திங்கள், 19 அக்டோபர், 2015

நடிகர் சங்கம்- எஸ்பிஐ சினிமாஸ்" ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம் ! சரத்குமார் அறிவிப்பு! too late too little..

சென்னை: சர்ச்சைக்குரிய நடிகர் சங்கம்- எஸ்பிஐ சினிமாஸ் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகம் கட்டுவதற்கு எஸ்பிஐ சினிமாஸுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக நடிகர்கள் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி குற்றம்சாட்டி வந்தது.  தற்போது நடைபெற்று முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் இதுதான் பிரதான பிரச்சனையாகவும் இருந்தது. நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற விஷால் அணியினர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 15 ஆண்டுகளாக நடிகர் சங்கத்துக்காக பாடுபட்டுள்ளேன். 2004ல் ரூ 4.2 கோடியாக இருந்த நடிகர் சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டது. விஜயகாந்த் தலைவராக இருந்போது கடன் அடைக்கப்பட்டு ஒரு கோடி வைப்பு நிதி திரட்டப்பட்டது. 2007ல் கலைநிகழ்ச்சி நடத்தி சங்கத்துக்கு ரூ.2 கோடி வைப்பு நிதி திரட்டப்பட்டது. தற்போது நடிகர் சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூ.3 கோடி உள்ளது நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்குகள் 10 நாட்களில் நாசரிடம் ஒப்படைத்துவிடுவேன். என் மீது பல்வேறு முறைகேடுகள் முன்வைக்கப்பட்டது மிகவும் காயப்படுத்திவிட்டது. இதனால் கடந்த செப்டம்பர் 29-ந் தேதியன்றே எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நடிகர் சங்கத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம். இந்த ஆவணத்தையும் நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கொடுத்துவிடுவேன். சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு எந்த நேரத்திலும் உதவுவதற்கு தயாராக இருக்கிறேன். இவ்வாறு சரத்குமார் கூறினார். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை முன்னரே வெளியிட்டிருந்தால், ஊழல் முறைகேடு செய்ததால் ரத்து செய்துவிட்டோம் என விமர்சனம் வந்திருக்கும் என்பதால் வெளியிடவில்லை என்றும் விளக்கம் அளித்தார் சரத்குமார்

Read more at://tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக