வியாழன், 22 அக்டோபர், 2015

மதுவால் தமிழகம் சீரழிகிறது: நக்மாவின் கவலை.. பாவம் விஜயதரணி....

தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் எஸ்.விஜயதாரணி, காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் நக்மா | படம்: க.ஸ்ரீபரத் ஒருபக்கம் இலவசங்களை கொடுக்கும் தமிழக அரசு, மறுபக்கம் மது விற்பனை செய்கிறது. மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது" என்று மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா கவலை தெரிவித்து குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நக்மா இன்று வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, "முதல்வர் ஜெயலலிதா மீது மரியாதை வைத்துள்ளேன். ஆனால், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, குடிநீர், மின் பற்றாக்குறை என தமிழகம் மோசமான நிலையில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.  அடடே அப்படிங்களா வேற என்னன்னா இல்லை என்கிறதை  விலாவாரியா சொல்லுங்க மேடம் ...
ஒருபக்கம் இலவசங்களை கொடுக்கும் தமிழக அரசு, மறுபக்கம் மது விற்பனை செய்கிறது. மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது. புள்ளிவிவரங்களின்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகமாக உள்ளனர். இதற்கு மதுவே காரணம். இவற்றையெல்லாம் ஒரு பெண்ணாக முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். குஷ்பு உள்ளிட்ட தமிழக தலைவர்களுடன் இணைந்து தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த பாடுபடுவேன்.
தலித்களுக்கு எதிரான வன்முறை நாடெங்கும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹரியாணாவில் 2 தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இதுபோன்ற கொடுமைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்" என்றார் நக்மா.
அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் எஸ்.விஜயதாரணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர் /tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக