4.2 கோடியாக இருந்த நடிகர் சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டது.

சுபவீ :நடிகர் சங்க வங்கிக் கடன் மூன்றைக் கோடி ரூபாய் தள்ளுபடி..ஏழை விவசாயி கடன்........

இன்று (18.10.2015) காலை 7 மணியிலிருந்து, நடிகர் சங்கத் தேர்தலைச் சில தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பிக் கொண்டுள்ளன. இது தேவையற்றது என்று சொல்வதை விட இப்படி ஒரு அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்வதே சரியானது. 3159 வாக்காளர்களைக் கொண்ட ஒரு சங்கத் தேர்தலை, தமிழ்நாட்டில் வாழும் ஏழரைக் கோடித் தமிழர்களின் தலையாய பிரச்சனை போலக் காட்டுவது எவ்விதத்திலும் அறம் ஆகாது! திரைப்படக் கலைஞர்களை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களுக்குரிய இடம் அளிக்கப்படுவதில் நமக்கு ஒன்றும் வெறுப்போ வேதனையோ இல்லை. ஆனால், நாட்டில் நடக்கும் எதனையும் பற்றிக் கவலைப்படாமல், காலையிலிருந்து இரவு வரை, ஒரு சங்கத் தேர்தலை மக்கள் ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம், துப்புரவுத் தொழிலாளார்கள் சங்கம் என்று நாட்டில் ஆயிரம் சங்கங்கள் இருக்கின்றன. அங்கும் தேர்தல்கள் நடக்கின்றன.

பாண்டவர் அணி பெருவெற்றி! முக்கிய பதவிகள் அனைத்தையும் கைப்பற்றியது.

சினிமா நடிகர்கள் சங்கத் தேர்தலில் அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் கைப்பற்றியது விஷால் அணி. கடைசியாக அறிவிக்கப்பட்ட நடிகர் சங்க துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் விஷால் அணியைச் சேர்ந்த கருணாஸும், பொன் வண்ணனும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் சரத்குமார் அணியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் சிம்புவைத் தோற்கடித்துள்ளனர். இந்தத் தேர்தலில் கருணாஸ் 1362 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்த விஜயகுமார் 1115 வாக்குகள் பெற்றுத் தோற்றார். பலரும் பெரிதும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிம்பு இந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்தார். அவர் 1107 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

விஷால், நாசர், கார்த்தி வெற்றி ! ஒற்றுமையாக செயல்படுவோம் என சரத்குமார் ராதாரவி அறிவிப்பு!


 நடிகர் சங்க தேர்தலில் நாசர் வெற்றி பெற்று தலைவர் ஆனார். சரத்குமார் தோல்வியுற்றார்.தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.  நேரடியாக 1,824 வாக்குகள் பதிவாகின. தபால் மூலம் 783 வாக்குகள் பதிவாகின.   மொத்தம் 2, 607 வாக்குகள் பதிவாகின.பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1334  வாக்குகள் பெற்று வெற்றி பெற்று, நடிகர் சங்க தலைவர் ஆனார்.  சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரத்குமார் 1225 வாக்குகள் பெற்று தோல்வி பெற்றார்.பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1376 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  ராதாரவி 1085 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். nakkheeran.in

விஷால் வெற்றி !1445 வாக்குகள் !நாசர் வெற்றி !1331 ! வாக்குகள் ! தோல்வியை ஒப்புகொள்கிறோம் ..ராதாரவி!

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவி தவிர்த்த அனைத்துப் பதவிகளிலும் சரத்குமார் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் சரத்குமார் அணியின் வேட்பாளர்களே அனைத்துப் பதவிகளிலும் முன்னிலை வகித்தனர். குறைந்தது 200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். மொத்தம் 821 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் நேரடி வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்ட உடனே விஷால் அணியினர் முன்னிலை வகிக்க ஆரம்பித்தனர். தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் மட்டும் சரத்குமார் முன்னிலை வகிக்கிறார். பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் அணியின் கார்த்தி முதலில் பின்தங்கியிருந்தார்.

விஷால் 961 ராதாரவி 824 ! சரத்குமார் - 507 வாக்குகள்... நாசர் 301 வாக்குகள்

சரத்குமார் முன்னிலை! தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நேரடியாக 1,824 வாக்குகள் பதிவாகின. தபால் மூலம் 783 வாக்குகள் பதிவாகின. மொத்தம் 2, 607 வாக்குகள் பதிவாகின. மாலை 5. 30 மணிக்கு மேல் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இரவு 8.50 மணி நிலவரப்படி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் சரத்குமார் - 319 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். 175 வாக்குகள் பெற்று நாசர் பெற்றுள்ளார்.

City of Joy அந்த சேரியில்...அழகான மனிதம்...வெடித்த ஒரு புரட்சி! Patrick Swayze, Om Puri and Shabana Azmi.

City of Joy ஒரு இளம் அமெரிக்க டாக்டருக்கு  ஆபரேஷன் தியேட்டரில் கிடைத்த ஒரு அதிர்ச்சி! ஒரு   சிறுவனுக்கு ஆபரேஷன் செய்தார் ஆனால் அவன் கண்முன்னேயே இறந்துவிட்டான். சோகம் தாங்க முடியாத அந்த டாக்டர் (Patrick Swayze) ஒரு ஆத்மீக தேடலை நோக்கி இந்தியா வருகிறார், அதுவும் கல்கத்தாவுக்கு.
அங்கே அவர் கண்டது சந்தித்தது.....ஆத்மீகம் தேடியவருக்கு கிடைத்தது ஏமாற்றம் ..துன்பம்... துரோகம்.. வறுமை.
அவரை சிந்திக்கவே விடாமல் விதி  கல்கத்தாவின் சேரியில் கொண்டு போய் சேர்த்துவிட்டது.
கையில் உள்ள காசையும்  பாஸ்போர்ட்டையும் பறித்துக்கொண்டு அடித்து நொறுக்கியது குண்டர் கூட்டம்.
பிகாரில் கந்துவட்டி காரரிடம் தனது நிலத்தை பறிகொடுத்துவிட்டு பஞ்சம் பிழைக்க வந்த ஹன்சாரியும் அவனது மனைவியும்  மட்டுமே கூக்குரல் கேட்டு ஓடி வந்தனர் நினைவு மயங்கி இருந்த டாக்டர் மக்சை தங்களது குடிசைக்கு தூக்கி சென்று ஒரு வெள்ளைக்கார நர்சிடம் Joan Bethel சேர்த்தனர். மனித வாழ்வின் அவலத்தை கண்டு அதை விட்டு விலகி விடஎண்ணியவருக்கு அது முடியவில்லை.அவரின் சேவை அங்கு மிகவும் தேவையாக இருந்தது. அதையும் விட அந்த மக்களின் வாழ்வோடு அவரை அறியாமலேயே அவர் கொஞ்சம் நெருங்கிவிட்டார்.
அந்த மக்கள் கொடூரமான முதலாளிகளினதும் மக்களை பற்றி கொஞ்சம் கூட கவனிக்காத அரசாங்கங்களின் பாராமுகத்தாலும் ஒரு பிராணிகள் போன்று அந்த சேரியில் வாழ்ந்தார்கள்.
அந்த அப்பாவி மக்களின் அன்றாட வாழ்வில் மெல்ல மெல்ல இவரின் பங்கு கூடி கொண்டே வந்தது.  பார்பதற்கு பயமூட்டும் அளவு உருக்குலைந்து போயுள்ள தொழு நோயாளர்களும் அதைவிட பயங்கரமான அந்த கொடூர தாதாவும்.... இதயம் பலவீனமாக உள்ளவர்களால் பார்க்கவே முடியாத அளவு கொடூர காட்சிகள்.

சாருஹாசன்: தமிழனை நடிகர் சங்கம் எப்பவாவது மதித்துள்ளதா? தமிழ்நாட்டில் சினிமா ஆட்சி நடக்கிறது..இனி கிரிகெட்டு ஆட்சி நடக்கும்..

சென்னை: தேர்தல் என்ற பெயரில் நடிகர் சங்கத்தினர் இரண்டாகப் பிரிந்து, பிளந்து அடித்து நாறிக் கொண்டுள்ள நிலையில் நடிகர் சங்கத்தைப் போட்டு வறுத்தெடுத்திருக்கிறார் நடிகர் சாருஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சாருஹாசன். தமிழில் நடித்ததை விட பிற மொழிப் படங்களில் இவர் நடித்ததே அதிகம். அதற்கான காரணத்தையும் சேர்த்து விலக்கி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார் சாருஹாசன். இதுகுறித்து சாருஹாசன் எழுதியுள்ளதாவது... நான் நடிகர் சங்கத்தின் ஆயுள் சந்தாதார். ஆனால் சங்க தேர்தலில் ஓட்டு போட செல்லவில்லை. யார் அழைக்கிறார்கள்? அவர்கள் என்னை ஒரு நடிகனாக எற்று கொண்டதில்லை. நானும் சினிமாவை இந்தியனின் பெருமையை வளர்க்கும் ஒரு சமூக நல தொண்டு நிறுவனமாக கருதுவதில்லை. வக்கீல் தொழில் செய்யும்போது ஒரளவு ஆங்கிலம் பேசியது தொழில் வளர்ச்சிக்காக. அதை தவிர எனக்கு தமிழ் ஒன்றுதான் பேசத் தெரியும். ஆனாலும் தமிழ் சினிமாவில் நடிக்க நான் அழைக்கபட்டதே இல்லை.

உலகின் முதல் கார் வடிவிலான வாகனம்-500 கிலோ மீட்டர்...விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் மகன்!

சென்னை, அக்.18_ உலகின் முதல் கார் வடிவில் தயாரிக்கப்பட்ட வாகனம் கோவை- _ சென்னை இடையே 500 கிலோ மீட்டர் கடந்து சாதனை படைத்துள்ளது.
உலகில் முதன் முதலாக 1886- ஆம் ஆண்டு இயந்திரத்தின் மூலம் இயங்கும் வாகனத்தை ஜெர்மனி நாட்டின் கார்ல் பென்ஸ் என்ற பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்தார். 3 சக்கரங்களைக் கொண்ட இந்த வாகனத்தில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். தமிழகத்தின் பிரபல விஞ்ஞானியான மறைந்த ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி.கோபால் 1886 ஆ-ம் ஆண்டில் முதலாவதாக தயாரான அந்த கார் வடிவிலான ஒரு வாகனத்தைத் தயாரித்தார். அந்த வாகனத்தின் 500 கிலோ மீட்டர் தூர சாதனைப் பயணம் கோவையில் உள்ள ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்தில் இருந்து கடந்த 14- ஆம் தேதி மாலை தொடங்கியது. இந்த வாகனம், ஈரோடு, சேலம், விழுப்புரம் வழியாக நேற்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்தடைந்தது.

தமிழ் நடிகர் சங்கம்...பயந்து போன ரஜினியும் கமலும் முறையே தமிழ்நாடு நடிகர்...இந்திய நடிகர்..Blah Blah Blah....

தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை எங்கே தமிழ் நடிகர் சங்கம்  என பெர்யர் மாற்றி விடுவார்களோ என்று ரஜினி பயந்து அவசரம் அவசரமாக தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் வைக்கவேண்டும் என்கிறார், இதே பயத்தில் கமலஹாசனோ ஒரு படி மேலே போயி இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் வைக்கவேண்டும் என்கிறார். மகளின் மார்கெட் வடக்கில் கொடிகட்டி பறக்கிறது பின்னே...சினிமா ரசிகன் மட்டும் தமிழனாக இருக்கட்டும் மிச்சம் மீதி எல்லாம்..... தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே வாக்குச்சாவடிக்கு நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை கௌதமியுடன் வாக்களிக்க வந்த நடிகர் கமல்ஹாசன், தென்னிந்திய நடிகர் சங்கம், இந்திய நடிகர் சங்கமாக வேண்டும் என வலியுறுத்தினார்.

ஸ்ம்ரிதி இரானியிடம் இருந்து எம்.பி.ஏ. பட்டத்தை வாங்க மறுத்த இளைஞர்!

ஸ்ரீநகர்: இந்தியாவில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதைக் கண்டித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் இருந்து எம்.பி.ஏ. பட்டம் வாங்குவதற்கு காஷ்மீர் இளைஞர் ஒருவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். கன்னட எழுத்தாளர் கால்புர்கி கொலை, தாத்ரி சம்பவம் மற்றும் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் மும்பை நிகழ்ச்சி ரத்து உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும் கூறி எழுத்தாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த விருதை திருப்பி அனுப்பி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா வருகின்ற 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதைக் கண்டித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் இருந்து எம்.பி.ஏ. பட்டம் வாங்குவதற்கு காஷ்மீர் இளைஞர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

கஸ்தூரி கை துண்டிப்பு: சவுதி புது கதை அளக்கிறது!

ரியாத்:'தமிழகத்தைச் சேர்ந்த கஸ்துாரி என்ற பெண், மாடியில் இருந்து குதித்து, தப்ப முயன்றபோது தான் கையை இழந்தார்; அவர் கையை வெட்டவில்லை' என, சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.வேலுாரைச் சேர்ந்த கஸ்துாரி முனிரத்தினம், 56, என்ற பெண், சவுதி அரேபியாவுக்கு, வீட்டு வேலை பார்க்க சென்றிருந்தார். அங்கு, பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான அவர், அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அதை தடுக்க நினைத்த, கஸ்துாரி வேலைபார்த்த வீட்டின் எஜமானி, கஸ்துாரியின் கையை வெட்டியுள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கஸ்துாரி, அங்குள்ள ஊழியர்களின் துணையுடன், தனக்கு நேர்ந்த கொடுமையை, 'வாட்ஸ் அப்' மூலம், தமிழகத்தில் உள்ள தன் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.  Saudi Arabia " - வை சொந்த தாய் நாடு போல இங்கு வந்து பீலா விடுபவர்களிடம் கேளுங்கள். மெத்த படித்த மேதவிகள், ஈரான் , இராக் என எந்த நாடாக இருந்தாலும் அவர்களின் பார்வையில் பிழைக்க வந்தவர்கள்தான். இவர்களின் நிலைமை கேட்கவே வேண்டாம்.