திங்கள், 19 அக்டோபர், 2015

பாண்டவர் அணி பெருவெற்றி! முக்கிய பதவிகள் அனைத்தையும் கைப்பற்றியது.

சினிமா நடிகர்கள் சங்கத் தேர்தலில் அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் கைப்பற்றியது விஷால் அணி. கடைசியாக அறிவிக்கப்பட்ட நடிகர் சங்க துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் விஷால் அணியைச் சேர்ந்த கருணாஸும், பொன் வண்ணனும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் சரத்குமார் அணியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் சிம்புவைத் தோற்கடித்துள்ளனர். இந்தத் தேர்தலில் கருணாஸ் 1362 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்த விஜயகுமார் 1115 வாக்குகள் பெற்றுத் தோற்றார். பலரும் பெரிதும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிம்பு இந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்தார். அவர் 1107 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
ஆனால் அவரை எதிர்த்த பொன்வண்ணன் 1235 வாக்குகள் பெற்று அபார வெற்றிப் பெற்றார்.  இதன் மூலம் நடிகர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர் என அனைத்துப் பதவிகளையும் விஷால் அணி அபாரமாக வென்றுள்ளது. விஷால் அணிக்கு தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி, இந்திய திரையுலகமே வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.

Read more at: ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக